Dec 13, 2015

உஷா, லக்ஷ்மி ரவிச்சந்தர், இலக்கியா, வைஷ்ணவி மற்றும் உங்களது உறவுகளுக்கு ஒரு திறந்த மடல்


ஆக்கப்பூர்வமாக வேலை செய்வதை விட்டுவிட்டு பயனற்ற, அதாவது உருப்படாத காரியங்களைச் செய்பவர்களைப் பார்த்து கிராமப்புற பகுதிகளில் “ஏலேய் உருப்படுற வழியப்பாருலே “பு..டை” நாயம் பேசிட்டு திரியுறவ” என்று சொல்வார்கள். ஓர் உயிரை பிறப்பிக்கும் பெண்ணின் உடல் உறுப்பிற்கு இந்த ஆணாதிக்க சமூகத்தில் இவ்வளவுதான் மரியாதை என்றோ அல்லது பெண் பித்து பிடித்து அலையாமல் வாழ்க்கையில் உருப்படும் வழியைப் பார் என்றோ சொல்வதாகவும் நாம் அதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால், இன்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் “பு..டை” நியாயம் பேச வைத்த பெருமை உங்கள் மகன்கள் மற்றும் சகோதரர்களாகிய அனிருத்துக்கும், சிம்புவுக்கும் போய்ச் சேரும்.

இதை எண்ணி உண்மையில் நீங்கள் பெருமைப்பட வேண்டும். ஏனென்றால் ஒட்டுமொத்த தமிழகமும் மழை வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டும், உயிரையும் உடைமையையும் இழந்தும் துன்புருகையில் இவர்கள் “பு..டை” ஆராய்ச்சி செய்திருப்பதோடு, ஒட்டுமொத்த தமிழகத்தையும் அவ்வாராய்ச்சியில், அதாவது அந்தச் சொல் உண்மையில் எதைக் குறிக்கிறது எனும் ஆராய்ச்சியில் ஈடுபட வைத்துள்ளார்கள். அடடா! ஆண் சமூகத்திற்கு அவர்கள் ஆற்றியிருக்கும் இம்மாபெரும் தொண்டைநினைத்து நீங்கள் நிச்சயம் பெருமைப்பட வேண்டும்.

மாண்புமிகு அம்மாக்களே, சகோதரிகளே,

உங்கள் மகண்களும், சகோதரர்களும் பாடி இசையமைத்து ‘லீக்’ ஆகிவிட்டதாகச் சொல்லப்படும் பீப் பாடலை நீங்களும் கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நாடும் நாட்டு மக்கள் உணவுக்கும், உயிருக்கும், இருப்பிடத்திற்கும் செத்துப் பிழைக்கும் வேளையில் உங்கள் மகன்கள் மற்றும் சகோதரர்களாகிய அனிருத்துக்கும், சிம்புவுக்கும் தலை போகும் பிரச்சினையாக எது இருக்கிறது? “என்னா பு..டைக்கு லவ் பண்ணுகிறோம்” என்பதுதான். இதைத் தெளிவு படுத்தும் கடமை பு..டையோடு பிறந்த அனைத்துப் பெண்களுக்கும், குறிப்பாக பு..டையின் வழியாக அவர்கள் இருவரையும் ஈன்ற தாய்மார்களாகிய உங்களுக்கும் இருப்பதாக நான் எண்ணுகிறேன்.

அதன் முதல் பகுதியாக, பு…டை என்று பொறுக்கிகள் உடைத்து சொல்லியிருக்கும் அந்தச் சொல்லின் எழுத்தாக்கம் புண்டை என்பதாகும். அச்சொல்லின் பொருளை அவ்வுறுப்பைக் கொண்டவர்களாகிய நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். பெண்ணின் பிறப்புறுப்பான புண்டை க்கு  தமிழில் அல்குல்*, யோனி, பாலுறுப்பு என்று பல்வேறு சொற்கள் உள்ளன. ஆனால் இந்த புண்டை என்ற சொல்லானது ஒரு வசைச் சொல்லாக, அதிலும் குறிப்பாக பெண்களை இழிவுபடுத்தும் விதமாகத்தான் பயன்படுத்தப்படுகிறது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள், இல்லையா? ஆங்கிலத்தில் இச்சொல்லை  cunt என்பார்கள், உலகளாவிய அளவில் அச்சொல் வசைச்சொல்லாகத்தன் பயன்படுத்தப்படுகிறது. ஆணாதிக்க சமூகம் அதை அப்படித்தான் பயன்படுத்தும், ஆனால் ஒரு பெண்ணாக அந்த அல்குலின் மகத்துவத்தை நீங்கள் அறிவீர்கள்தானே. அறிந்து என்ன பயன், பிள்ளைகளுக்கு அதைச் சரியாக சொல்லிக் கொடுத்து வளர்க்கத்  தவறிவிட்டீர்கள் போலும், ஆகவே இப்போது உங்களுக்கும் சேர்ந்த புண்டையுள்ள அனைத்து தமிழ்நாட்டுப் பெண்களும் பாடம் எடுக்கும் நிலை வந்துவிட்டது.

முதலில்,

உஷா, அப்பாடல் குறித்து உங்கள் மகனாகிய சிம்பு என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? (படிக்க: http://tinyurl.com/hbl8b8pநாங்கள் தனிப்பட்ட முறையில் இசையமைத்து வைத்திருந்தோம் அது லீக் ஆகிவிட்டது என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். உங்கள் மகனுக்கு பண்பு இருக்கிறதோ இல்லையோ நல்ல சாதுரியம் இருக்கிறது. (ஆனால் அதுவும் அரைகுறை என்பதைப் பின்னர் பார்ப்போம்). போகட்டும்! அவர் சொன்னது போல் அது அவரது படுக்கையறைக்குள் மட்டுமே ஒலித்திருந்தால் இன்று தமிழகம் புண்டை நியாயம் பேச வேண்டி வந்திருக்காது. ஆனால், இப்போது (திட்டமிட்டோ, திட்டமிடாமலோ) அவரது படுக்கையறையில் அவரும் அனிருத்தும் சேர்ந்து சுய-மைதுனம் செய்த முனகல்கள் தெருவுக்கு வந்துவிட்டது. சுய-மைதுனம் தவறில்லை என்றாலும், அச்செயலினால் வெளிவந்த விந்துவை அவர்கள் ஒரு குப்பியில் பிடித்து ஜன்னலுக்கு வெளியே கசியும்படி வைத்ததன் விளைவாக, அதிலிருந்து தெரிக்கும் அமில விந்துவானது இன்று விசம் போல் பரவி ஏற்கணவே ஆணாதிக்க சிந்தனைகளால் செல்லறித்துப் போயிருக்கும் பல ஆண்களின் மூளையை மேலும் விஷமாக்கிவிட்டதுஇனி தெருவில் நடக்கும் ஒவ்வொரு பெண்களையும் பார்த்து ஆண்கள் அந்த அமிலத்தைக் கக்குவார்கள் என்பதாலும் நாங்கள் பேச வேண்டியுள்ளது.


சிம்பு வேறொன்றும் கேட்டிருக்கிறார், “என்னைக் கேள்வி கேட்பவர்கள் வீடுகளில் நான் கேமராவை வைத்து அவர்கள் பண்ணும் விஷயங்களைப் பார்த்து நீங்கள் ஏன் இப்படி எல்லாம் பண்ணுகிறீர்கள்" என்று கேட்டால் என்னவாகும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.” முதலில், அவருடைய வீட்டுப் படுக்கையறையை யாரும் எட்டிப் பார்க்கவில்லை என்றும், அவராக ஜன்னலைத் திறந்து வைத்திருந்தாலே ஒழிய உள்ளே நடப்பது வெளியே தெரியாது என்பதையும் அந்த மரமண்டைக்கு தெளிவுபடுத்துங்கள். மேலும், உங்கள் தவப்புதல்வனுக்கு மற்றொன்றையும் சொல்லிக் கொடுங்கள், ஒருவேளை அவர் சொல்வது போல் யாரோ எட்டிப் பார்த்து ‘கசிய’ விட்டுவிட்டார்கள் என்றே வைத்துக்கொண்டாலும், தனக்கு நேர்ந்த துன்பம் மற்றவருக்கு நேரக்கூடாது என்று எண்ணி, அப்படிச் செய்யாதீர்கள் என்று சொல்வதுமே பண்புள்ள செயலாக இருக்க முடியும்.  மேலும், உண்மையிலேயே அவர் கூற்றில் உண்மையிருக்கும் எனில், நாங்கள் தனிப்பட்ட முறையில் பாடலிசைத்துக் கொண்டிருந்தோம் அது எப்படியோ கசிந்து விட்டது, பெண்களை இழிவுபடுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை, இது ஒரு தனிப்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பு இப்படி ஏதேனும் சொல்லி இருப்பார், ஆனால் திட்டமிட்டு வெளியிட்டு, இதுபோன்ற எதிர்வினைகள் வந்தால் என்ன பதில் சொல்ல வேண்டும் என்று முன்பே பதிலையும் தயாரித்து வைத்திருந்தாரோ  என்றுதான் இப்போது எண்ணத்தோன்றுகிறது. அதிலும், இதுபோன்ற ஆடியோக்களை ‘லீக்’ செய்வதில் உங்கள் மகன் கை தேர்ந்தவர் என்பதை நீங்களே அறிவீர்கள், இல்லையா.

பெண்களைத் தொட்டு நடிப்பது கூட தவறு என்று கருதும் திரு. டி.ராஜேந்தர் அவர்களே, இந்தப் புண்டை பாடல் பற்றியும், தொடர்ந்து உங்கள் மகன் பெண்களை இழிவுபடுத்தும் விதமான வசனங்களையும், பாடல்களையும் கொடுப்பது பற்றி உங்களுக்கு ஏதேனும் கருத்துள்ளதா?

லக்‌ஷ்மி, ராகவேந்தர் நீங்கள் இருவரும் கலைஞர்கள். (அனிருத் யார் என்று ஆராயும் துர்பாக்கிய நிலைக்கு இன்று உள்ளானேன்). அனிருத் தொடர்ந்து இதுபோல் பொறுக்கித்தனமான பாடல்களைப் படைப்பது பற்றி உங்கள் இருவரது கருத்து என்ன? அதிலும் கலை என்பது சரஸ்வதி கடாட்சம், கலை என்பது தெய்வீகமானது என்றெல்லாம் சொல்லும் பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவர்கள் நீங்கள், சொல்லுங்கள் அனிருத் இசையமைக்கும் கொல வெறி, புண்டை பாடல்களும் சரஸ்வதிதேவியின் கடாட்சத்தினால் பிறந்ததுதானா? இதுவும் இசைதான், கலைதான் என்றால் தியாகயைர் தொடங்கி பாலமுரளி கிருஷ்ணா போன்றோர் வரை எவரேனும் இப்படி புண்டைப் பாடல்களை பாடியிருந்தால் சொல்லவும்.  நீங்கள் வணங்கிப் பின்பற்றும் நாட்டிய சாஸ்திரத்தில் இப்படிப்பட்ட பாடல்களும் கலையென எங்கேனும் குறிப்பிடப்பட்டுள்ளதா? இல்லையென்றால், உங்கள் முன்னோர்கள் கலையென்று ஒன்றை வரையறுத்திருக்க, நீங்களும் உங்களது வாரிசுகளும் ஆச்சார அனுஷ்டானங்களை மீறி வேறு ஏதோ ஒன்றை கலை என்று வியாபாரம் செய்கிறீர்கள் என்று நாங்கள் புரிந்துகொள்ளலாமா? உங்கள் மத நம்பிக்கைப்படி இது பாவத்தில் சேர்த்தியா அல்லது புண்ணியத்திலா?

அதேபோல், ராகவேந்தர் ஒரு பேட்டியில் அனிருத்தின் திறமை அந்த கடவுளர்கள் அருள் பாலியது என்றெல்லாம் காலாட்டிக்கொண்டே பெருமை பேசியிருக்கிறார். சொல்லுங்கள், உங்கள் கடவுளர்களும் இப்படி சதா சர்வ காலமும் புண்டை ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள்தானா? யார் அந்தக் கடவுளர்கள், அவர்கள் இசையமைத்த மற்றும் அவர்களது பத்தினிகள் நடனமாடிய புண்டைப் பாடல்கள் இருந்தால் பகிரவும். பார்க்க, கேட்க ஆவலாக உள்ளோம். இருபிள்ளைகளில் எவர் முதலில் பு..டையை வெல்வது எனும் போட்டிகள் நடந்த புராணங்கள் ஏதேனும் இருக்கிறதா?

இத்தருணத்தில் எனக்கொரு வேண்டுகோள் உள்ளது, இப்போது டிசம்பர் மாதம், மன்னிக்கவும், தமிழ்நாட்டுக்கு மட்டும் அது பார்ப்பன ஆதிக்க மாதம். அது எம் தலையெழுத்து, போகட்டும். இந்த மார்கழி மாத குளிருக்கு இதமாக நான் ஒரு கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யவிருக்கிறேன். அதில் ஒப்பனிங் சாங் இந்தப் புண்டை பாடல்தான் இதற்கு லக்‌ஷ்மி நீங்கள் நடனமாட வேண்டும். அதற்கு சம்பளம் எவ்வளவு என்று தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.   அதற்கு முன்னர் எனக்கொரு சந்தேகம், இந்தப் புண்டை எனும் சொல்லுக்கு நீங்கள் எப்படி முத்திரை பிடிப்பீர்கள் என்பதை ஒரு முன்னோட்டமாக உங்கள் அலைபேசியில் படம்பிடித்து வாட்ஸப்பில் அனுப்பினால், அது பொறுத்தமாக இருக்கிறதா இல்லையா என்பதைப் பார்த்து, தேவைப்பட்டால் சில இம்ப்ரூவ்மெண்டுகளை செய்துகொள்ளலாம். அதேபோல் “உண்ணை டார் டாரா கிழிச்சு ஓத்துட்டுப் போனவள” எனும் வரிக்கு நீங்கள் எப்படி அபினயம் பிடிப்பீர்கள் என்றும் ஒட்டுமொத்தமாக அந்தப் பாடலுக்கு எப்படி நடனம் அமைப்பீர்கள் என்றும் பார்க்க ஆவலாக உள்ளது. அதுமட்டுமின்றி “மூடிட்டு சும்மா இரு” என்பதில் எதை மூடச் சொல்கிறார்கள், எப்படி மூடச் சொல்கிறார்கள், ஏன் மூடச் சொல்கிறார்கள் என்பதும் ஐயமாக உள்ளது, இதையெல்லாம் உங்கள் நடனம் மூலம் தெளிவுப்டுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன். முடிந்தால் இதனை ஒரு வீடியோ ஆல்பமாகவும் கொண்டு வருவோம்.

கச்சேரி நடக்கும் அரங்கத்தில் வைஷ்ணவிக்கும், இலக்கியாவிற்கும்தான் முதல் வரிசையில் இடம். விருப்பப்பட்டால் அவர்களும் மேடை ஏறி ஆடலாம். அவர்களுக்குப் பெண் குழந்தை இருப்பின், அல்லது இனி பிறப்பின் அவர்கள் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் இந்தப் பாடலை பாடுவதற்கு நான் வாய்ப்பு வாங்கித் தருகிறேன். ஆனால் அவர்கள் பீப் இன்றி என்னா புண்டைக்கு  லவ் பண்றோம் என்றும், டார் டாரா கிழிச்சு ஓத்துட்டுப் போனவள என்று முழு வார்த்தைகளையும் உடைக்காமல் பாட வேண்டும்.

லதா, நீங்கள் நடத்தும் பள்ளியில் இப்பாடலை தினம் தினம் காலையில் அசெம்ப்ளியில் ஒளிபரப்பி உங்கள் அண்ணன் மகனின் வளர்ச்சிக்கும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் நீங்கள் உதவலாம்.  உங்களது பேத்திகளும் சூப்பர் சிங்கரில் இப்பாடலைப் பாடியோ அல்லது அவர்களை வைத்து இந்தப் பாடலை ஒரு வீடியோ ஆல்பம் செய்வது குறித்தும் நாம் யோசிக்கலாம்.

சிம்புவும், அனிருத்தும் செய்த ஒரு செயலுக்கு எங்களைப் பேசுவதில் என்ன நியாயம் இருக்கிறது? ஆண்கள் செய்யும் தவறுக்குப் பெண்களைப் பழிக்கும் வழக்கமான செயலை நான் செய்ததாக நீங்கள் குற்றம் சாட்டக் கூடும். மன்னிக்கவும், அது போன்ற அறம் சார் அனுகுமுறை உங்களது குடும்பங்களுக்குப் பொருந்தாது என்பதை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். சமூகத்தின் பெரும்பாலான குடும்பத்தில் உள்ள பெண்களின் நிலை போல் அல்ல உங்களது நிலை. ஏனென்றால், உங்கள் மகன்களின் ‘தெய்வீகத் திறன்கள்’ குறித்து கலைக் குடும்பமாக நீங்கள் அனைவரும் பெருமை பேசியுள்ளீர்கள், அவர்களின் படைப்பை கலை என்று நீங்கள் சத்தியம் செய்வதாலும் உங்களிடம் முறையிடுகிறோம்.

மேலும், உங்கள் அனைவருக்கும் திரைத்துறையோடு ஏதோ ஒரு வகையில் தொடர்புள்ளது எனும் அடிப்படையில், திரைத்துறையின் ஆணாதிக்க வக்கிரம் குறித்து உரையாட வேண்டியுள்ளது. ஏனென்றால் ஏற்கனவே ஒரு தலைமுறை செய்த ‘கலைச் சேவை’ பத்தாதென்று அடுத்த தலைமுறையாக சிம்புவும் அனிருத்தும் கலைச் சேவையை கொலை வெறியுடன் ஆற்ற வந்திருக்கிறார்கள். கண்டிப்பாக அடுத்த தலைமுறையையும் நீங்கள் தயார்படுத்தி விடுவீர்கள். அதற்குள்ளாகவாவது கடவுளர்கள் அருள் பாலித்திருக்கும் உங்கள் மூளைகளுக்கு கலையோடு கலையாக சிறிதேனும் சமூகப் பொறுப்புணர்வை ஊட்டிவிட முடியுமா எனும் ஒரு எளிய முயற்சியே இது.

ஆணாதிக்க சமூகத்தின் அனைத்து மட்டங்களும், படைப்புகளும் ஆணாதிக்க சிந்தனயோடே இருக்கும். ஆனால் அதையும் தாண்டி சமூகத்திற்கு விழிப்புணர்வும், அறிவும் ஊட்டும் படைப்புகளையே கலை என்று சொல்ல முடியும், அதுவல்லாத எது ஒன்றும் வியாபாரமே. அந்த வகையில் இந்த திரைத்துறை ஒரு தொழில் நிறுவனம் என்பது நிதர்சனம். அதில் கடைந்தெடுத்த அயோக்கியர்கள்தாம் சிம்பு, அனிருத், தனுஷ் உட்பட பெரும்பாலான கதாநாயகர்கள் மற்றும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள். இந்தப் பட்டியலில் தற்போதைய வரவு நீ எனக்குப் பிட்டுப் படம் என பாடிய ஜி.வி. பிரகாஷ் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று இலக்கணம் படைப்பதில் தொடங்கி பெண்களை பழித்தும், இழிவு செய்தும், ஆதிக்கம் செலுத்தியும், ஆபாசப் பாடல்கள் வழியாக பாலியல் ரீதியாக சுரண்டியும்தான் திரைப்படங்கள்  வெளி வருகின்றன. இதையெல்லாம் பார்க்கும்பொது பெண்களாக நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?  ஐஷ்வர்யா, சௌந்தர்யா என்று உங்கள் குடும்பத்தில் பெண் இயக்குனர்கள் வந்தார்கள் திரைத்துறையின் வக்கிரத்திற்கெதிராக புரட்சிகரப் படைப்புகள் கொடுப்பார்கள் என்று பார்த்தால் அவர்களின் இலட்சியமும் மிகத் தெளிவாக இருக்கிறது.

இப்படி உங்களது குடும்பங்களால் பாதிக்கப்பட்ட பெண்களாகிய எங்களுக்கும், எங்களது குடும்பத்தாருக்கும்  உங்கள் படைப்புகளை காசு கொடுத்துப் பார்க்கும் நுகர்வோர் என்ற உரிமையில் கேள்வி கேட்கும் உரிமை உண்டல்லவா?

ஓரளவுக்கு ‘அடக்கத்தோடு’ ஆடிக்கொண்டிருந்த ஆணாதிக்கத் தடித்தனத்தை  கொலைவெறிடி பாடல் மூலம் தறிகெட்டு ஓடும்படி கட்டவிழ்த்து விட்டு இந்த சீரழிவிற்கு பலமான உரம் போட்டவர் உங்கள் குடும்ப வாரிசான ஐஷ்வர்யா தனுஷ் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட அனிருத்.  அவரைத் தொடர்ந்து அட்றா அவளை, வெட்றா அவளை என்று கொலை வெறியைத் தொடர்ந்தவர் அவரது கனவரான தனுஷ், அதற்கு இசையமைத்தவர் பிட்டுப் பட ஜி.வி. பெண்களைப் பழிக்கும் பாடல்கள் இல்லாத படங்களே இல்லை எனும் நிலை தற்போது வந்துவிட்டது. 

ஒரு பக்கம் ஆண்கள் ரவுடிகளாக, பொறுக்கிகளாக, அடியாட்களாக, சைக்கோக்களாக எப்படி இருந்தாலும், பெண்கள் அவர்களை காதலித்தே ஆக வேண்டும் என்று கட்டளையிடுகின்றன திரைப்படங்கள். அப்படி காதலிக்காத பெண் பேராசை பிடித்தவள், திமிர் பிடித்தவள். அல்லது காதலித்த பின்னர் அவனது செயல்கள் பிடிக்காமல் அவனை விட்டு நீங்க விரும்பினால், அவள் வேசி, இதுதான் திரைப்படங்கள் பெண்கள் மீது குத்தும் முத்திரை. ஆனால் அப்படி ஒழுக்கம் பேசும் ஆண்கள்தான் கதாநாயகியின், நடனப் பெண்களின் தொப்புளை நக்காத குறையாக பெண்களின் உடலை அங்குலம் அங்குலமாக தடவியபடி ஆடிப் பாடி மகிழ்ந்து, ஊரிலுள்ள பெண்கள் அனைவரையுமே ஒரு பாலியல் பண்டமாகக் காணும்படி கற்றுக்கொடுக்கிறார்கள். இதனால் ஏற்படும் பின்விளைவுகளை அறியாதவர்களா நீங்கள். பெண்கள் மீது திரைத்துறை நிகழ்த்தும் வன்முறை கண்டு உங்களுக்கெல்லாம் கோபமே வரவில்லையா? இரத்தம் கொதிக்கவில்லையா?

"அளவுக்கு அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அளவுக்கு அதிகமா கோபப்படுற பொம்பளையும் வாழ்க்கையில நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல" என்று உங்கள் குடும்பத் தலைவர் ரஜினிகாந்த் சொல்லிவிட்டதால் நீங்களெல்லாம் அடக்க ஒடுக்கமான பெண்களாக இருக்க முடிவு செய்துவிட்டீர்களா? ஆனால் மானமும், அறிவும் உள்ள பெண்களாகிய நாங்கள் அப்படி இருக்க முடியுமா என்ன? உங்களைப் போன்ற கலைக் குடும்பங்களுக்கு நாங்கள் கொடுக்கும் காசு மட்டும் வேண்டும் ஆனால், நாங்கள் எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது, விமர்சிக்கக்கூடாது, கண்டிக்கக்கூடாது, அப்படித்தானே? இது பாசிசமாகத் தோன்றவில்லையா உங்களுக்கு.

எல்லா விஷயங்களிலும் ஒழுக்கம் பேசுபவர்களாகவும், விதிகளை உருவாக்குபவர்களாகவும் இருப்பது பார்ப்பனர்களே, அதேபோல் அதை உடைத்து, கலாச்சாரத்தை சீரழித்து, அதற்கும் கலை, சுதந்திரம் என்று பேசி நன்றாக காசு பார்ப்பவர்களாக இருப்பவர்களும் நீங்கள்தானே. பெண்களுக்கு கல்வி கூடாது, 9 வயதில் திருமணம் செய்து வையுங்கள், பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது என்றெல்லாம் மனு சாஸ்திரங்களை எழுதி வைத்துவிட்டு, கொல்லைப் புறம் வழியாக உங்கள் வீட்டுப் பெண்களை மட்டும் கல்வி கற்கவும், வேலைக்குச் செல்லவும் செய்தவர்கள் உங்கள் இனம்தானே? இப்படி நீங்களும், உங்களுக்கு ஆதரவாக இயங்கும் ஆதிக்க சாதியினரும் உருவாக்கும் அநீதிக்குறிய விதிகளையும், கேவலமான முன்மாதிரிகளையும் எதிர்ப்பதும், கண்டிப்பதும், முறியடிப்பதுமாகவே எங்கள் பொழுதுகள் கழிகின்றன. இப்போது திரைத்துறையிலும் உங்களது வாரிசுகள் அராஜகம் செய்து வருகின்றனர். அதை சரஸ்வதி கடாட்சம் என்று ஒரு பெண்ணின் பெயராலேயே நியாயப்படுத்துகிறீர்களே, வெட்கமாக இல்லை?

திரைத்துறையில், ‘கலைத்துறையில்’ பணிபுரிபவர்களான உங்களிடம் நான் ஒன்று கேட்கிறேன். பெரும்பாலான திரைப்படங்களில் (அநேகமாக எல்லாம்) ஆண்கள் மட்டுமே உண்மையாக காதலிப்பவர்களாக, காதலால் பாதிக்கப்படுபவர்களாக காட்டுகிறார்கள். அவர்களுக்கு மட்டுமே சோகப் பாடல்களும், சூப் சாங்குகளும் உள்ளன. தண்ணி அடித்துவிட்டு சாலைகளில் ‘பாலுறவுக்கான’ உடல் அசைவுகளை  காட்டி காட்டி ஆடுகிறார்கள். ஏன்? பெண்கள் யாருமே உண்மையாக காதலிப்பவர்கள் இல்லையா? அல்லது ஆண்களால் அவர்கள் பாதிக்கப்படுவதே இல்லையா? காதல் தோல்விகள் பெண்களுக்கு இல்லையா? என்ன இது? ஏன் இப்படி என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா?
ஏதாவது கேள்வி கேட்டால் கருத்து சுதந்திரம்.

எது கருத்து சுதந்திரம்? சமூகத்தை சீரழிப்பதா?

அதிகாரத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பது கருத்து சுதந்திரம். அதிகாரத்தின் முகத்திரையைக் கிழிப்பது கருத்து சுதந்திரம். சமூகத்தை முன்னேற்றுவதற்காக முன்வைக்கும் கருத்துகள் விமர்சனங்கள் கருத்து சுந்தந்திரம். அவை முடக்கப்படும்போதும், விளிம்பு நிலை மக்களின் குரல்கள் நசுக்கப்படும்போதும் அதற்குக் குரல் கொடுப்பது கருத்து சுதந்திரம். மாறாக, நினைப்பதையெல்லாம் பேசுவதும், வக்கிரங்களைப் பரப்புவதும், இன,மத, சாதி, பால் அடையாளம், பாலியல் மற்றும் உடலியல் மாற்றங்களை இழிவு செய்வதுமா கருத்து சுதந்திரம்? நீங்களெல்லாம் ஆறறிவுள்ள மனிதர்கள்தானே? சிந்திக்கத் தெரியாதா உங்களுக்கு?

இல்லையேல் இன்னொரு பதில், மக்கள் ரசிக்கிறார்கள் என்பது. சிம்பு, அனிருத், தனுஷ், ஜி.வி மற்றும் திரைத்துரையின் இதர ஆண்களே, இந்த சமூகத்தின் ஆண்கள் உங்கள் வீட்டுப் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களையும், அந்தரங்கக் காட்சிகளையும்  , ஆபாச நடனங்களையும் கூடத்தான் ரசிப்பார்கள் நீங்கள் ஏன் உங்கள் அம்மாக்களையும் சகோதிரகளையும் ஆடவைத்து பாடவைத்து அதுபோன்ற காட்சிகளை வெளியிடக்கூடாது. பிடித்தால் பாருங்கள், பிடிக்காவிட்டால் அணைத்துவிட்டு போங்கள் என்று சொல்லிக்கொள்ளலாம். செய்வீர்களா?

சிம்பு மற்றும் அனிருத் குடும்பத்துப் பெண்களே, இப்போதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை, திரைத்துறையில் உங்களது வாரிசுகளின் வக்கிரத்தைக் கண்டித்தும், பெண் உடல் சுய-மரியாதை மீட்பிற்கும் களமிறங்க உங்களுக்கு இப்போதும் வாய்ப்புள்ளது. அதை முதலில் உங்கள் வாரிசுகளுக்கெதிராக தொடங்குவோம்.  திரைப்படங்கள், ஊடகங்கள் இவற்றில் பெண் உடல் சித்தரிப்பு மற்றும் ஆபாச பாடல்வரிகளை எதிர்த்து ஓர் ஆர்பாட்டம் செய்ய விழைகிறோம், அதற்கு உஷாவாகிய நீங்களும், லக்‌ஷ்மியாகிய நீங்களும்தான் தலைமை தாங்க வேண்டும்.

இது குறித்துப் பேச நேரம் தருவீர்களா? 


38 comments:

 1. சட்டையடி பதிவு. இந்த பதிவு அவர்களின் கண்ணில்பட வேண்டும். முடிந்தால் இதை ப்ரிண்ட் செய்து அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் தனிதனியாக இரு ரிஜிஸ்டர் மெயில் அனுப்ப வேண்டும்

  ReplyDelete
 2. செய்யவேண்டும் தோழர். செய்கிறேன். நன்றி

  ReplyDelete
 3. சரியான சாட்டையடி..

  ReplyDelete
 4. கொற்றவை அவர்களே,
  முதலில் உங்களைப் பாராட்டுகிறேன்.
  அருமையாக மிகவும் ஆழமாக யோசித்து
  சவுக்கைச் சுழற்றி வீசியுள்ளீர்கள்.

  நான் முதலில் எதற்கு இப்படி சிம்புவையும்
  அனிருத்தையும் வேலைவெட்டியில்லாமல்
  சமூகதளங்களில் கேலியும் நையாண்டியும்
  பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்? என்று
  எண்ணினேன்.
  ஒரே நேரத்தில் சிம்புவின் மடலையும் அனிருத்தின்
  கடிதத்தையும் படித்தபோது இரண்டிற்கும்
  பெருத்த வித்தியாசம் தோன்றியது.

  நம் சமூகம் இந்த நாய்களின் படங்களையோ,
  பாடல்களையோ புறக்கணிக்குமா? அப்படிப்
  புறக்கணித்தால் நன்றாக இருக்கும் என்றுமட்டுமே
  நினைத்தேன்.

  உங்கள் மடலை முழுவதுமாகப் படித்தபின்
  சே...சின்னப்பசங்க சில்லறைத்தனமா
  செய்தது கண்டு நெஞ்சுபொறுக்குதில்லை
  இந்த கேவலம் கெட்டவர்களை எண்ணி!

  இதை ஒரு பொது நல வழக்காகத் தொடுத்து
  சட்டத்தின் முன் நிறுத்தி இவர்களுக்கு தண்டனை
  வாங்கிக்கொடுத்தால் என்ன என்று தோன்றுகிறது?
  வெறும் போராட்டம், ஆர்ப்பாட்டம் எல்லாம்
  நீர்த்துப்போய்விடும்.

  வழக்குத் தொடுத்து இந்த நாய்களை சட்டத்தின் முன் நிறுத்தி
  இவர்களின் ஈனச் செயல்களை தோலுரித்தால் என்ன?
  (திரைத்துறையிலிருந்தே அப்புறப்படுத்த இயலாவிட்டாலும்)
  ஒரு தலைக்குனிவை ஏற்படுத்தினால்தான் இந்த ஜென்மங்களுக்கு
  ஒரு எறும்பு கடிச்சமாதிரியாவது இருக்கும். என்ன சொல்கிறீர்கள்?
  ஆல்பர்ட்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழர். வழக்குகள் தொடுக்கபப்ட்டுள்ளன... ஆனால் என் விருப்பம் இதுபோன்ற ஆபாச சித்தரிப்புகளுக்கெதிராக பொதுநல வழக்கு ஒன்று தொடர வேண்டும் என்பதே... பார்ப்போம்.

   Delete
 5. Money is the best language they understand. Those who don't like should stop giving money to them. (ie) stop watching their movies in theater. Even after they give apology or pass it on some one who made the song(?). Once they feel the pain monetarily, Dhanush/Selvaragavan/Vijay/Rajini etc will learn the lesson.

  If you really like their movies, stick with DVD.

  ReplyDelete
 6. Thayavu seithu entha kadithathai ,makkal athigama vasikum vegujena pathirigaigaluku anipi vaika vendukeren , thavu seithu ......

  ReplyDelete
 7. சாணியில் முக்கிய செருப்பால் அடித்ததைப்போல .பதிவு .

  . இவனுகளின் குடும்ப மகளிர் முதன்முறையாக இவர்களை நினைத்து வேதனையில் வெம்பி இருப்பார்களா ?

  ReplyDelete
 8. தோழர் உங்கள் அனுமதியோடும், பெயரோடும் வாட்ஸ் அப்பில் பகிரலாமா?

  ReplyDelete
  Replies
  1. இதற்கெல்லாமா அனுமதி வேண்டும்.. என்ன தோழர். தாராளமாகப் பகிர்ந்திடுங்கள்

   Delete
 9. Seriya sonnirkal... Nankalum( ankalum) imtha mari vakkirathitku thedi thedi alaikirom.. Karanam epatiyo enkayo vakkiram kidaika padu kirathu.. Vakkirathai kodukum cinema vai adakka venum.. Penkalai iliva kada kudathu..

  A they pol penkalum thannul ULA urupai use panni ankalai use panikaranka.. Sila actress , collage girls,employ .. Sila penkal ipati irukum pothu than ankal anaithu penkalidam vakkirathai ethir parkirarkal ..

  Thavaru irunthal manikavum...

  ReplyDelete
  Replies
  1. ரமேஷ் உங்கள் விமர்சனத்தை நான் மறுக்கவில்லை.. ஆண் பெண் என அனைவரும் இந்த ஆணாதிக்க சமூகத்திலிருந்துதான் கற்கிறோம். ஆகவே பெண் மட்டும் விதிவிலக்காக இருக்க வேண்டும் என்று எண்ணுவதும் ஆணாதிக்க எதிர்பார்ப்பே... சுரண்டல்கள், பித்தலாட்டங்கள் இரு தரப்பும்தான் செய்கின்றன. அவற்றை நடுநிலையோடு விமர்சிப்போம். நன்றி

   Delete
 10. இதற்கெல்லாமா அனுமதி வேண்டும்.. என்ன தோழர். தாராளமாகப் பகிர்ந்திடுங்கள்

  ReplyDelete
 11. தமிழில் சிறந்த பத்து சமூக கட்டுரைகளில் இதுவும் ஒன்று. எதை நானும் பகிர்ந்து கொள்கிறேன் !

  ReplyDelete
 12. குட்டி ரேவதியின் 'முலைகளும்',சிம்பு அனிருத்தின் 'புண்டையும்' இரண்டுமே சதைகள் தான்.பெண் உடல் உறுப்பை பெயராய் வைத்து புத்தகம் போட்டால் பெண்ணியவாதி.

  ஆண் பாட்டு எழுதினால் அயோக்கியத்தனம்.

  ReplyDelete
  Replies
  1. எல்லாவற்றையும் ஒரே தராசில் வைத்து அளக்க முடியாது.... நன்றி

   Delete
 13. நேத்தியடிப் பதிவு, கட்டாயம் உரியவர்கள் கைகளில் கிடைக்க செய்ய வேண்டும், அப்போதுதான் இதன் தாக்கம் அவர்களுக்கும் உறைக்கும், அவர்களுக்கு கொஞ்சமாவது மானம் சூடு சுரணை இருந்தால், இருக்குமா என்பது சந்தேகமே?

  ReplyDelete

 14. Vigneswari Suresh ‏@VignaSuresh 1m1 minute ago
  I think R.Rajendhar should pay this Kotravai. on reading her article, I felt Simbu is far better.>>>>இப்படியும் உங்கள் கடிதம் விமரிசிக்கப்படுகிறது!?

  ReplyDelete
  Replies
  1. விமர்சனங்கள் இருக்கத்தான் செய்யும். அது அறியாமையின் வெளிப்பாடு அல்லது வேறொரு கோணத்தில் பேசுகிறார்கள் என்று கடந்து செல்ல வேண்டியதுதான்.

   Delete
 15. அனிருத் இசையமைத்த ’பீப்’ பாடலைக் கண்டிக்கும் பதிவில்...

  தம் ஊரில் ஒரு கலை நிகழ்ச்சி நடத்த விரும்புவதாகவும், அதில் முதல் பாடலாக அந்த ’பீப்’ பாடலை இசைத்து அதற்கு அனிருத்தின் அம்மா ’லக்‌ஷ்மி’ நடனமாட வேண்டும் என்றும் கேட்டு, ’பீப்’ ஒலிக்கும் வார்த்தை வரும்போது எப்படி முத்திரை பிடிப்பீர்கள் என்பதை மொபைல் போனில் பதிவு செய்து வாட்சப்பில் அனுப்பி பொறுத்தமாக இருக்கிறதா எனப் பார்த்து திருத்தம் எதும் வேண்டுமாயின் சொல்கிறேன் என ”மார்க்சியத்தின் வழி பெண் விடுதலை”க்கு செயல்படும் கொற்றவை எழுதியிருக்கிறார்.

  ஒரு லூசுப்பய செய்யும் வக்கிரமான காரியத்திற்கு, அவனின் குடும்பத்துப் பெண்கள் மீது ஒரு பெண்ணே நுணுக்கமாய் அந்தரங்கமாய் நிகழ்த்தும் தாக்குதலும் பெண் விடுதலையில் வருகின்றதா!?
  http://www.twitlonger.com/show/n_1so1k5k

  ReplyDelete
 16. சிம்புவும்,அனிருத்தும் அவர்களுக்கு வருங்காலத்தில் பிறக்கும் பெண்குழந்தைகள் இப்பாடலைப் பாடினால் உவகையடைவார்களோ என்னவோ. சிறுபிள்ளைத்தனம் என்று இவ்விஷயத்தை ஒதுக்க முடியாது.அளவுகடந்த திமிரின் விளைவே இப்பாடல். நிச்சயம் இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இரண்டு குழந்தைகளின் தகப்பனான எனக்கு இதைச்சொல்ல முழுத்தகுதி உண்டு.

  ReplyDelete
 17. உமா க்ருஷ் ‏@umakrishh 24m24 minutes ago
  @vrsaran பெண்ணியம் பேசுவதாக நினைச்சு தன்னை விளம்பரப்படுத்திக்க அதே யுக்தியை பயன்படுத்தி இருக்கு
  0 retweets 0 likes
  Reply Retweet
  Like
  More
  Vigneswari Suresh ‏@VignaSuresh 7m7 minutes ago
  Vigneswari Suresh Retweeted Kathir
  @umakrishh @vrsaran Check out @erode_kathir's Tweet: Vigneswari Suresh added,
  Kathir @erode_kathir
  அனிருத் இசையமைத்த ’பீப்’ பாடலைக் கண்டிக்கும் பதிவில்... தம் ஊரில் ஒரு கலை நிகழ்ச்சி நடத்த விரும்புவதாகவும், (cont) http://tl.gd/n_1so1k5k
  0 retweets 0 likes
  Reply Retweet
  Like
  More
  உமா க்ருஷ் ‏@umakrishh 4m4 minutes ago
  @VignaSuresh நம் வீட்டிலுல்லோரும் பெண் தானே என அவங்க நினைக்கணும் ஆனா இந்தப் பொம்பள எழுதினது வக்கிரம் @vrsaran @erode_kathir
  Vigneswari Suresh ‏@VignaSuresh 4m4 minutes ago
  @kuumuttai don't want to open the blog one more time

  ReplyDelete
 18. Facebook ல இந்த கடிதம் எழுதுவதை எவன்டா கண்டு பிடிச்சது..... இவங்களை சுனாமி அடிச்சுணு போவ.... மழை விட்டதும் இந்த மட்ராஸ் காரனுங்க sorry Media ஆரம்பித்து விட்டார்கள்.....இதற்கு எல்லாம் சென்சார் வைடா மார்க் சுக்கர்பெர்க். கொற்றவை எனக்கு ஒரு சந்தேகம்..... அவர்களுக்கு தபால் அல்லது e-mail அனுப்பி இருக்கலாமே..... எல்லாம் விளம்பரம் தான்....அதுசரி பாட்டு எழுதன பாடன இசை அமைத்த பண்ணாடைகளுக்கு கடிதம் எழுதன நீங்க அதை ப்ராட்‌கேஸ்ட் செய்த youtube எழுதுவீங்களா?

  ReplyDelete
 19. அன்பு கொற்றவை.... நீங்கள் சொல்வது அத்தனையும் சரியே. ஆனால் சிம்பு வகையறா செய்த தவறையே நீங்களூம் செய்திுக்கிறீர்கள். எவர் செய்யும் பிழைக்கும், குற்றாத்திற்கும்
  அம்மாவை (பெண்களை மட்டும்) பழி சொல்லும் போக்கு. சிம்புவை, அனிருத்தை அவர்ன் அம்மா மட்டுமல்ல அப்பாவும்தான் வளர்த்தார். கெட்ட வார்த்தை சொன்ன பிள்ளையைக் கண்டியுங்கள் என பெற்றோருக்கு சொல்லி இருந்தால் கூட ஓகே. அம்மா எனும் பெண்ணை மட்டும் சாடுவது, கெட்ட வார்த்தை என்றாலே பெண்ணின் உறுப்பு நினைவுக்கு வரும் சிம்புவின் செயலை ஒத்ததே. - ஹன்ஸா.

  ReplyDelete
 20. Hello, This article is much filthier than the songs by the Thugs. That too you have written this knowing what you are writing clearly.

  Don't worry..There will be bunch of people who will support this also.. Continue the filth and soon you will have a fan following like Simbhu and Anirudh!

  ReplyDelete
 21. https://marubadiyumpookkum.wordpress.com/2015/12/13/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81/

  ReplyDelete
 22. அப்புகைப்படங்களைத் தவிர்த்திருக்கலாம்

  ReplyDelete
 23. நீங்க இப்போ இவ்விமர்ச்னத்தால் என்ன சாதிச்சு இருக்கீங்கனு தெரியுமா? சிம்பு பரவாயில்லை இந்தக் கொற்றவைக்கு னு உங்க பதிவை வாசிச்ச பலரை உணர வச்சிருக்கீங்க. சிம்புவை விட பெண்ணினத்தை ஒரு படி மேலே கேவலப் படுத்தி இருக்கீங்கனு சொல்லலாம். நீங்க எம்புட்டுப் பெரிய பெண்ணியவாதி, உங்க தகுதி என்ன? தராதரம் என்ன என்றெல்லாம் எனக்குத் தெரியாது. இப்படித்தான் நான் உங்கள் பதிவை பார்க்கிறேன். ஒரு வைரஸ் இன்ஃபெக்டெட் ஆளை ட்ரீட் பண்ணும்போது "மாஸ்க்", கையுறை எல்லாம் அணிந்துகொள்ளணும். இல்லைனா வைரஸ் உங்களுக்கும் தாவிவிடும். இப்போ நீங்க, மாஸ்க், அகியுறை எல்லாம் போட்டுக்காமல் சிம்புவை "ட்ரீட்" பண்ணியதால் சிம்புட்ட இருந்த வைரஸ் கொற்ற்வையை இன்ஃபெக்ட் பண்ணிடுச்சு! :(

  ஆமாங்க, பெண்களை சிம்புவை விட ஒரு படி மேலே போயி இழிவு படுத்தி இருக்கீங்க. நீங்க பெண் என்பதால் அந்த உரிமை உங்களுக்கு இருக்குனு எவன் உங்களுக்கு சொல்லிக்கொடுத்தான்னு தெரியலை! பெண்களுக்கு வக்காலத்து வாங்குவதாக சொல்லிக்கொண்டு பெண்களை இன்னும் இழிவு படுத்திய "பெண்ணிய சந்தர்ப்பவாதி" உங்க மேலே மாதர் சங்கம் ஒரு வழ்க்குத் தொடர்ந்தால் என்ன?னு எனக்குத்தோனுது!

  ஆக, சிம்புக்கு நெறையா உதவி இருக்கீங்க உங்க "உளறல்" களால்!

  ReplyDelete
 24. உங்கள் கோபம் நியாயமானது என்றாலும் இவ்வளவு அநாகரீகம் தேவை இல்லை இதையெல்லாம் பார்த்து அவர்கள் குடும்பத்தினருக்கு நிச்சயம் மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கும்.அவர்களுடைய குடும்பத்தினர் சம்மதத்துடன் இந்தப் பாடல் வெளியிட்டிருக்கப் போவதில்லை. அதற்காக அவர்களை காயப் படுத்துவது நியாயமாகாது.

  ReplyDelete
 25. Acca neenga nirmaya rapist released agum podhu enga irundhinganu matum solla mudiyuma please

  ReplyDelete