Apr 11, 2014

போலி ஒற்றுமையில் உடன்பாடில்லை

வணக்கம் தோழர்களே,

ப.ஜ.க கூட்டணியின் ஆபத்துகளை எடுத்துரைத்து ஒரு கூட்டறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் பெயர்களை இணைத்துக்கொள்ள விருப்பமுள்ள எழுத்தாளர்கள் சிந்தனையாளர்கள் கலைஞர்கள் ஆகியோருக்கு அ. மார்க்ஸ் (மற்றும் தோழர்கள்) அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். எங்களுக்கும் அழைப்பு வந்தது. வலதுசாரியம், மதவாதம், மோடியிசம் ஆகியவற்றுக்கு என்றைக்குமே நாங்கள் எதிரானவர்களே. அவ்வடிப்படையில் நானும் வசுமித்ரவும் எங்களது பெயர்களை இணைத்துக்கொள்ள ஒப்புதல் அளித்தோம்.

பெயர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டது. அவ்வறிக்கையில் எங்களுக்கும் முழு உடன்பாடே.

அதன்பிறகு அ.மார்க்ஸ் அவர்களின் முகப்புத்தகத்தில் உள்ள அறிக்கையின் கீழ் இணைக்கப்பட்டுள்ள நபர்களின் பட்டியலை பார்க்க நேர்ந்தபோது அதிர்ச்சியுற்றேன். அதில், வக்கிர எழுத்தாளர் லஷ்மி சரவணகுமாரின் பெயரை சந்திரா தங்கராஜ் இணைத்திருந்ததைக் காண முடிந்தது. எங்களது தனிப்பட்ட வாழ்வு குறித்து எதுவுமே தெரியாத அந்த வக்கிர எழுத்தாளர் என் மகள் உட்பட எவரையும் விடாது என் குடும்பம் பற்றியக் கதைகளை ஸ்டேட்டஸ்களாக கடந்த இரண்டு வருடங்களாக எழுதி வந்துள்ளார். சமீபத்தில் அவ்வக்கிரத்தை மீண்டும் தொடர்ந்தார். அதையொட்டி நாங்கள் இருவரும் கடுமையான எதிர்வினைகளைப் பதிவு செய்தோம். இதுவரை அதற்கு பதில் எதுவும் லஷ்மி சரவணகுமாரிடமிருந்து கிடைக்கவில்லை. 

இந்நிலையில் மேற்சொன்ன அறிக்கையில் அவரது பெயரோடு எங்களது பெயரை இணைக்க நாங்கள் விரும்பவில்லை என்று எங்களது எதிர்ப்பை பதிவு செய்து, எங்கள் இருவரின் பெயரை நீக்கக் கோரினோம்.. அ.மார்க்சும் நீக்கி விட்டார். மிக்க நன்றி.

அதே சமயம் எங்களது எதிர்பிற்கான காரணத்தையும் நீக்கிவிடபடியால், நானும் வசுமித்ரவும் அவ்வறிக்கையில் ஏன் இணையவில்லை எனும் விளக்கத்தை இங்கு பதிவு செய்வது அவசியம் எனக் கருதுகிறோம்.

நாங்கள் பதிவு செய்து நீக்கப்பட்ட கருத்து பின்வருமாறு:

வசுமித்ரவின் கருத்து:

வணக்கம் அ. மார்க்ஸ்.

தொலைபேசியில் என்னையும் எனது வாழ்நாள் தோழர் கொற்றவையையும் இணைத்துக்கொள்ளலாமா எனக் கேட்டீர்கள். மிக்க மகிழ்வுடன் சம்மதம் தெரிவித்தோம். ஆனால், அரசியலில் மோடியின் மத அரசியலை விடவும், இலக்கியத்தின் பெயரால் தனிமனித அந்தரங்கத்தை கேவலமாக எழுதும் புத்தியை உடைய, ஒரு வக்கிரம் பிடித்த அவதூறாளாரான லஷ்மிசரவணக்குமாரின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது. அவ்வக்கிரச் செயல்பாட்டாளர் இருக்கும் ஒரு பட்டியலில் எங்கள் பெயர்களை இணைப்பதை நாங்கள் அறுவெறுக்கத்தக்க ஒன்றாக கருதுகிறோம். எங்கள் இருவர் பெயரையும் நீக்கிவிடுங்கள்.

எனது கருத்து:

மதவாதத்திற்கும் ப.ஜ.க கூட்டணிக்கு எதிரான அவ்வறிக்கையில் எங்களுக்கு முழு உடன்பாடே.

அதே சமயம் மதவாதிகளிடம் எதிர்க்கப்பட வேண்டியவைகளில் பெண்களுக்கெதிரான அவர்களது கருத்தியல் மிகவும் முக்கியமான ஒன்று. பொது வெளியில் இயங்கும் பெண்களை ஒடுக்கும்விதமான மதவாதிகளின் ஆபாச பேச்சுகளுக்கு நிகராக இங்கு சில எழுத்தாளர்கள் எழுதிவருகின்றனர். சமூகத்தின் மீது அக்கறையும், சக எழுத்தாளர்கள் மீது வக்கிரத்தையும் பொழியும் அத்தகைய எழுத்தாளர்களோடு இணைந்து சமூகத்திற்காக நாங்கள் சிந்தும் கண்ணீர் முதலைக் கண்ணீர் ஆகிவடக்கூடாது எனும் அச்சம் எழுவது தவிர்க்கவியலாத ஒன்றாக இருக்கிறது, மன்னிக்கவும்.

வக்கிரமும் வன்மமும் பொங்க தனிநபர்களின் அந்தரங்க வாழ்வை எழுதுபவர்களும், சக பெண் எழுத்தாளர்களை ஆபாசமாக வசைபாடுபவர்களும் இணைந்திருக்கும் ஒரு பட்டியலில் இணைவதன் மூலம் எங்களது ஒற்றுமையை போலி ஒற்றுமையாக்குவதில் எங்களுக்கு உடன்பாடில்லை.

ஆகவே நாங்கள் அக்கூட்டறிக்கையில் எங்களது பெயர்களை இணைத்துக்கொள்ளவில்லை.

நன்றி
கொற்றவை 
வசுமித்ர

அவ்வறிக்கை:

*********************************************************
தமிழக வாக்காளர்களுக்கு தமிழ் எழுத்தாளர்கள், இதழாளர்கள், கலைஞர்கள் வேண்டுகோள்
**********************************************************
சென்னை, 12 -04 - 2014

இந்து அரசு ஒன்றை அமைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் ஒரு இயக்கத்தின் முன்னணி அமைப்பாக உள்ள ஒரு கட்சி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு, இந்திய வரலாற்றில் வேறெப்போதும் இல்லாத அளவிற்குத் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. 2002ல் குஜராத்தில் முஸ்லிம்களைக் கொன்று குவித்த கொடுஞ் செயலுக்குத் தலைமை தாங்கியது மட்டுமின்றி, அதற்காக இதுவரை வருத்தம் தெரிவிக்காத நரேந்திர மோடிதான் இந்த முயற்சியிலும் தலைமை ஏற்றுள்ளார். இந்த நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்த கார்ப்பொரேட் நிறுவனங்கள் இதற்குப் பின்புலமாக உள்ளன. கார்போரேட் மூலதனமும் வகுப்புவாத சக்திகளும் அமைத்துள்ள இந்தக் கூட்டணி, நமது மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் எதிர்காலத்தைக் 
கேள்விக்குள்ளாக்கியுள்ளது. 

இந்த ஆபத்தை எதிர்த்து இன்று இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலுமுள்ள எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், இதழாளர்கள் மற்றும் கலைஞர்கள் களம் இறங்கியுள்ளனர், அவர்களின் குரலுடன் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களாகிய நாங்களும் இணைந்து கொள்கிறோம். 

தமிழகத்தைப் பொறுத்த மட்டில் ஆதிக்க சாதிகளின் கூட்டணியை உருவாக்கிச் செயல்படும் ஒரு கட்சியும் இக் கூட்டணியில் இணைந்திருப்பது இந்த ஆபத்தை இரட்டிப்பாக்குகிறது. மதச் சார்பின்மையை முன் வைத்து உருவான திராவிட இயக்கத்தின் பெயரைத் தாங்கி நிற்கும் இரு கட்சிகள் மோடியை முன் நிறுத்துவதில் துணை போகின்றன. 

இந்த ஆபத்து குறித்துத் தீவிரமாகச் சிந்தித்து, இதைத் தடுப்பதற்கான எல்லவிதமான செயற்பாடுகளையும் மேற்கொண்டு, நமது மதச் சார்பற்ற ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டுமென பொறுப்புள்ள குடிமக்களையும், அமைப்புக்களையும் நாங்கள் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். பா.ஜ.கவால் தலைமை தாங்கப்படும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக வாக்களித்து, ஆட்சியைக் கைப்பற்ற முனையும் இந்தக் கார்பொரேட் - மதவாத - சாதிய சக்திகளின் முயற்சியை வீழ்த்துமாறு தமிழக வாக்காளர்களைக் கேட்டுக் கொள்கிறோம். மதச் சார்பற்ற, ஜனநாயக சக்திகளை ஆதரித்து வாக்களிக்க வேண்டுகிறோம்.

தொடர்பிற்கு:
எழுத்தாளர் அ.மார்க்ஸ், +91 94441 20582, professormarx@gmail.com

Apr 3, 2014

லஷ்மி சரவணகுமார் உங்களது மனநோய்க்கான மருந்து


10 மணி விவகாரம் குறித்த உங்களது உல்டாப் பதிவில் உங்கள் ஸ்டேட்டஸ் - //எனது வாழ்நாள் தோழியான தோழர் கார்கி அவர்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் ஃபோன் செய்து நிறைய பெண்கள் தொந்தரவு செய்கிறார்கள். இவ்வாறு தொலைபேசிக் கொள்வதன் மூலம் தங்களது கலை தாகத்தை தீர்த்துக் கொள்வதாக அபிப்பிராயப்படும் அவர்களிடம் இது குறித்து உரையாட வேண்டும்... சசி கலா - வாங்க உரையாடுவோம்...//

நீங்கள் ஓரு ஆணாதிக்கவாதியாக இருக்குறீர்கள் என்பது எனக்குக் கூடுதல் அதிர்ச்சி தருவதாக உள்ளது. அதுவும் உங்கள் மனைவிக்கு நான் அண்ணியாகவும், பாலியல்வாதத்திற்கு எதிரான ஒரு அமைப்பை நடத்தி வருவதாலும் என் கண்களுக்கு உங்கள் இரட்டை வேடம் அப்பட்டமாகப் புலப்படுகிறது.

ஏன் லஷ்மி சரவணகுமார் மேற்சொன்ன ஸ்டேட்டசில் கூட உங்களால் ஆண்களை அனுமதிக்க முடியாத அளவுக்கா நீங்கள் கார்க்கியின் இரவு பேச்சு சுதந்திரத்திற்குத் தடை விதித்துள்ளீர்கள். 10 மணிக்கு மேல் ‘கலை தாகத்தை’த் தீர்த்துக்கொள்ள பெண்கள் மட்டும்தான் தொடர்பு கொள்கிறார்களா? ஆண்கள் தொடர்பு கொள்வதே இல்லையா? என்ன இது விந்தையாக உள்ளது.

அப்படியென்றால் அபிலாஷ் சந்திரன் எழுதிய சந்தேகக் கேஸ்களுக்கு ஒரு கதை  என்பது உங்களுக்கான நல்லறத்தைப் போதிப்பதற்குத்தானோ? என்ன இருந்தாலும் லஷ்மி சரவணகுமார் என் நாத்தனார் கார்க்கியை நீங்கள் இவ்வளவு குழந்தைத்தனமாகக் கையாளக்கூடாது. மேலும் கலைத்தாகத்தைத் தீர்க்கும் வேட்கைப் பெண்களுக்கு மட்டும்தான் உள்ளது என்பது போல் உரைத்து ஆண்களின் கலைத்தாகத்தைக் குறைவாக மதிப்பிட்டிருக்கும் உங்களது பாலியல்வாதப் பார்வையை, ஆண்களை மட்டம் தட்டும் உங்கள் அகம்பாவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

லஷ்மி சரவணகுமார் நீங்கள் ஒரு முற்போக்குவாதி என நினைத்திருந்தேன், ஆனால் நீங்கள் ஒரு மூட நம்பிக்கைவாதி என்பது உங்களது பின்வரும் கருத்துரையின் வாயிலாக மிகவும் பரிதாபத்திற்குரிய வகையில் வெளிப்பட்டுள்ளது.

// உங்களுக்கு தோழி கார்கி அவர்கள் குறித்து அனேக விசயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.... அவருக்கு நான் ஒரு இலக்கிய ஆசான் மட்டுமே, எதை வாசிக்க வேண்டும் எப்போது வாசிக்க வேண்டும் என்பதை மட்டுந்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்... அதை வைத்துக் கொண்டு அவர் பயணப்பட்டிருக்கும் தூரம் அசாத்தியமானது.//

விளங்கிவிட்டது உங்கள் வாழ்வின் லட்சியம் என்னவென்று விளங்கிவிட்டது லஷ்மி சரவணகுமார். நீங்கள் வசுமித்ரவாக விரும்புகிறீர்கள், உங்கள் வாழ்நாள் தோழர் கார்க்கியைக் கொற்றவையாக்க கனவு காண்கிறீர்கள். பாவம், அது நிறைவேறாத ஆசையாகப் போகிறது என்பது உங்களுக்கே தெரிந்திருக்கப்போய்த்தான் நீங்கள் இப்படி ஒரு கமெண்ட் எழுதியாவது உங்கள் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள முனைந்திருக்கிறீர்கள்.

ஒருவேளை கார்க்கிக்காவது கொற்றவையாவதற்கு 1% வாய்ப்பிருக்கலாம். ஏனென்றால் இந்த ஆணாதிக்க உலகத்தில் தொடர்ந்து ஆண்களின் காதலாலும், அவர்களுடனான வாழ்க்கையாலும், குடும்பச் சூழலாலும் கொடுமைகளை எதிர்கொண்ட ஒரு பெண்ணாக, அதிலிருந்து விடுபட்டு தன் சுயத்தை கண்டுபிடித்து தான் தானாக வாழத் துடிக்கும் ஒரு பெண்ணாக, ஒருவேளை கர்க்கி தன்னை வாழ்வின் துன்பியல்களிலிருந்து விடுவித்துக்கொள்ள நினைத்தாலும், அதற்குத் தேவையான அறிவையும், கல்வியையும், வாழ்வியல் அறிவையும், பண்புகளையும், கட்டுப்பாடுகளையும் கற்றுத்தர நீங்கள் வசுமித்ரவாக முடியாதே. ஊர்பக்கங்களில் சொல்வார்களே தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் உங்களால் ஒருபோதும் வசுமித்ரவாக முடியாது.

ஒரு பெர்வர்ட்டாக இருக்கும் நீங்கள்  கார்க்கியைப் பக்கத்துத் தெருவிற்குக்கூட ஒரு ஆளுமை நிறைந்தப் பெண்ணாகப் பயணப்பட வைக்க முடியாதே, பின் எப்படி அவர் அசாத்தியமான தூரத்திற்கு பயணப்பட முடியும். ஏன் இந்த மூட நம்பிக்கை உங்களுக்கு.

வசுமித்ர ஒரு போதும் அடுத்தவர் அந்தரங்கத்தை புனைவாக பாலியல் அடையாளத்தை உல்டா செய்து ஸ்டேட்டஸ் போட்டதில்லை. அப்படிப் போட்டுவிட்டு அவசர அவசரமாக அதை அழித்தும்விட்டு முகப்புத்தகத்தை விட்டே சில நாட்கள் ஓடி ஒளிந்து கொள்ளவுமில்லை. பின்னர் எவரிடமும் எஸ்.எம்.எஸ்கள் அனுப்பி கெஞ்சியதில்லை. அதன்பிறகு எவர் வீட்டிற்கும் சென்று விருந்து உண்டு அவர்கள் கழிவறையில் சிறுநீர் கழித்து பின்பு அவர்கள் படுக்கையறையை மறைந்திருந்து எட்டிப்பார்த்தோ அல்லது கற்பனையாகவோ அவர்கள் குடும்ப வாழ்க்கையை எழுதியதில்லை. இதுபோன்ற வக்கிரங்கள் வசுமித்ரவுக்கு எப்போதும் கைவராது. அதேபோல் உங்களுக்கும் வசுமித்ரவின் அறிவோ, கொள்கைகளோ, பண்புகளோ எல்லாவற்றிற்கும் மேல் துணைவியின் பேரில் மரியாதைக்குறிய ஒரு காதலோ வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால் நீங்கள் சித்தியைக் காதலிப்பவர்.

உங்களின் மனநோய் தீர முதலில் நீங்கள் வசுமித்ரவாகவே முடியாதே என நினைத்து துன்பப்படும் அந்த தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுங்கள்.

அதன்பிறகு கார்க்கியை கொற்றவையாக்கும் வேட்கை உங்களுக்கு இருப்பின், வசுமித்ர கொற்றவையின் இணைவும் அவர்கள் வாழ்க்கையின் சாதனைகளும் உங்களுக்கு அகத்தூண்டுதலாக இருந்து, அதன்பேரில் நீங்கள் கார்க்கியைக் கொற்றவையாக்க கணவு கண்டு, அதன் இயலாமை உங்களைத் தொந்தரவு செய்கிறது என்றால் நான் உங்களுக்கு உதவத் தயாராக இருக்கிறேன்.

உங்களது இந்தக் கேவலமான வக்கிர புத்திகளோடு நீங்கள் ஒருபோதும் வசுமித்ரவாக முடியாது. அதனால் நீங்கள் கார்க்கி மனோஹரனை கல்வி கற்க வசுமித்ரவிடம் அனுப்புங்கள். அவன் என்றைக்கும் கற்றுத்தருவதற்கு மிகுந்த ஆர்வம் கொண்டவன். ஒரு பெண் எப்படி ஆளுமையாவது, ஆனாதிக்க அறிவை எப்படி களைந்தெறிவது அதேவேளை தீவிரவாதப் பெண்ணியப் போக்கில் ஆண் வெறுப்பையும் கற்றுக்கொள்ளாமல் ஒரு சமதர்மக் கல்வியை கற்றுக்கொள்வதற்கு வகை செய்வார். வசுமித்ரவிடம் கல்வி கற்ற பின்னர் கார்க்கி மனோஹரன் தன்னையும் மீட்டுக்கொண்டு இந்த சமூகத்தில் உங்களைப் போன்ற மனநோய் மிகுந்த எழுத்தாளர்கள், பாலியல்வாதப் போக்குக்கொண்டவர்கள், தாழ்வுமனப்பான்மையால் அடுத்தவர் படுக்கையறையை எட்டிப்பார்த்துப் புனைபவர்கள், சித்தியைக் காதலிக்கும் மனநோய் கொண்டவர் ஆகியோரை மீட்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வார் எனும் நம்பிக்கை எனக்கு உள்ளது. ஒருவேளை அவரும் விலங்குகளாக மாறி அடுத்தவர் அந்தரங்கத்தை சதா சர்வ காலமும் எழுதுபவர்களுக்கு எதிராக மாப்வெஸ் (Movement against pervert writings and elimination of sexism, mapwes) எனும் ஒரு அமைப்பைத் தொடங்கக்கூடும்.

ஆனால் ஒரே ஒரு பெருவிளைவிற்கு உங்களை நீங்கள் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். வசுமித்ரவிடம் கற்ற பின்னர் உங்கள் வாழ்நாள் தோழர் கார்க்கிக்கு ஏற்படப்போகும் அறிவுப்பசிக்கு உங்களால் ஒருபோதும் தீனி போட முடியாது. 

அதுமட்டுமல்லாமல் நாளை உங்களுக்கு ஒரு பெண்ணோடு திருமணமாகிஒரு மகள் பிறந்த நிலையில்… அவருக்கு அறிவுப்பசியும் புரட்சித்தாகமும் மேலோங்கிய நிலையில், அவரது கணவரான உங்களது வக்கிரத்தைப் பொறுக்கமுடியாமல் உங்களையும், உங்களது மகளையும் கூட தூக்கி எறிந்துவிட்டுப் போகக்கூடும்.  

என்னுடைய அச்சமெல்லாம் அப்படி உங்கள் மனைவி உங்களைப் பிரிந்து வேறு ஒருவரைத் திருமணம் செய்து உண்மையான அறிவின் துணையோடு ஒரு எழுத்தாளராகி மகிழ்ச்சியோடு வாழும்காலத்தில் அவர்களது வாழ்கைகயைக் கண்டு பொறாமை கொண்டு அப்பெண்ணின் அந்தரங்க வாழ்வை முகப்புத்தகத்தில் எழுதி ஆர்கசமடயும் வக்கிர மனநிலையோடு இன்னொரு லஷ்மி சரவணகுமார் ஒருவன் முளைத்துவிடக்கூடாது என்பதுதான்.  



லஷ்மி சரவணக்குமாருக்காகப் பரிந்து பேசிய கார்க்கி மனோஹரனுக்கு அன்பிற்குரிய அண்ணி கொற்றவை எழுதுவது…


 என்னை யாரென்று தெரியாத உங்களிடம் நீங்கள் நலமா என்று விசாரிக்க முடியாத நிலைக்காக வருந்துகிறேன். எனக்கும் உங்களை யார் என்று தெரியாது, ஆனால், உங்கள் கணவரின் தொடர் அயோக்கியத்தனங்கள் குறித்து நானும் வசுமித்ரவும் பதிவுகளை எழுதியபோது நீங்கள் பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவரான வசுமித்ரவை மட்டும் தேர்ந்தெடுத்து அவருக்கு ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் அனுப்பி அவரிடம் அண்ணா என்று உரிமையோடு சிலக் கேள்விகளை எழுப்பிய அன்றுதான் நீங்கள் லஷ்மி சரவணகுமாரைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் என்பதை நான் அறிந்து கொண்டேன்.

லஷ்மி சரவணகுமார் எங்கள் குடும்ப வாழ்வை எடுத்துப் பேசுவதால் இப்போது நானும் அவரது குடும்பத்தாரிடம் உரையாடுவது தவிர்க்கவியலாமல் போகிறது கார்க்கி…

முதலில் இந்த பிரச்சினையின் தொடக்கத்தை நீங்கள் http://saavinudhadugal.blogspot.in/2014/04/blog-post_1.html இந்த சுட்டியில் கண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். அதைப் படித்துவிட்டுத்தான் அதாவது மீண்டும் நான் எழுதியப் பதிவைப் படித்துவிட்டு நீங்கள் மீண்டும் உங்கள் பாசத்திற்குறிய அண்ணன் வசுமித்ராவுக்கே மெசேஜ் வைத்தீர்கள்

https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn1/t1.0-1/c13.0.40.40/p40x40/1939744_776275399073934_2096988559_s.jpg
உங்களை அண்ணான்னு உண்மையான அன்பில தான் கூப்பிட்டேன் ஆனா அதைக் கூட கொச்சைப் படுத்தறவங்கிட்ட எதையுமே பேசவே முடியாது. கொற்றவை கார்கி என்னிடம் உரையாடவில்லைன்னு சொல்றாங்களே, நீங்களும் தானே பதிவு எழுதுனீங்க ? அதுக்கு தானே நான் பதில் சொல்லி ஸ்டேடஸ் போட்டேன். உங்களுக்கு என்னை தெரியாதுன்னாலும் எனக்கு உங்களை பத்தி தெரியும். ஆனா கொற்றவை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாத போது என்ன அவருடன் உரையாடுவது ? அன்பிற்கு மிக்க நன்றி
Tuesday 9:28pm
இதை பொதுவெளியில் எழுதுங்கள். (வசுமித்ர பதில்)

கார்க்கி முதலில் அனுப்பிய மெசேஜில், //ரடியாகவே சொல்லனும்னா... அப்படி கூப்பிட்டு சாப்பாடு போட்டதை பற்றி நீங்கள் இருவருமே குறிப்பிட்டு இருப்பது ரொம்பவும் வருத்தமா இருக்குது. .. //
இந்த வரிகளைப் படிக்கும்போது நீங்கள் எனது பதிவையும் படித்திருப்பதாகப் பொருள்படுகிறது.

மேலும் நீங்கள் // ஏன்னா எதோ ஒரு வன்மத்தை வைத்துக்கொண்டு பெண்களை உடனே இழுப்பதில் எந்தவொரு உடன்பாடும் இல்லை எனக்கு. இப்பொழுதும் கூட அவன் கிட்ட அதையே தான் சொல்றேன். மற்றவர்களுடைய வாழ்க்கைய பற்றி விமர்சிக்க நமக்கு எந்தவொரு உரிமையும் இல்லைன்னு. இனி எப்பொழுதும் அந்த மாதிரி அவன் நடந்துக்க மாட்டான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு// என்றும் சொல்லி இருந்தீர்கள் ஆனால் பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவரிடம் மட்டும் வருத்தத்தை பதிவு செய்து முடித்துக்கொண்டீர்கள். இதைத்தானே நான் எனது பதிவில் சுட்டிக்காட்டி உள்ளேன்.

அதேபோல் நீங்கள் அன்புள்ள வசு எனத் தொடங்கி அண்ணா என முடித்திருந்தீர்கள் நானும் அதைத்தானே சுட்டிக்காட்டியுள்ளேன் இதில் என்ன கொச்சைப்படுத்தி உள்ளேன் என்பதை விளக்கவும். உங்களை நாத்தானார் என அழைப்பதில் எனக்கு பெருமைதான். ஆனால் ஒரு கேள்வி.

அண்ணா அண்ணி நாத்தனார் என்பதெல்லாம் கொச்சைப் படுத்தும் சொற்களா? அப்படியென்றால் நீங்கள் ஏன் அதைப் பயன்படுத்தினீர்கள். மேலும் இன்பாக்சில் மெசேஜ் வைத்தால் தனிப்பட்ட மெசேஜ் என்றுதானே சொல்ல முடியும். மேலும் எனக்கு நீங்கள் ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் அனுப்பி வருத்தம் தெரிவிக்கவில்லை என்பது உண்மைதானே. அதைத்தானே நான் குறிப்பிட்டு உள்ளேன்.

இது கொச்சைப்படுத்துவதென்றால் நீங்கள் திருமணம் செய்துகொள்ளப் போவதாகச் சொன்ன லஷ்மி சரவணகுமார் என்னைப் பற்றி எழுதியிருப்பதற்கு என்ன பெயர்? நீங்களாக எங்களது உரையாடலில் நுழைந்ததாலேயே உங்களை நோக்கி இந்தக் கேள்விகளை வைக்கிறேன். லஷ்மி சரவணகுமாரின் எங்களைப் பற்றிய பதிவுகள்  வக்கிரம் வன்மம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?  நீங்களும் அந்த வக்கிர உரையாடலில் பங்கெடுத்துள்ளீர்களே இதை நான் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்? வன்மத்தில் உடன்பாடில்லாத நீங்கள் எப்படி உங்கள் அண்ணியை, அதுவும் யாரென்றே தெரியாத அண்ணியை ஏளனம் செய்யும் ஒரு பதிவில் பங்கேற்றீர்கள்.

அப்படியென்றால் நீங்கள் வசுமித்ரவை அண்ணன் என்று சொன்னது பொய்யா? அது வெறும் வார்த்தைதானா… உங்கள் அண்ணியை இப்படித்தான் உங்கள் கணவர் நக்கல் செய்வாரா… சாரி கார்க்கி…. எங்கள் குடும்பத்தில் மதனி என்றால் தாய்க்குச் சமம். ஆனால் உங்கள் கணவர் சித்தியையே லவ் பண்ணலாம்னு இருக்கேன்னு சொல்றவராச்சே… (விவரங்கள் பின்னர் வரும்).  பாருங்கள் எனக்கு எப்படி ஒரு தம்பி என்று… 

சரி என்னதான் இந்த பத்து மணி விவகாரம் என்று நம் தோழர்கள் சற்று மண்டையைப் பிய்த்துக்கொள்கிறார்கள். அவர்களுக்காகவும் உங்களுக்காகவும் நான் அவற்றை விளக்கவுள்ளேன்.

நாங்கள் பொதுவெளியில் குறிப்பாக முகப்புத்தகத்தில் பெரிதாக எவரோடும் நட்பு பாராடுவதோ அன்பைப் பொழியும் வாசகங்களையோ வைப்பதில்லை. ஆனால் எங்களுக்கென்று ஒரு ஆரோக்கியமான நட்பு வட்டம் உள்ளது. அந்த வட்டத்தில் உள்ள சில தோழிகள் தங்களோடு உரையாடும் ‘இலக்கியக் கர்த்தாக்கள்’ சிலரைப் பற்றி எங்களிடம் பேசுவதுண்டு. இதை நீங்கள் பொறணி என்று எடுத்துக்கொள்ளக்கூடாது.

ஏனென்றால் அவர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை எங்களிடம் பகிர்ந்துகொள்வார்கள்.  குறிப்பாக திருமணமாகி குழந்தையோடு பிரிந்து தனித்து வாழும் பெண்களிடம் இந்த ‘தூய இலக்கியவியாதிகள்’ எப்படி நடந்துகொள்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை மனம் கொதித்துப் பகிந்துகொள்வார்கள்.

அவர்கள் சொன்னதுதான் இந்த 10மணி விவகாரம். இரவு 10 மணிக்குத்தான் தோழர் இவங்க ஃபோன் பண்றது, மெசேஜ் பண்றது எல்லாம். எனக்கும் இப்படி இரவு 9 மணிக்கு மேல் வரும் அழைப்புகள் குறித்து நானும் பகிர்ந்து கொண்டேன். இப்படி ’இலக்கியவியாதிகளால்’ எங்களுக்கு வரும் தொல்லைகள் குறித்து பெண்கள் நாங்கள் பேசுவதை என் ‘வாழ்நாள் தோழன்’ வசுமித்ரவும் கேட்டிருக்கிறான். இல்லையென்றாலும் அவன் எனக்கும் சீனியர்தானே. ‘இலக்கிய டிரண்டை’ அவனும் அறிவானில்லையா.

ஆகவே அவன் வழக்கமாக இந்தக் கேள்வியை வைப்பதுண்டு, ஏன் இலக்கியவாதிகள் தங்கள் குடும்பப் பெண்களுக்கு இலக்கியம் கவிதை ஆகியவற்றை ஊட்டி வளர்ப்பதில்லை, ஏன் இவர்கள் அடுத்தவன் மனைவிக்கே கற்றுக்கொடுக்க ஆசைப்படுகிறார்கள்? அதுவும் ஏன் இரவைத் தேர்ந்திடுக்கிறார்கள் என்பது அவனுடைய கேள்வி. இதில் அவன் மனைவியாக நான் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தாலும் அவனுக்கு இக்கேள்வியை வைக்கும் உரிமை உண்டு எனினும்.. மற்ற பெண்களும் இப்படி வருந்துகிறார்களே தொல்லைக்குள்ளாகிறார்களே எனும் எரிச்சலில் அவன் இதைப் பொதுவெளியில் பதிவு செய்வது வழக்கம்.

இதில் லஷ்மி சரவணகுமாரின் பிரச்சினை என்ன… அவருக்காகப் பரிந்து பேச வந்த கார்க்கி நிங்களே சொல்லுங்கள். சம்பந்தப்பட்ட அந்த ’10 மணி ராசாக்கள்’ யார் யார் என்று தெரிந்திருந்தும் வசு நாசூக்காக அதை பேசிவந்தார். பாருங்கள் இப்போது லஷ்மி சரவணகுமார் நேரடியாகவே பெயர் குறிப்பிட்டு எழுதும்படி என்னை தூண்டிவிட்டிருக்கிறார்.

அந்த ’10 மணி ராசாக்களில்’ உங்கள் கணவர் லஷ்மி சரவணக்குமாரும் ஒருவர் என்பதுதான் காலத்தின் சோகம். இது ஏதோ பொய்த் தகவல் இல்லை கார்க்கி, பாதிக்கப்பட்ட அந்தப் பெண் யார் என்று தெரிந்துகொள்ள விரும்பினால் நீங்கள் எனக்கு தனிப்பட்ட மெசேஜ் அனுப்பலாம். ஏனென்றால் நான் சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணிடம் அனுமதி பெற்றே இந்தப்பதிவை எழுதுகிறேன். (உண்மையில் அவரும் கடும் கோபத்தில்தான் உள்ளார்).

சரி அப்படி லஷ்மி சரவணகுமார் செய்வதுதான் என்ன? நீங்கள் அலைபாயுதே படம் பார்த்திருக்கிறீர்களா? அந்த மாதவனை நினைத்துக்கொள்ளுங்கள்… ஷாலினியிடம் மாதவன் புரப்போஸ் செய்யும் காட்சியையும் நினைத்துக்கொள்ளுங்கள். இப்போது அங்கு மாதவனுக்குப் பதில் லஷ்மி சரவணகுமார், ஷாலினிக்குப் பதில் அந்தப் பெண், டிரெயினுக்குப் பதில் ஃபேஸ்புக் சரியா…

இன்பாக்ஸ்:

மாதவன்: ஏய் நீ பேய் மாதிரி இருக்கே, ஏய் நீ பயங்கரமா இருக்க, உன்னையெல்லாம் எப்படி அந்த வxxxxxடு (ஊரின் பெயர்) தாங்குதோன்னு தெரியல

இதுதான் அவர் 10 மணிக்கு மேல் அனுப்பும் மெசேஜ். புரபோஸ் செய்வதிலும் உல்டா பண்ணும் அவரது பாணி வியப்புக்குறியதுதான்.

அதன் பிறகு அப்பெண்ணை சித்தி என்று அழைப்பது அவரது வழக்கம். நாங்கள் விருந்திற்கு அழைத்து வசு அவரை கருணையோடு மன்னித்து அனுப்பினாரே அதுபோல் அல்லாமல் இவர் புரப்போஸ் செய்ய விருந்தளிப்பார். அதுவும் எப்படி புரொப்போஸ் செய்வார் தெரியுமா… தான் காதலிக்கும் பெண்ணின் முன்னாலேயே கிண்டலாகச் சொல்வது போல் காதலைச் சொல்வது. ”இன்னைல இருந்து நான் சித்திய லவ் பண்ணலாம்னு இருக்கேன்” இதை அவர் சொன்னபோது அவர் காதலித்து வந்தப் பெண் அருகில்தான் இருந்திருக்கிறார். ஆனால் பாவம் சம்பந்தப்பட்ட அந்தப் பெண் அதை சற்று பொறுமையாக கையாண்டு.. கண்டித்து விட்டுவிட்டார். காதலிக்கும் பெண் முன்பே இப்படி ‘ஓப்பனாக’ பேசுகிறாரே என்று மற்றவர்கள் கருத வேண்டுமா? எத்தனை சீப் சைக்காலஜி இது? இப்படி மனைவி முன்னரே காதல் வசனம் பேசி மனிவியின் தோழியின் வாழ்க்கையைச் சீரழித்த கதைகளை நான் அறிவேன். தேவையென்றால் உங்களுக்குச் சொல்லவும் தயாராக இருக்கிறேன். (நீங்கள் என்னைத் தொடர்பு கொண்டால்).

அதன் பிறகு தோராயமாக 1 வருடம் மீண்டும் அவருக்கு ’சித்தி’ மீதான காதல் குறையவில்லை மீண்டும் இரவு 10 மணிக்கு மெசேஜ், ஃபோன்கால். இப்போது சித்தி டார்லிங் ஆகிவிட்டார். 2 மாதங்களுக்கு முன் அப்பெண்ணைத் தொடர்பு கொண்டு இந்த வருடம் முதல் நான் உன்னை லவ் பண்ணலாம்னு இருக்கேன் என்று சொல்ல அவர் உன்னைவிட முட்டாள் வேறு யாரும் இருக்க முடியாது என பதிலளித்திருக்கிறார். டார்லிங் என மெசேஜ் வேறு.. (எனக்கு சற்று குழப்பமாக உள்ளது அப்போது அவர் உங்களை வேறு காதலித்து வந்திருக்கிறார் இல்லையா).

எங்கள் வீட்டிற்கு வந்த அந்தப் பெண் மிகவும் மனம் நொந்து அவரின் இந்தக் கீழ்த்தரமான செயல் பற்றியும் இன்னும் சில ‘தோழர்கள்’ பற்றியும் சொல்லி வருத்தப்பட்டார். அது நடந்த 1 வார காலத்தில்தான் சென்னையில் அந்த நிகழ்வு நடந்தது. அதில்தான் வசு மீண்டும் மேற்சொன்ன கேள்வியைக் கேட்டார். ஆனால் பாருங்கள் அதில் கலந்து கொண்ட பெண்கள் வசுவின் கேள்வியை ரசித்துள்ளனர். ஆனால் கொதித்துள்ளது யார் யார் அபிலாஷ் மற்றும் லஷ்மி சரவணகுமார்.

ஆமாம், பரிந்து பேச வந்த கார்க்கி அவர்களே லஷ்மி சரவணகுமாருக்கு ஏன் இத்தனை சீற்றம்…  ஒருவேளை குற்ற உணர்வோ? இல்லை வசு இப்படி பேசிவிட்டால் பெண்கள் சுதாரித்துக்கொள்வார்களே… தான் யாருக்கு காதல் இலக்கியத்தை இனி வாசிப்பது என்ற அச்சமோ?

1) சரி இதெல்லாம்கூட போகட்டும் வசு பேசினால் வசுவிடம் எதிர்வினையாற்ற வேண்டியதுதானே? ஏன் தொடக்கம் முதல் அவர் என்னுடைய வாழ்க்கைத் தேர்வை எனது எழுத்தார்வத்தை, எனது சமூகப் பணியை கொச்சைப்படுத்தி எழுதி வந்திருக்கிறார் என்பதை அவரை விளக்கச் சொல்ல முடியுமா? என்னைப் பற்றித் தவறாக எழுதிவிட்டு வசுவிடம் மன்னிப்பை எஸ் மூலம் கெஞ்சி வைத்ததற்கு என்ன அர்த்தம். வசு மன்னிப்பான்… நான்…?

உண்மையில் அவருக்கு என் கடந்தகால வாழ்க்கைத் தெரிய வேண்டும் அதை வைத்து ஒரு புனைவு எழுத வேண்டுமென்றால் என்னிடமே உரையாடி தெரிந்துகொண்டிருக்கலாமே… அதைவிடுத்து ஏன் ஒரு கற்பனைப் பகடி… ? அதில் அவர் அடையும் ஆர்கசம் என்ன?

2) நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் வசுவைப் பற்றி தெரியும், என்னைப் பற்றி தெரியாது என – வசுமித்ரவைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அவரைப் பற்றி மட்டும் உங்களுக்கு எப்படித் தெரியும்?.. லஷ்மி சரவணக்குமார் சொல்லித்தான் தெரியுமா இல்லை வேறு யாரேனும் சொல்லித் தெரியுமா.. அதையும் விளக்கவும்

3) முகப்புத்தகத்தில் அவருக்கு ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பினீர்களே அதிலேயே மேரீட் டு என என் பெயர் வருமே… இருவரும் பதிவு எழுதி இருக்கிறோம் என்று சொன்ன நீங்கள் அதை கவனிக்கவில்லையா? இவ்வளவு நடந்தும் நீங்கள் மீண்டும் மீண்டும் உங்கள் ‘அண்ணன்’ வசுமித்ரவுக்கு மட்டும் தனிப்பட்ட மெசேஜ் அனுப்பி பேசுவதை நான் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்? ஏனென்றால் லஷ்மி சரவணகுமார் சித்தியை லவ் பண்ணலாம் என்கிறார்… லஷ்மி சரவணக்குமாரின் குடும்ப கலாச்சாரம் எனக்குச் சற்று குழப்பமாக உள்ளது… 

வசுமித்ர என் ஆசான், அவன் என் கணவனல்ல… என் வாழ்நாள் தோழன் இப்படியெல்லாம் பேசுவது நான்தான். இதில் உங்கள் கணவருக்கு என்ன பிரச்சினை? அவர் ஏன் தொடர்ந்து எங்கள் இருவரையும் குறிவைத்து எழுதுகிறார். அவருள் இருக்கும் பொறாமை உணர்வுதான் என்ன? திருமணமான பெண்ணைக் காதலித்து திருமணம் செய்ய முடியாமல் போன சம்பவம் ஏதேனும் அவர் வாழ்வில் நடந்துள்ளதா? சரி அதற்கு அவர் அதற்கான காரணத்தை நொந்துகொள்ள வேண்டுமே தவிர, எதற்கு எங்களை வம்புக்கு இழுக்கிறார்?

அவரின் இந்த வக்கிரச் செயல்பாட்டில் (pervert act) உங்களுக்கு உடன்பாடு உண்டா இல்லையா லஷ்மி சரவணகுமாருக்காகப் பரிந்து பேசவந்த கார்க்கி அவர்களே....

இலக்கியத்தின் பெயரால் சிலர் இப்படிப் பெண்களிடம் இரவு வேளைகளில் தொந்தரவு செய்வது குறித்து பொதுவெளியில் பேசும், அதைக் கண்டிக்கும் உரிமை ஒருவருக்கு உள்ளதா இல்லையா? இதைப் பேசினால் சமப்ந்தப்பட்டவர் தன் மனைவியை சந்தேகப்படுகிறார் என்பது சரியா? முற்போக்கு முகமூடி அணிந்து பெண்களுக்கு தொல்லை கொடுப்பது, கணவன் மனைவி உறவில் குழப்பம் விளைவிப்பது இவற்றைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

ஒன்று செய்யுங்களேன்… இனிமேல் நீங்கள் தினம்தோறும் இரவு 10 மணிக்கு வசுமித்ரவுக்கு ஃபோன் செய்யுங்கள் இரவு முழுக்க இலக்கியம் பேசிக்கொண்டிருங்கள். லஷ்மி சரவணகுமார் எத்தனை நாட்கள் அதை சகித்துக்கொள்கிறார் என்று ஒரு ரியல் டைம் கேஸ் ஸ்டடியைத் தொடங்குவோம்…..

இந்த கேஸ் ஸ்டையோடி இங்கு முற்போக்கு முகமூடி அணிந்து திருமணத்திற்குப் பின் இரவு வேளைகளில் ஆணும் பெண்ணும் பேசிக்கொள்வது அவரவர் சுத்ந்திரம் என்று போர்குரல் எழுப்பும் அத்தனை இலக்கியவாதிகளின் மனையோடும் நான் தினம் தினம் இரவு முழுக்க வசுமித்ரவை பேசச் சொல்கிறேன். இப்போது அடுத்தவர் மனைவிக்காக வக்காலத்து வாங்கும் முற்போக்குவாதிகளின் மனநிலையையும் சேர்த்து கேஸ் ஸ்டடி செய்வோம்.

இலக்கியத்தின் பெயராலும், படைப்புத்திறனின் பெயராலும், இன்னும் பல யுத்திகளைப் பயன்படுத்தி ஆண்கள் பெண்களுக்கு வலை வீசுவது, காதல் என்ற பெயரில், சுதந்திரம் என்ற பெயரில் பெண்களின் வாழ்வைச் சீரழிப்பது இது குறித்தெல்லாம் லஷ்மி சரவணகுமாருக்கு, உங்களுக்கு இன்னும் இதர முற்போக்குவாதிகளுக்கு கவலை இல்லாமல் இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அது கவலை தரும் விஷயமாக இருக்கிறது. 

முற்போக்கின் பெயரால் சீரழிவுகளை என்னால் ஒரு போதும் ஆதரிக்க முடியாது. (எனக்கும் அத்தகைய சில அனுபவங்கள் உண்டு).  சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஒரு சிக்கலான பிரச்சினையை இப்படி எள்ளல் செய்து மகிழ்கிறீர்களே வெட்கமாக இல்லை. இதற்குப் பெயர் ஸ்டேட்டஸா? உரையாடலாம் வாருங்கள் என்பதன் பொருள் தெரியுமா உங்கள் இருவருக்கும்? ஒருவரிடம் நாங்கள் உங்களை அரவணைத்தே பேச விரும்புகிறோம் என்று சொல்லாமல் சொல்லும் ஒரு மரியாதைக்குறிய ஒரு பதம். அதையுமா எள்ளல் செய்வீர்கள்? ச்சே எத்தனை அருவருப்பாக உள்ளது உங்கள் செயல்பாடுகள்.

என் கோபம் இப்போது பெருகிவிட்டது.  இனி அவர் பொதுவெளியில் மன்னிப்பே கோரினாலும் நான் இந்தப் பதிவுகளை நீக்க மாட்டேன். அவரின் செயல்களுக்குறிய பதிலை நேரிலேயே வழங்குவேன். நான் முன்னர் சொன்னபடி காலணி அணிய அனுமதி இல்லாத கூட்டம் எனினும் நான் காலணி அணிந்தே உள்ளே வருவேன்.

இப்படிக்கு,
உங்களின் அண்ணா உறவால் அண்ணியாகி, ஒரு கேடுகெட்ட தம்பிக்கு அக்காவாகிய உங்களின் அன்புக்குரிய அண்ணி,
கொற்றவை.

Related Posts:

http://saavinudhadugal.blogspot.in/2014/02/blog-post_17.html

http://saavinudhadugal.blogspot.in/2014/04/blog-post.html

http://saavinudhadugal.blogspot.in/2014/04/blog-post_1.html

http://saavinudhadugal.blogspot.in/2014/04/blog-post_3.html








லஷ்மி சரவணகுமாருக்கு,



எனது வாழ்நாள் தோழியான தோழர் கார்கி அவர்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் ஃபோன் செய்து நிறைய பெண்கள் தொந்தரவு செய்கிறார்கள். இவ்வாறு தொலைபேசிக் கொள்வதன் மூலம் தங்களது கலை தாகத்தை தீர்த்துக் கொள்வதாக அபிப்பிராயப்படும் அவர்களிடம் இது குறித்து உரையாட வேண்டும்... சசி கலா - வாங்க உரையாடுவோம்...
Top of Form
Like ·  · Share
·         Gargy ManoharanRiyas Quranaசசி கலா and 32 others like this.
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn1/v/t1.0-1/c7.0.40.40/p40x40/1170800_518310991577094_448187130_t.jpg?oh=2538f8d56af3f393411dadacecf35492&oe=53AA6187&__gda__=1404460634_f1da6ecc78e5299c346eac7bfdacdf2b
Moni TheMass நானு மாமா???
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn1/t1.0-1/c13.0.40.40/p40x40/1939744_776275399073934_2096988559_s.jpg
Gargy Manoharan தோழர் இப்போ தான் கரெக்ட் ஆகி இருக்கோம். ஏனுங் தோழர் அதுக்குள்ள உரையாட கூப்பிடுறீங்க
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-ash1/t1.0-1/c16.0.40.40/p40x40/998417_766510703359103_899253258_s.jpg
Lakshmi Saravanakumar Moni TheMass - நீங்களும் தான் மோனி அவர்களோ... அது எப்படி உங்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் இன்னொருவரின் தோழிக்கு தொலைபேசும் தைர்யம் வருகிறது. கார்கி அவர்கள் எத்தனை முக்கியமான ஆளுமை என்பது தெரீயுமா? நிங்கள் எல்லாம் தொலைபேசி தொந்தரவு செய்வதன் மூலம் அவர் இந்த சமூகம் குறித்து சிந்திக்க முடியாமல் அவதிப்படுகிறார்...
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-ash1/t1.0-1/c16.0.40.40/p40x40/998417_766510703359103_899253258_s.jpg
Lakshmi Saravanakumar மேலும் இந்த நாற்றமெடுத்த் சமூகத்தில் அடுத்தவரின் அந்தரங்கம் குறித்து சதாவும் அபிப்பிராயங்கள் சொல்லும் கள்ள புத்தி கசியும் அறிவுஜீவிகள் கார்கி அவர்களிடம் பேசுவதை நான் விரும்பவில்லை.... மலைகள். காம்மில் வந்த அவரது கதையை வாசித்த தமிழ் நாட்டில் முக்கியமான இலக்கியவாதிகளெல்லாம் ஆறு மணீ நேரம் ஏழு மணிநேரம் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் முட்டாளா என்ன?
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn1/v/t1.0-1/c7.0.40.40/p40x40/1170800_518310991577094_448187130_t.jpg?oh=2538f8d56af3f393411dadacecf35492&oe=53AA6187&__gda__=1404460634_f1da6ecc78e5299c346eac7bfdacdf2b
Moni TheMass  இந்த ஆட்டத்துக்கு நான் வரல எனக்கு நம்பரே தெரியாது!!! 
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-ash1/t1.0-1/c16.0.40.40/p40x40/998417_766510703359103_899253258_s.jpg
Lakshmi Saravanakumar அன்புத் தோழர் மோனிக்கு... Moni TheMassஉங்களுக்கு தோழி கார்கி அவர்கள் குறித்து அனேக விசயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.... அவருக்கு நான் ஒரு இலக்கிய ஆசான் மட்டுமே, எதை வாசிக்க வேண்டும் எப்போது வாசிக்க வேண்டும் என்பதை மட்டுந்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்... அதை வைத்துக் கொண்டு அவர் பயணப்பட்டிருக்கும் தூரம் அசாத்தியமானது.
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn1/t1.0-1/c13.0.40.40/p40x40/1939744_776275399073934_2096988559_s.jpg
Gargy Manoharan தோழர் என்னுடைய சமூகப்பணிகளை இப்படி முடக்கப் பாக்கறீங்களே. வாழ்நாள் தோழர் செய்யற காரியமா இது. ஒரு நாலு பிகர கரெக்ட் பண்ண விடுறீங்களா...
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-ash1/t1.0-1/c16.0.40.40/p40x40/998417_766510703359103_899253258_s.jpg
Lakshmi Saravanakumar இது குறித்து கூடுதலாக உரையாட தோழர்கள் மனோ. மோகன் & Nesamithran Mithra இருவரையும் அழைக்கிறேன்.
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-ash1/t1.0-1/c16.0.40.40/p40x40/998417_766510703359103_899253258_s.jpg
Lakshmi Saravanakumar வாங்க உரையாடுவோம்.....நான் யாரையும் தடை செய்யவில்லை... உரையாடலாம்...
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn1/t1.0-1/c13.0.40.40/p40x40/1939744_776275399073934_2096988559_s.jpg
Gargy Manoharan Lakshmi Saravanakumar ஹலோ மிஸ்டர் என்ன நடுவுல சம்பந்தம் இல்லாம ஆம்பள பசங்களை கூப்பிட்டுகிட்டு.. இன்னும் நாலு பொம்பள பிள்ளைக பேரை டேக் பண்றது..
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-ash1/t1.0-1/c16.0.40.40/p40x40/998417_766510703359103_899253258_s.jpg
Lakshmi Saravanakumar ஏற்கனவே இதுகுறித்து நான் விளக்கம் கேட்டதால் ந்தமிழ்நாட்டில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட ஆளுமைகள் மன்னிப்புக் கேட்டுவிட்டார்கள்.
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn1/t1.0-1/c13.0.40.40/p40x40/1939744_776275399073934_2096988559_s.jpg
Gargy Manoharan யாருகிட்ட
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-ash1/t1.0-1/c16.0.40.40/p40x40/998417_766510703359103_899253258_s.jpg
Lakshmi Saravanakumar தோழர் உரையாடலிலி குறுக்கிடாதிங்க..... ஆரோக்யமான கருத்துக்கள மட்டும் பகிருங்க வணக்கம்.
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn2/t1.0-1/p40x40/1383513_10201431926774173_395891395_t.jpg
வில்லன் வில்லன் //நடுவுல சம்பந்தம் இல்லாம ஆம்பள பசங்களை கூப்பிட்டுகிட்டு.. இன்னும் நாலு பொம்பள பிள்ளைக பேரை டேக் பண்றது..//
இதை நானும் ஆமோதிக்கிறேன்...

(ல.ச.கு: டேய்ய்.. நீ யார்ரா நடுவிலே...
நான்: இல்லே காரமடைக்கு போனும். பஸ் அஞ்சு மணிக்குத்தானாம். அதான் ஒரு டைம் பாசுக்கு.....)
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn2/t1.0-1/p40x40/1476252_570984052970703_795281564_t.jpg
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-ash1/t1.0-1/c16.0.40.40/p40x40/998417_766510703359103_899253258_s.jpg
Lakshmi Saravanakumar தோழர் அபிலாஷ் நான் யாரையும் தடை செய்யவில்லை.... திறந்த மனதுடன் உரையாடுவோம்....
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn1/t1.0-1/c0.0.40.40/p40x40/1016318_647441545312547_2117162631_t.jpg
Kumar Inthiran's photo.


மேலே உள்ள பதிவு Bottom of Form

இரவு 10 மணிக்கு மேல் வரும் தொலைபேசி அழைப்புகள் குறித்து பகடி செய்கிறது. இதில் உரையாடுவதற்காக சசிகலா மனோ மோகன் நேசமித்ரன் அபிலாஷ் ஆகியோருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது ஏன் என்பது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரியும். அவர்கள் தங்களது கருத்தைப் பதிவு செய்தால் அதையும் தெரிந்துகொள்ள ஆவலாய் உள்ளேன்.

மேலும் எனது முந்தையப் பதிவுகளைப் படித்தவர்களுக்கும், அதுமட்டுமல்லாது இலக்கியத்தை ’காதல்’களுக்கு துருப்புச் சீட்டாக பயன்படுத்தும் சில வக்கிரப்புத்திக்காரர்களைப் பற்றி பொதுவாக வசுமித்ர பேசி வந்திருப்பதைக் கேட்டவர்களும் இந்தப் பதிவில் ஒலிக்கும் அற்பத்தனத்தை நன்கு அறிவர். இறுதியாக நரனின் கவிதை புத்தக வெளியீட்டு விழாவிலும் வசுமித்ர இந்த கருத்தைப் பதிவு செய்ததையொட்டி அபிலாஷ் சந்திரன் சந்தேகக்கேஸ்களுக்கு ஒரு கதை என்று எழுதி சமூகத்திற்கு ஒரு ‘கருத்தை’ச் சொன்னார். இப்போது இரண்டு மாதங்கள் கழித்து நீங்கள் ‘உரையாட’ அழைப்பு விடுத்திருக்கிறீர்கள். இதில் நகைச்சுவை என்னவென்றால் உங்களுக்குப் பகடியும் ஒழுங்காகச் செய்யத் தெரியவில்லை. (என்ன இருந்தாலும் கோமதிநாயகம் போல் வருமா)

வழக்கம்போல் நீங்கள் உங்களது சீண்டலை தொடங்கிவிட்டு இப்போது மௌனம் காத்து வருகிறீர்கள். இந்த கள்ளமௌனத்திற்கு புறக்கணிப்பு என்று பெயரளிக்க முடியாது இதற்குப் பெயர் கயவாளித்தனம். ஒன்று துணிந்து இறங்க வேண்டும் இல்லையேல் இது போன்ற அவதூறுகளை எழுதக்கூடாது, இதென்ன கோழைத்தனம் எழுதுவதை எழுதிவிட்டு பின்னர் புறக்கணிப்பதாக ஒரு வேஷம் போடுவது.

மேற்சொன்ன பதிவில் இலக்கிய ஆசான் மட்டுமே, வாழ்நாள் தோழர், சமூகம் குறித்து சிந்திக்க முடியுமா, பாதிக்கும் மேற்பட்ட ஆளுமைகள் மன்னிப்பு கேட்டு விட்டனர்… இதற்குப் பெயர் பகடியா… அதுதான் உங்களுக்கு வரவில்லையே பிறகு ஏன் இந்த அவஸ்தை… தைரியமிருந்தால் வசுவையும் என்னையும் குறிப்பிட்டே எழுத வேண்டியதுதானே…

லஷ்மி சரவணகுமார் தொடர்ந்து நீங்கள் என் வாழ்க்கை பற்றி, என்னைப் பற்றி, என் மகளைப் பற்றி, என் திருமணம் பற்றி, என் துணைவர் பற்றி நீங்கள் இப்படி பகடி செய்வதற்கு காரணம் என்ன என்பதை நீங்கள் சொல்லியாக வேண்டும். உங்களை நேரில் சந்திக்க நேர்ந்தால் நான் எப்படி உங்களிடமிருந்து பதிலைப் பெற வேண்டுமோ அப்படிப் பெறுவேன். காலணிக்கு அனுமதி இல்லாத இடமாக இருந்தாலும் நான் காலணியோடே உள்ளே வருவேன்.


 Related Posts:

http://saavinudhadugal.blogspot.in/2014/02/blog-post_17.html 

http://saavinudhadugal.blogspot.in/2014/04/blog-post.html

http://saavinudhadugal.blogspot.in/2014/04/blog-post_1.html

http://saavinudhadugal.blogspot.in/2014/04/blog-post_9762.html