#அம்பேத்கரும்_அவரது_தம்மமும்
- written by #vasumithra
- written by #vasumithra
தோழர் எஸ். பாலச்சந்திரன் கருத்துரை
என்னைப் பொறுத்தவரை இந்த புத்தகம் ஓர் உரைகல்
உண்மையற்ற… அடிப்படையற்ற விஷயங்களை வசுமித்ர உரித்து தொங்கப்போட்டிருக்கிறார்… முடிந்தால் நீங்கள் பதில் சொல்லுங்கள்…
உண்மையற்ற… அடிப்படையற்ற விஷயங்களை வசுமித்ர உரித்து தொங்கப்போட்டிருக்கிறார்… முடிந்தால் நீங்கள் பதில் சொல்லுங்கள்…
ஆதாரங்களோடு பதில் சொல்லுங்கள்… தனிப்பட்ட முறையில் கொச்சையாக தாக்குவது சரியல்ல
மதம் என்பது 21ஆம் நூற்றாண்டில்… ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலையை நோக்கி பயணிக்க வைக்கக் கூடிய கருவிதானா என்று கேட்கிறார்
மதம் என்பது 21ஆம் நூற்றாண்டில்… ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலையை நோக்கி பயணிக்க வைக்கக் கூடிய கருவிதானா என்று கேட்கிறார்
#பௌத்தம் என்று சொல்வீர்களானால்… #புத்தர் துக்கத்தை விலக்கச் சொன்னார்…. #அம்பேத்கர் அதன் அடிப்படையில் பேசுகிறார் என்றால் இன்றைக்கு இருக்கும் துக்கம் என்ன? அதற்கு உங்கள் மார்க்கம் என்ன? அந்த மார்க்கம் இன்று ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலையை நோக்கி நகர்த்துமா?
ஆதாரம்னிறி சொல்லப்பட்ட பதில்களைத்தான் வசுமித்ர கடுமையாக விமர்சிக்கிறார்
இந்த புத்தக அட்டை (காவி) என்ன சொல்கிறதென்றால்… அடையாள அரசியலை யார் பேசுகிறார்களோ… அவர்களோடு உங்களை ஓரணியில் சேர்க்கும் என்கிறார்…
இந்த புத்தக அட்டை (காவி) என்ன சொல்கிறதென்றால்… அடையாள அரசியலை யார் பேசுகிறார்களோ… அவர்களோடு உங்களை ஓரணியில் சேர்க்கும் என்கிறார்…
அம்பேத்கர் #பெரியார் #மார்க்ஸ்… புத்தரையும் இணைக்க வேண்டும் என்றால் எந்த புத்தரை இணைக்கச் சொல்கிறீர்கள்?
ஆதி புத்தரையா… அல்லது கடவுளாக மாற்றப்பட்டு… அவர் சொன்னதாக இவர்களாக பௌத்த தத்துவம் என்று பிரகடனப்படுத்துகிறார்களே அவரையா… அல்லது இந்து மதம் செறித்துக்கொண்ட புத்தரையா அல்லது அம்பேத்கரே முன் வைக்கிறாரே பகுத்தறிவுக்கு விரோதமான ஒரு புத்தரை அவரையா? துயரமாக இருக்கிறது..
புத்தர் ஒரு வரலாற்றுப் பாத்திரம்… அந்த புத்தர் அம்பேத்கரின் புத்தரும் அவர் தம்மமும் நூலில் வரலாற்றுப் பாத்திரமாக கொடுக்கப்பட்டிருக்கிறாரா?
இது வசுமித்ர கேட்கக் கூடிய மிக முக்கியமான கேள்வி. இந்த கேள்விக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்… இல்லை என்பதுதான் உண்மை!
இது வசுமித்ர கேட்கக் கூடிய மிக முக்கியமான கேள்வி. இந்த கேள்விக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்… இல்லை என்பதுதான் உண்மை!
புத்தரை வேறு கோணத்தில் காட்டினார் என்று முத்துமோகன் போன்றவர்கள் எல்லாம் வளைத்துப் வளைத்துப் பேசினார்கள். அம்பேத்கரை வித்தியாசமான கோணத்தில் காட்ட முயற்சித்தார்கள்…
என்ன புத்தர் அவர்? மதத்தை போதிக்கக் கூடிய புத்தரவர். ஆன்மாவில் நம்பிக்கை உடைய… தன்னுடைய அமானுஷ்ய சக்திகளையெல்லாம் வெளிப்படுத்திக்காட்டி… அதன் மூலம் பௌத்தத்தை ஏற்றுக்கொள்ள வைத்த உள்ளுக்குள்ளே சர்வாதிகாரியாக வெளியே ஆண்களே கண்டு மயங்கக் கூடிய அழகராக இருக்கும் புத்தரைத்தான் அம்பேத்கர் முன்வைக்கிறார்!
முதலில் புத்தரும் அவர் தம்மமும் நூலைப் படியுங்கள் தெரியும். பிறகு அம்பேத்கரும் அவரது தம்மமும் படியுங்கள்!
பொருளாயத அடிப்படைகள் தெரியாத காலகட்டத்தில் மக்களுடைய பிரச்சினைகளுக்கு அனுபவபூர்வமாக தீர்வுகான விரும்பிய சிலர் மக்களின் துக்கம் போக்க பேசியதை 2000 வருடம் கழித்தும் பேசினால் இன்றைக்கு எப்படி தீர்வு காண முடியும்?
இதை வைத்து தீர்வு காண முடியும் என்று அம்பேத்கர் சொல்கிறார். இதை மார்க்ஸே சொல்லியிருந்தாலும் உண்மை என்னும் உரைகல்லில் அதை உரசிப் பார்க்க வேண்டாமா?
இயக்கவியல் வழிமுறையை பின்பற்றி சுயமாக சிந்திக்க வேண்டும்… புறவயமான உலகை புறவயமாக ஆய்வு செய்ய வேண்டும்… அதுதான் மார்க்சியம்… இதை செய்யச் சொல்லித்தான் இந்த புத்தகம் சொல்கிறது. அதற்கு விரோதமாக இருக்கும் அத்தனை பேரையும் பட்டியல் போட்டு இவர்கள் இப்படித்தான் பேசினார்கள் என்று அருமையானதொரு முன்னுரை இருக்கிறது இந்த நூலில்...
அடையாள அரசியல் முன்வைக்கும் போலித்தனமான வாதங்கள்… அதில் இருக்கக் கூடிய அபாயங்களை தகர்க்க.. அதிலே இருந்து மீட்டு ஒடுக்கப்பட்ட மக்களை ஓரணியில் திரட்ட விரும்புபவர்கள் இந்நூலை படிக்க வேண்டும்.
மேலும் கேட்க இக்கானொளியைப் பார்க்கவும்.