Jan 26, 2013

பாம்புகள், கணவன்மார்கள், ஆஷாலொதா மற்றும் நாங்கள்




பாம்புகள்கணவன்மார்கள்ஆஷாலொதா மற்றும் நாங்கள்
- ஷாஹீன் அக்தர்
தமிழில் - கொற்றவை

பாம்புகள் பற்றிய பயத்திலிருந்தும்கணவன்மார்களின் குரல்வளைப்பிடியிலிருந்தும் எங்களை மீட்டெடுக்க நாங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கையில் எங்கள் வாழ்வில் ஆஷோலோட்டாவின் வருகை நேர்ந்தது. எங்கள் கணவன்மார்கள் எங்களுக்கு உறுதி அளிக்கிறார்கள். யார் தான் பாம்புகளைக் கண்டு பயம் கொள்வதில்லைஅவர்கள் சொல்கிறார்கள், “ஏன் பாம்புகளைக் கண்டு பயம்கொள்கிறீர்கள்நாங்கள் இருக்கிறோம்!

அவர்களுடைய சொற்கள் எங்களுக்கு சிரிப்பை  வரவழைக்கிறது.  “எத்தகைய தைரியமிக்க ஆண்கள்!” என்று நாங்கள்சொல்லிக்கொள்வோம்.  கிளர்வுற்றுஅவர்கள் பின்நகர்ந்துதலைப்பாக்களை விரித்துபிளவுண்ட நாவை வெளிநீட்டி எங்களைச் சுற்றி வந்தார்கள். கணவன்மார்கள் பாம்புகள்அவர்கள் மனிதர்கள் இல்லை. மனிதர்கள்பாம்புகள் இல்லை.  கடும் குளிர் பனிக்காலத்திற்கு பின் நாங்கள் வெயிற்கால நிலங்களை அடைந்தவுடன் அவர்கள் எங்கள் மேல் உடலைக் கடிக்கிறார்கள்தங்கள் நாக்குகளை உள்ளிழுத்து எங்களை விடுவிக்கின்றனர். எங்கள் பாம்பு விளையாட்டு பாதியிலேயே நின்று விடுகிறது.  மீதமுள்ள இரவுகளில் நாங்கள் திறந்து கிடக்கும் உடல்களை மடித்தபடி பாம்புக் கனவுகளைக் காண்கிறோம்.  அடுத்த நாள் மனநோய் மருத்துவர் சொல்கிறார்: “பாலியல் ஒடுக்கம்.

ஆனால்” நாங்கள் சொன்னோம், “எங்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. எங்களுக்கு கணவன்மார்கள் இருக்கிறார்கள்.” அவர் அந்த கோப்பை மூடிஸ்டீல் நிலைப்பெட்டிக்குள் வைத்து பூட்டினார்.  அவரிடம் நாங்கள் மீட்பைக் கோரினோம். அவர் ஒரு கையால் இழுப்பறையை திறந்தவாறுமறுகையை அழைப்பு மனியின் மீது அழுத்தினார். பணத்தை வாங்கி வைத்தவாறுஅழைப்புமணியை அழுத்தி அடுத்த நோயாளிக்கு அழைப்பு விடுத்தார். எங்கள் நாற்காலியை விட்டு எழுவதைத் தவிற எங்களுக்கு வேறு வழி இருக்கவில்லை.  யார் பாம்புபாலியல் ஒடுக்கம் என்றால் என்னஅதை எவ்வாறு எதிர்கொள்வது என்று யோசித்தவாறு அறையை விட்டு வெளியேறினோம்.  வாயிலுக்கு வெளியில் ஆஷாலொதா நின்றிருப்பதை கண்டு எங்கள் முகத்தில் ஒரு விதமான கவலை தோய்ந்தது.

வெளியில் வாகனங்களின் ஓசை கேட்டதுஇந்த மக்களெல்லாம் எங்கு செல்கின்றனர் என்று வியந்தோம்.  ஒருவேளை நாங்களும் சென்றுவிட முடியுமாவிடுதலைக்கான நம்பிக்கை எங்களுக்கு சிறிதும் இல்லை.  பாம்புகளின் பயத்தால் நாங்கள் துன்புற்றபோதே கணவன்மார்கள் எங்கள் வாழ்வில் நுழைந்தார்கள்அப்போது தான் நாங்கள் அனுமதித்தோம். எங்கள் வாழ்நாளில் அவர்கள் வருகைக்கு முந்தைய காலத்தை கணக்கிடுவதானால் தோராயமாக அது முப்பதுநார்ப்பதுநார்பத்தி ஐந்து வருடங்கள் இருக்கும்.  நாள்பட நாள்பட எங்கள் வாழ்வு பாம்பு-நிறைந்ததாகவும்பாம்புக்குரிய தன்மையோடும் மாறியது. நிறைய பேருக்குநாங்கள் மேறுகொண்ட கணவன்மார்களின் கொள்முதலானது அதிர்ஷ்டத்தின் அறிகுறி.  இருபதுகளிலேயே முதிர்கன்னிகளாகிவிடும் பெண்கள் போல் நாங்கள் இல்லைநாங்கள் இன்னமும் வானலோக தேவதைகள் தரத்தில் இருக்கிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள்மேலோகம் பற்றிய கணவில் நாங்கள் சிறிது நேரம் மூழ்கியிருந்தோம்.  பின்னர் எங்களுக்குப் புரிகிறது – கணவன்மார்கள் எங்கள் ஷமான்கள் 1 இல்லைஅவர்கள் பாம்புகள் மனிதர்கள் இல்லைமனிதர்கள் பாம்புகள் இல்லை. இது யார்க்கும் தெரியவில்லையென்றாலும்மனநல மருத்துவருக்குத் தெரிந்திருக்கிறது. அவர் நீள நீளமான நோய் விவரக் குறிப்புகளை எழுதுகிறார். எங்கள் கோப்புகள் ஸ்டீல் இழுப்பறைக்குள் பத்திரமாக வைக்கப்படுகிறது. நாங்கள் சில மாத்திரைகளோடு அவர் அறையை விட்டு வெளியேறினோம்.

வெளியில் நின்று கொண்டிருந்தஆஷாலொதாவின் கால்கள் பலமிழந்ததுஅவளது இடுப்பெலும்பு வலியால் துடித்தது. அங்கிருந்த சுவற்றில் ஒரு சுவரொட்டி இருந்தது. அதில் இருந்த ஆண் அந்த கிராமத்தின் பெரிய வீடான போரோ-பாரி இல்லக் கிழத்தியின் மகனாக இருக்கும் என்று நம்பினாள். இது அவனுடைய வீடாகத்தான் இருக்கும். ஆஷா லொதா அந்த வீட்டிற்குள் நுழைய இரண்டு முறை முயன்றிருக்கிறாள்ஆனால் காவலாளிகள் தடுத்துவிடுகின்றனர். அவளது கண்கள் முற்றத்தை கடந்து மீன்தொட்டிகள் இருக்கும் அறையை வாயிற் கதவு வழியாக நோக்கியது. தகர டோச்சாலா-குடிசை 2 போல நகரத்து மீன்களுக்குக் கூட ஒரு சொந்த வீடிருக்கும் என்று அவளது தீதிமாஅதாவது பாட்டி சொல்லவே இல்லை.  போரோ-பாரியில்இல்லக்கிழத்திகள் பானையில் கூட உயிருள்ள ஐந்து மீன்களையாவது வைத்திருந்தனர். நகரங்களுக்கு வந்தவுடன் மக்கள் மாறிவிடுகின்றனர்.  மீன் தொட்டிக்-கடலில் நீந்தும் மீன்கள் ஆஷாலொதாவிற்கு மகிழ்வை அளிப்பதில்லைமாறாக அவை பசியூட்டுகின்றன.  நகர மக்களுக்கு உணவு கிடைப்பதில்லை என்பது தீதிமாவுக்கு தெரியுமா என்று வியந்தாள். 

இரண்டு நாட்களாக ஆஷாலொதா காய்ந்துபோன வயிறோடு திரிந்து கொண்டிருக்கிறாள். கிராமத்தில்அவளுடைய வெளிறிய முகமாவது வீட்டிற்குள் அழைக்குமாறு இல்லக்கிழத்தியை தூண்டியிருக்கவேண்டும்இந்தாசாப்பிடு என்று யாரும் சொல்லப்போவதில்லை. அவள் கேட்க வேண்டும். எப்படி உணவு கேட்க வேண்டும் என்று அவளுக்கு தெரியவில்லை.  கண்ணீர் நிரம்பியுள்ள மீனைக் காண்கிறாள்அங்கு தண்ணீருக்குள் தண்ணீர் மட்டுமே இருக்கிறதுஅங்கு தீதிமா இருக்கிறாள்.

பஞ்சம் கண்டிருந்த வருடத்தில்வயிற்றில் ஒரு புற்றுநோய் கட்டியுடன் தீதிமா நகருக்குள் வந்தாள். இந்த நகரம் அவள் மீது என்ன சாபத்தை ஏவியதோஇரண்டு வருடங்கள் கழித்து இறப்பதற்காகவே அவள் கிராமம் திரும்பியிருந்தாள். பாயில் படுத்துக்கொண்டு வலியினால் புரண்டு கொண்டே புலம்பினாள். இறுதி காலங்களில் மன அமைதியே கிட்டவில்லை. “ஆஷா இளமையாயிருக்கும்போதே நகரத்திற்கு சென்றுவிடுநான் சொல்கிறேன் சென்றுவிடு” என்று சொன்னாள். “உன் இளமைக்கு மதிப்பிருக்கும்நகரம் உன்னை கைவிடாது” என்றாள்.  சுடுகாட்டில் பச்சை மூங்கிலுக்குள் அவள் சாம்பலானாள்.  எந்த சந்தையை அலசி ஆய்ந்து அவள் தன் அறிவை வளர்த்துக் கொண்டாள் என்று உயிரோடிருக்கும்போது அவள் சொல்லவில்லை.  அவள் இறுதியாக உச்சரித்த சொற்கள், “ஒரு நாள் உனக்குத் தெரியும்.
ஆனால் சைத்ரா மாதத்தின் இறுதி ஆண்டில் தீதிமா என்ன சொல்ல வந்தாள் என்பது ஆஷாலொதாவுக்கு தெரியவில்லை. அசுவினி மாதத்தின் போது மூட்டுவாதம் கணவனை செயலிழக்கச் செய்தது. அவருடைய நாவைத் தவிர எல்லாம் மறத்துப் போனது.  ஒரு அசுவினி மாதம் தொடங்கி அடுத்த அசுவினி வரைவருடம் முழுவதும்கார்த்திகைஅக்ரஹயோன்பௌஷ்மாக்ஃபல்குன்சைத்ரா என்று தொடர்ந்தது – இந்த வருடங்களில் பாம்புக் கணவு தொடர்ந்தது.

மனநல மருத்துவமனை வாயிலில் ஆஷாலொதாவின் முகத்தில் நம்பிக்கை படர்வதைக் கண்டு நாங்கள் வியப்புற்றோம். அவளை நோட்டமிட்டவாறு கேட்டோம் “உனக்கு உடம்பு சரியில்லையா?”

ஆஷாலொதா கண்களை உருட்டிபடி எங்களைப் பார்த்தாள். அவள் கண்கள் பனித்தது. அவளது வறண்ட உதடு அசைந்தது. “எனக்கு எந்த நோயும் இல்லை. ஆனால்…..”

ஆனால்?”

நான் இரவுகளில் பாம்பைக் காண்கிறேன்.

இப்போது எங்கள் கண்கள் பனித்தது. அவளது பலவீனமான மணிக்கட்டைக் கவனித்தோம். “மருத்துவரைக் காணவேண்டுமா?”

இல்லை!” என்று சொன்ன ஆஷாலொதா பின் நகர்ந்தாள்

நாங்கள் அவளை நோக்கி நடந்தோம். “பின் ஏன் இங்கு வந்திருக்கிறாய்?”

இடதுபக்கம் இருக்கும் சுவற்றை நோக்கி நகர்ந்தாள் ஆஷாலொதா. அதன் மீது நகராட்சி ஆணையர் பதிவிக்கு போட்டியிடும் ஒருவரின் புகைப்படம் இருக்கும் ஒரு தேர்தல் சுவரொட்டி இருந்தது. அவள் தனது கழுத்தைக் கொக்கு போல் உயர்த்தி “நாண் போரோ-பாரி இல்லக்கிழத்தியின் வீட்டிற்கு செல்ல வேண்டும்எனக்கு பசிக்கிறது.

நாங்கள் வியப்படைவதைக் கண்டு அவள் வருத்தம் கொண்டாள்.  இந்த வீடு இல்லக் கிழத்தியின் மகனுடயதில்லை என்றால் பின்னர் இது யாருடையது? “அவர் இங்கு வசிக்கவில்லையா?” ஆஷாலொதா அந்த சுவரொட்டியை தொட்டாள்.

இல்லை,” என்றோம்

அதிர்ச்சியுற்றாள்சிரித்தபடியே அவள் “அதே முகம். இல்லக்கிழத்தியின் மகனுக்கும் இவனுக்கும் ஒரே முகம்.

தீதிமா சொல்லியிருக்கிறாள் ஒன்றே போல் தோற்றமளிக்கும் நபர்கள் இருக்கிறார்கள் என்று.  ஆனால் வித்தியாசங்களும் இருக்கும். ஒரே நபரின் இரு கைகள் கூட ஒன்றாக இருப்பதில்லை.  ஒரு மார்பு மற்றொரு மார்பை விட பெரியதாய் இருக்கிறது. மார்புக் காம்புகள் நிறத்தில் மாறுபடுகின்றன.  இந்த உடல் பாடங்களை தீதிமாவிடம் பயின்றிருந்தாள் ஆஷாலொதா.

தீதிமா ஒரு இல்லக்கிழத்தியாக இருந்தவள். அவள் ‘மசாஜ்’ செய்பவளும் கூட. ஒரு கர்பிணியின் வயிறு குழந்தைப் பேறுக்கு முன்னும்பின்னும் மாறுகிறது. அப்போது அவளது உடல்அவளுடையதல்ல. பேறுகாலம்பிரசவ காலங்களில் தீதிமா அழைக்கப்படுவாள்ஒரு வைக்கோல் பந்ததை ஏற்றிக் கொண்டு “நீ வருகிறாயா?” என்று கேட்பாள். ஆஷாலொதா முன்னால் செல்லதீதிமா பந்ததத்தோடு தொடர்வாள். வயல்வெளிகளிடையே ஓடும் குறுகிய பாதையில் தனது கழுத்தை சுற்றியிருக்கும் கயிற்றில் எண்ணைப் புட்டி ஆடிக்கொண்டேயிருக்க ஓடுவாள். பின்னால் இருந்து தீதிமா “ஏய் சர்க்கஸ் துடுக்குக்காறிநில்!” என்று கத்துவாள். வயல்களைக் கடந்த பின்புதான் ஆஷாலொதா நிற்பாள். ஆவிகளின் இராச்சியம் நிகழும் சுடுகாடு வாயிலாக அது இருக்கும்.  அந்த இடத்திலிருந்து அவளுக்கு தீதிமாவும்தீப்பந்தமும் தேவைப்படும்.  மீதமுள்ள பாதை முழுவதும் கண்களை மூடிக்கொண்டுதீதிமாவின் இடுப்பை பற்றிக் கொண்டுராமாராமா என்று உச்சரித்தவாறு நடப்பாள். அந்த மினுமினுக்கும் வெளிச்சத்தில்ஒரு பெண்ணின் உடல் நடுக்கத்துடன் விழித்தெழுவதைக் கண்டாள்.  சட்டி போன்ற வடிவம் கொண்ட தொந்தி உடைய ஒரு பெண்மார்புகள் பெரிதாயும்திரவத்திடத்துடனும் இருந்தது.  தீதிமாவின் விரல்களில் இருந்து எண்ணை வழிகிறதுஅவை அந்த வழுவழுப்பான மலைகளின் உச்சியை தொடவில்லைஅப்படியே பறந்து விட்டது.  அந்த அறையின் வெம்மைமூடிய காற்றுநடுங்கும் உடல். ஆஷலொதா அந்த உயர்ந்த மலைகளில் உரங்கிக் கொண்டிருக்கிறாள். தன் தொந்தியிலிருந்து குழந்தையை வெளியில் இழுத்து இந்த அறையிலிருந்து அந்த அறைக்கு மாற்றும் பெண்தீதிமாவின் முந்தானையில் படியால் அளந்த அரிசியை இடும் பெண் – ஏதோ ஒரு தனிப் பிறவி போல தோன்றும் அந்த பெண்ணை பகலின் வெளிச்சத்தில் அவள் பார்ப்பதேயில்லை.

ஆஷாலொதாவிற்கு பிரசவ நாள் கடினமாக இருந்தது. தீதிமா பந்தத்தைக் கொளுத்துவாள்கதவை பின்னால் இருந்து தாழிடுவாள்தனது பேத்தியை அனாதை போல் வீட்டில் விட்டுச் செல்வாள்.  ஆஷாலொதாவின் உடம்பு பயத்தால் வலிக்கும்.  பல வருடங்களாக அந்த சமயங்களில் தீதிமாவின் நடவடிக்கை ஒரு புதிராக இருக்கும்.  சிக்கலான பிரசவங்கள் இரண்டு முதல் மூன்று நாள் வரை கூட நீடிக்கும்.  அந்த நாட்களில் வெத்தலையை மென்றபடி தீதிமா மிகவும் தீவிரமான சிந்தனையில் இருப்பாள்.  நேரம் கிடைக்கும் போது வீட்டிற்கு வருவாய்ஆஷலொதாவிற்கு வீட்டு வேலைகளைக் கொடுப்பாள். வெத்தலை எச்சிலைத் துப்பியபடி சென்றுவிடுவாள்.  “ஆஷா பிரகாசமான ஒரு குழந்தை பிறந்திருக்கிறதுவா வந்து பார்” எனும் அழைப்புக் குரலுக்காக முற்றத்தில் காத்திருப்பாள் ஆஷா.

ஆஷாலொதாவுக்கு செய்வதற்கு நிறைய பணிகள் இருந்தது. உமியைப் போட்டு நெருப்பேற்றும் மண் பாண்டத்தை அவள் கவனமாக பாராமரித்தாள்.  குழந்தை பெற்ற தாயின் வயிற்றில் ஒத்தடம் கொடுப்பதற்காக தீதிமா அதை பயன்படுத்துவாள். குட்டிக் குழந்தையை போர்வையில் போர்த்தி கொண்டுவா என்று தீதிமா சொல்லஅவள் அதை செய்வாள்.  போர்வையை பிரித்துதீதிமா குழந்தையின் வாயில் சர்க்கரை தண்ணீர் வைப்பாள். குழந்தை அழும்போதுதாய் தனது முலைகளை குழந்தையின் வாயில் திணிப்பாள். வாயைப் பிளந்தபடிஆஷாலொதா குழந்தை பால் குடிப்பதை பார்த்துக் கொண்டிருப்பாள். இதுவும் வேலைதான். அவளுக்கு தாகம் ஏற்படும்.  அவளது தாயின் முகம் நினைவுக்கு வரவில்லை. எழுந்து சென்று கை-பம்பை அடித்து தண்ணீர் அருந்தினாள்.  ஆனால் அவளால் வெளியில் வெகு நேரம் இருக்க முடியவில்லை.  அந்த உமியின் நெருப்பு வாசனைகுழந்தையின் உதட்டிலிருந்து மெத்தையில் வழியும் பாலின் வாசனைமெல்லிய புடவை போர்த்தியத் தாயின் திறந்த மேனி எல்லாம் சேர்ந்து அவளை இழுந்த்து – தீதிமா மசாஜ் செய்வதன் மூலம் அந்த உடலை சற்று ஆசுவாசப் படுத்தினாள்.   அவள் குழந்தையை தன் கால்களில் கிடத்தினாள். குழந்தையை முன்னும் பின்னும் ஆட்டிபாடல்கள் பாடினாள்.  புதிர் நிறைந்த அந்த மகப்பேறு வீட்டில் ஆஷாலொதா வளர்ந்தாள்.

என்னை நீங்கள் பணிக்கு எடுத்துக் கொள்வீர்களாநான் குழந்தைகளை நன்கு பராமரிப்பேன்.

அவளது வேண்டுகோள் எங்களுக்கு கேட்கிறதுஆனால் எங்கள் பதில், “எங்களுக்கு குழந்தைகள் இல்லை.

அவள் எங்கள் உடல்களைக் காண்கிறாள். தொந்திபெரிய மார்பு இவற்றை தேடுகிறாள்.  ஏமாற்றம் கண்களில் தெரிகிறது. பெருமூச்சு விட்டபடி எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கிறாள். “நீங்கள் கர்பம் கொள்ள மாட்டீர்களாஎப்போது கொள்வீர்கள்?”  எங்கள் மௌனத்தைக் கண்டு கண்கள் விரித்தாள். என்ன விதமான தரிசு நிலமிதுஇப்படி ஒரு நகரத்தைப் பற்றி தீதிமா சொன்னதே இல்லையே! மரணத்திற்கு முன் அவளுக்கு நல்ல கிழடு தட்டிவிட்டிருந்தது.  இரண்டு நாள் கழித்து இறக்க வேண்டியவள்நகரத்தினால் துக்கம் கொண்டு முன்னரே இறந்து விட்டாள். புதிய பாய் சுடுகாட்டில் எரிந்து சாம்பலானது.  அப்போது இருந்தது போல் இப்போதும் எல்லாம் பயனற்றது. இந்த நகரத்தில்தான் அவள் வாழ்ந்தாள்கிராமத்தில் முடமான கணவன் – ஆஷாலொதா தடுமாற்றத்தில் நெளிந்தாள்.

நாங்கள் அமைதியாக இருந்தோம். பின்னர் சொன்னோம், “எங்களுக்கு இரவுகளில் பாம்புக் கணவு வருகிறது.” எங்கள் சுமை குறைந்தது போல் உணர்ந்தோம்.  மனநல மருத்துவருக்குப் பிறகு ஒரு பசித்த பெண்ணிடம் மீட்பைக் கோரி நின்றோம். அவளுக்கும் பாம்புக் கணவுகள் வந்தது.

எங்களது பாவமன்னிப்பு ஆஷாலொதாவின் மனதில் புதிய சிந்தனைகளைத் தூண்டியது. மெல்ல அது மகப்பேறுமகப்பேறு இல்லம் என்பதைத் தாண்டி சென்றது. எங்களைப் புதுமையாகப் பார்த்தாள். மற்ற காரணங்களுக்காக உடலுக்கு கவனிப்பு தேவைப்படுகிறதுஅக்காரணங்களை எளிதில் புறம் தள்ளி விட முடியாது.  தீதிமாவுக்கு மகப்பேறு பார்க்கவும்மசாஜ் செய்யவும் மட்டுமே தெரியும். பஞ்ச காலங்களில் மசாஜ் நின்றுவிடும். புதிய குழந்தைகளின் வரவு பற்றி இப்போதெல்லாம் அறிவிப்பு வருவதில்லை.  தாய் மற்றும் குழந்தைகளின் வாழ்வின் மதிப்பு குறைந்து வருகிறது.  ஆனால் பஞ்சத்தால் உயிரிழக்க மக்கள் தயாராக இல்லை. நகரத்திற்காக கிராமத்தை விட்டு வெளியேறினாள் தீதிமா.  இப்போது ஆஷாலொதா நகரத்தின் வெறுமையைக் கண்டாள்.  அப்படியென்றால் தீதிமா இங்கு என்ன செய்தாள்.  கருவற்ற எங்களது உடல்களில் தீதிமா பற்றிய புதிருக்கான விடையைத் தேடினாள். “உடலை எப்படி கவனிக்க வேண்டும் என்று எனக்கு தெரியும்என்னை பணிக்கு அமர்த்துகிறீர்களா?”

தெருவோரம் இருக்கும் குப்பைத் தொட்டியில் மருந்துகளை வீசிவிட்டுஆஷாலொதாவோடு நாங்கள் வீடு திரும்பினோம்.  எங்களது பணிப் பெண்கள் சமையலறையில்மாடிப்படிகளுக்கு கீழ்அழுக்கான கம்பளிகளின் மேல் உறங்கிக் கொண்டிருந்தனர். சுத்தமான ஒரு சிறு அறையை ஆஷாலொதாவுக்கு வழங்கினோம்.  வெளிர் ஆரஞ்சு நிற இரவு விளக்கு வைத்தோம்.  கொசுவலைக்கு மேல் ஒரு காத்தாடி முழு வேகத்தில் சுழன்று கொண்டிருந்தது.  இரவு விளக்கு ஸ்டாண்டில் புதிய மலர்களை வைத்தோம்  எங்கள் அறைக்கும் ஆஷாலொதாவின் அறைக்கு இடையே இருக்கும் பொது குளியல் அறையின் கதவு திறக்கப்படும் போது கிரீச் ஓசை கேட்கும்.  அதில் எண்ணை ஊற்றி அந்த துரு பித்த வாயை அடைத்தோம்.  எங்கள் கணவன்மார்களுக்கு கடும் கோபம். அவள் என்ன பெரிய ஜமீன் வீட்டு மகளா இத்தனை சிறப்பு ஏற்பாடுகள்மென்மையான மெத்தைகள் என்றனர். மென்மையான மெத்தைக்கு அவர்களுக்கு மட்டுமே உரிமை இருந்தது.  எங்களுக்கு அவர்கள் மேல் கடும் கோபம் வந்தது. சிற்றலைகள் என்று கண்டுள்ளாமல் விட்டுவிட்டோம். அவர்களுக்கு கோபம் பெருகியதுஅதே கேள்விகளை திரும்ப திரும்ப கேட்டனர். நாங்கள் சொன்னோம், “ஆஷாலொதாவுக்கும் பாம்புக் கணவுகள் வருகிறது.

பாம்பு கணவு பற்றிய எங்களது பயம் எங்கள் கணவன்மார்களுக்கு மகிழ்ச்சி அளித்தது.  பிளவுண்ட நாக்குகளை நீட்டியவாறு உவகையோடு கழுத்து முதல் பாதம் வரை எங்களைச் சுற்றிக் கொண்டார்கள். கணவன்மார்கள் பாம்புகள்-மனிதர்கள் இல்லை. மனிதர்கள் பாம்புகள் இல்லை. குளிர்கால நடுக்கத்திலிருந்து நாங்கள் வெயில் கால நிலங்களை அடைந்தவுடன்அவர்கள் எங்கள் மேல் உடம்புகளை கடிக்கிறார்கள்தங்கள் நாவுகளை உள்ளிழித்துக் கொண்டு எங்களை விடுவிக்கிறார்கள்.  விஷக்கடியின் வலியால் நாங்கள் நெளிகிறோம். எங்கள் கணவன்மார்கள் குறட்டை விட்டுத் தூங்கச் செல்லும் வரை படுக்கையில் செய்வதற்கு எங்களுக்கு ஒன்றுமில்லை. அவர்கள் ஆழ்ந்து தூங்கியவுடன்நாங்கள் குளியலறை கதவை மெல்லத் திறந்து கொண்டு ஆஷாலொதாவின் அறைக்குள் நுழைந்தோம். 

ஒரு புது வகையான விளையாட்டில் ஆஷாலொதா ஈடுபடுகிறாள்.  இத்தனை காலமும்தனது சொந்த உடல் மற்றும் மகப்பேறு உடலைத் தாண்டி பெண் உடலை அவள் அறிந்ததில்லை. தீதிமா ஒத்தடமும்மசாஜும் கொடுக்கும்போது அந்த உடல்களை பிடித்துக் கொள்வாள்அப்போது கர்பிணிப் பெண்கள் மகிழ்ச்சியால் துள்ளுவார்கள் அவ்வளவுதான் அந்த அறிமுகமும். தனது உடலை மற்ற ஒரு பெண்ணின் வாயிலாக அறியும் செயல் அங்குதான் தொடங்கியது. பின்னர் அதற்கு அடிமையாகிப் போனாள்தீதிமா தரகராகிப் போனார். உலகமானது புதிர் நிறைந்த ஒரு பாத்திரம்.  அவள் தீதிமாவின் கால் தடங்களைப் பின்பற்றி நகரத்திற்கு வந்தாள்.  சில ஆண்டுகளுக்கு முன்னர் தீதிமா சாதித்த அதே விசயங்களை அவளும் சாதிப்பாள் எனும் நம்பிக்கை ஆஷாலொதாவுக்கு இருந்தது.   கடந்தகாலம் அவளின் உதவிக்கு வந்தது.  எரியும் எண்ணை விளக்கின் மின்னும் ஒளிபுகை வாசனையின் நினைவுஆரஞ்சு வண்ண விளக்கின் ஒளியில்மலர்களின் வாசனைக்கு நடுவே மென்மையான  மெத்தையில் கிடக்கும் பெண்களின் உடல்களை நோக்கி அவளது கையை கொண்டு சென்றது.

விடிந்தபோது நாங்கள் ஆஷாலொதாவின் மெத்தையில் விழித்திருந்தோம். நாங்கள் கொட்டாவி விட்டவாறு சிரித்தோம் – பாம்பு கணவுகள் காணவில்லையே – யோசித்தோம்.  ஆஷாலொதா இன்னமும் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை நோக்கி திரும்பி கிசுகிசுத்தோம், “இரவில் பாம்புகளைக் கண்டாயா?” அவள் முனகினாள். நாங்கள் அவளை சீண்டினோம். “ஏய்பாம்புகளைக் கண்டாயா?”, ஆஷாலொதாவின் தூக்கம் கலைந்தது. ஆரஞ்சு விளக்கை அமத்தினோம். விடியலின் நீல வெளிச்சத்தில் மீண்டும் ஒரு முறை விளையாட்டில் இறங்கினோம். அதற்குள் எங்கள் கணவன்மார்கள் விழித்துக் கொண்டனர். படுக்கையில் நாங்கள் இல்லாததைக் கண்டுநாங்கள் குளியல் அறையில் இருப்போம் என்று நினைத்திருபர். ஆனால் இவ்வளவு நேரம் குளியறையில் என்ன வேலை. மெத்தையில் அவர்கள் நெளிந்தனர்அந்த குளிர்ந்த அதிகாலைக் காற்றில் உடலை சுருட்டி தூங்க முயற்சித்து தோற்றனர். குளியலறை வழியாக நாங்கள் அறைக்குள் நுழைந்தவுடன், “இத்தனை நேரம் குளியறையில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?” என்றனர். 
நாங்கள் வியந்தோம். “குளியலறையிலா?”
வேறெங்கு இருந்தீர்கள்

எங்களுக்கு புரிந்தது – எங்கள் வயதை சுட்டிக் காட்டுகிறார்கள். இந்த வயதில் பெண்கள் காதலர்களைப் பெற முடியாது என்று அவர்கள் நிணைக்கின்றனர்புதிய காதலர்கள்புதிய கணவன்மார்களை கண்டடைய முடியாத காலம் வந்து விட்டது. இந்த கணவன்மார்களே அதிர்ஷ்டத்தின் அறிகுறி.  காலம் முழுக்க பாம்புக் கணவுகள் வந்தாலும் நாங்கள் விவாகரத்து கோரமாட்டோம். ”நாங்கள் குளியலறையில் இருக்கவில்லை.” என்றோம்.

கணவன்மார்கள் எங்களை முறைத்தபடி, “என் – என் – என்னது – வேறெங்கு இருந்தீர்கள்?”
ஆஷாலொதாவின் அறையில்.

ஏன்?”

ஏனென்றால் அவளது படுக்கையில் எங்களுக்கு பாம்பு கணவுகள் வருவதில்லை.
ஓ அப்படியா!” எங்கள் பாம்புக் கணவு பற்றிய பயம் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. அவர்கள் இதயம் துள்ளியது. நாங்கள் கோபம் கொண்டோம்.  முதல் முறையாக அவர்களை தள்ளி விட்டுஅந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.  எங்கள் பின்னால் கணவன்மார்கள் சீறினர். பாம்பு போன்ற அவர்களது முறைப்பு எங்களுக்கு உறைப்பதில்லை.

அலுவலகத்தில் அன்று நிறைய நடந்தது. காலைச் சண்டைகளை மறந்தோம். ஆஷாலொதாவின் கணவருக்குப் பணம் அனுப்பினோம்மாலை வரும்போது பூக்கள் வாங்கி வந்தோம். மசாஜ் கருவியோடு அஷாலொதா தயாராக இருந்தாள்.  காலைக்கும் இரவுக்கும் மத்தியில் கிடைக்கும் இந்த கூடுதல் நேரங்களில் எங்களைக் கவனித்துக் கொள்ள நிணைத்தாள். ஒப்பந்தத்திற்கு உண்மையாக இருக்க நிணைத்தாள். கணவன்மார்கள் வரும் நேரம் நெருங்கிவிட்டது எங்களுக்கு நிலை கொள்ளவில்லை. மீண்டும் ஒரு சண்டைக்கு நாங்கள் தயாராக இல்லை.  “பூங்காவில் நடை பயணம் செல்லலாமா” என்று கேட்டோம். துள்ளிக் குதித்தவாறுகையில் இருந்த எணைக் கிண்ணம்சந்தனம் ஆகியவற்றை போட்டுவிட்டு, “நான் இன்னும் நகரத்தை பார்க்கவேயில்லை.” என்றாள்.

ஆஷாலொதா பூங்காவில் வாத்துகளைப் பார்க்கிறாள்தும்பியை துரத்துகிறாள்ஏரியில் மீன் பிடிக்கும் மக்களைப் பார்க்கிறாள்கிராமத்தில் பிடித்த ஜில்லியன் கணக்கான மீன்களைப் பற்றிப் பேசுகிறாள். கடலை சாப்பிக்கொண்டே ஊஞ்சிலில் ஆடுகிறாள். அவள் முன் குழந்தைகள் பந்து விளையாடுகின்றனர்ஊஞ்சலில் ஆடுகின்றனர். ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டே ஆடைகளை அழுக்காக்கினர்ஏரியை மிரட்சியோடு பார்த்தனர். ஊஞ்சலில்குழந்தைகளோடு ஆடியபடி ஆஷாலொதா எங்களிடமிருந்து விலகியிருந்தாள். 
அன்று இரவுஆஷாலொதாவின் அறையிலிருந்து ஒரு பயம் கலந்த அலறல் வெளிவந்தது. நாங்கள் அங்கு ஓட நினைத்தபோதுஎங்கள் கணவன்மார்கள் எங்களை தடுத்தனர். “நாங்கள் முதலில் சென்று பார்த்து வருகிறோம்நீங்கள் பிறகு வரலாம்.” என்றனர்.  நாங்கள் அதை புறக்கணித்துவிட்டுதடையைத் தாண்டி சென்றோம்.  ஆஷொலொதா தரையில் சுருண்டு கிடந்தான். ஒரு பெரிய கருப்பு பாம்பு அவள் மெத்தையில் படுத்துக் கிடந்தது.  நாங்கள் நடுங்கிக் கொண்டேஆஷாலொதாவை அணைத்தோம்.  எங்கள் கணவன்மார்கள் எங்களைத் தள்ளிவிட்டு வீராவேசத்துடன் பாம்பின் வாலைப் பிடித்து இழுத்தனர்.  எங்களைக் கண்டு அவர்கள் நகைத்தபோது நாங்கள் எரிச்சலோடு புன்னகைத்தோம். அது ஒரு ப்ளாஸ்டிக் பொம்மை.  ஆனால் அது எங்கிருந்து வந்தது?

எங்கள் வீடுகளில் குழந்தைகள் இருக்கின்றனர். எங்கள் கணவன்மார்கள் ஆஷாலொதாவை உற்று நோக்கினர். பனை இலை போல் அவள் உடல் நடுங்கியது.  பூங்காவில் அவள் அதை வாங்கி வந்திருப்பாள் என்று கூறினர்.  ஆஷாலொதாவின் ஊமைக் கண்கள் எங்கள் உதவியைக் கோரியது.  “இல்லை அவள் எங்களுடன் தான் இருந்தாள்அவள் அங்கு அதை வாங்கவில்லை.” என்றோம்.  எங்கோ ஒரு பிளவு இருப்பதை உணர்ந்தோம்.  ஆஷாலொதா பூங்காவில் குழந்தைகளுடன் தான் அதிக நேரம் செலவிட்டாள்.  ஏன் அப்போது அவள் பாம்பு பொம்மையை வாங்கியிருக்கக்கூடாது. எங்கள் கணவர்களிடமிருந்து அதை மறைத்தோம். அவர்கள் நல்ல பாம்புகள். அவர்கள் தங்களது தலையை தாழ்த்துவதே கிடையாது. நான்கைந்து நாட்களாக வார்த்தைகளால் அவர்கள் எங்களை நையப் புடைந்தனர். “எதற்காக அவளே பாம்பு பொம்மையை வாங்கிமெத்தையில் போட்டு பின்னர் அலற வேண்டும்.

ஒரு நாடகம்!” எங்கள் கணவன்மார்கள் கூச்சலிட்டனர். “எல்லாம் ஒரு நாடகம்பாம்பை பயன்படுத்தி நம்மையெல்லாம் இந்த வீட்டிலிருந்து விரட்ட நினைக்கிறாள்.

அவளை பயமுறுத்தி விரட்ட நினைப்பது நீங்கள் தான்.” எங்கள் கணவன்மார்களை எச்சரித்தோம். ”உங்களைப் போல அவளுக்கும் இந்த வீட்டில் உரிமை உள்ளது. நம் எல்லோருக்கும் சம உரிமை உள்ளது.  நாங்கள் இங்கு வாழும் வரைஅவளும் இங்கு வாழ்வாள். அவள் இங்கு வாழ முடியாது என்றால்பின்னர் யாரும் இங்கு வாழ முடியாது.

வார்த்தைகளின் பால் நேரத்தை விரயம் செய்ய எங்கள் கணவன்மார்கள் விரும்பவில்லைஇரகசியமாக சதி செய்தனர்.  இந்த பாம்பு குறித்து ஆஷாலொதாவை எச்சரிக்கும் தருணம் வாய்க்கவில்லை.
இச்சூழலில்ஆஷாவின் கணவர் மரணம் குறித்து செய்தி வந்தது. அவள் இப்போது விதவை.  ஹிந்து சட்டம் பெண்களுக்கு மறுமணத்தையோவிவாகரத்தையோ அனுமதிப்பதில்லை. எனினும் ஒரு விதவை திருமணம் செய்து கொள்ளலாம். 150 வருடங்களுக்கு முன்னர் திரு வித்தியாசகர் ஒரு சட்டம் இயற்றி அதற்கான வாயிலைத் திறந்து வைத்தார்.  எங்கள் பயம் இப்போது இது தான்: ஆஷாலொதா திருமணம் செய்து கொண்டு எங்களை விட்டு செல்வதை எவ்வாறு தடுப்பது!

விதவை மறுமணச் சட்டம் இருக்கிறது என்பதை நாங்கள் அவளிடம் சொல்லவில்லைஅதேபோல் பாம்பு குறித்தும் அவளை எச்சரிக்கவில்லைகணவுப் பாம்பை விட நிஜ பாம்பு கொடியது என்று நிணைத்து அவள் எங்களை விட்டு சென்று விட்டால்.  அவளை சந்தோசமாக வைத்துக்கொள்ள ஒவ்வொரு நாளும் பூங்காவுக்கு அழைத்துச் சென்றோம்.

பூங்காவில்ஆஷாலொதா மகிழ்வுடன் இருந்தாள். பிள்ளைகளுடன் விளையாடிகன்னங்களைக் கிள்ளி. தூண்டிலிடுபவர்கள்கடலை விற்பவர்கள்கடைக்காரர்கள் மீது கண்வைத்தபடி இருந்தோம்.  அவர்கள் அவளைப் பார்த்தால்எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் சரி அவள் அருகில் ஓடிச் சென்று நின்று கொள்வோம். அவளை நாங்கள் நோட்டமிட்டுக் கொண்டே இருந்தோம்ஒரு மயிர் அகலத்திற்கு யாராவது அவளுள் தாக்கம் ஏற்பட முனைவதும் வாழ்வா சாவா என்பது போல் இருந்தது.  அவளது அன்பு முழுவதும் குழந்தைகள் மீதே இருந்தது. எங்கள் இதயம் நொருங்கியது: எங்களிடமிருந்து அவளை இக்குழந்தைகள் பறித்து சென்று விடுவார்களோ. எங்களால் அவளுக்கு ஒரு குழந்தை கொடுக்க முடியாது. இதில் எங்களால் ஒன்றும் செய்ய இயலாது.

இரவில் அவளருகில்எங்கள் பயம் மேலும் வளர்ந்தது. நாங்கள் நிம்மதியின்றி தவித்தோம், “என்ன பிரச்சனைஏன் பலா மர இலை போல் விரைத்து காணப்படுகிறீர்கள்?” எங்கள் பதட்டத்தை சொல்ல முடியவில்லை. ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டே விட்டோம், “ஆஷாலொதா எங்களை விட்டுச் சென்று விடுவாயா?”

நான் எங்கு போவதுபோக்கிடம் இருக்கிறதா எனக்கு?”

உலகம் மிகப் பெரியது. நீ நிறைய பேருக்குத் தேவைப்படுகிறாய். நீ உன் கிராமத்திற்கே கூட செல்லலாம்?”
ஆஷாலொதா கண்களை மூடினாள்தீதிமாஅந்த மூதாட்டி விதவைச் சிறுமியாக இருந்தவள்மரணத்தருவாயில் ஊர் திரும்பினாள். மிகவும் தாமதமாக நகரத்திற்கு சென்றதை நினைத்து வருந்திக் கொண்டிருப்பாள். நாசஞ்செயப்பட்ட அவளது உடலின் வலியிலிருந்து பச்சை மூங்கில் பாய் வடிவம் மாறி இருந்தது.  அவளது பேத்தி இளமையிலேயே நகரத்திற்கு வந்துவிட்டாள். “நான் இறக்கும் தருவாயில் கிராமத்திற்கு செல்வேன். அப்போது திறந்த வாயுடன் சுடுகாடு காத்திருக்கும். நான் அங்கு சாம்பலாவேன்.” என்றாள்.

எங்கள் இதயம் பயத்தால் நடுங்கியது.  காதலும் மரணமும் பின்னிப் பிணைந்திருக்கிறது.  காதல் மரணத்தோடு மட்டுமே விளையாடும்வாழ்க்கையோடல்ல. ஆனால் மரணம் வரை அவள் எங்களோடு இருப்பள் என்பதை அறிந்து நாங்கள் மகிழ்ந்தோம்.  திருமணம்ஒரு அதிகார கற்பனைஅதில் பிரிவென்பது தடுக்கவியலாத ஒன்றாக இருக்கிறது. குழந்தையற்றஎழுதப்படாத இந்த உறவு அதை தடுக்கும். நாங்கள் மாற்றியமைத்துக் கொண்டோம்.  ஆனால் மனித சத்தியங்களை நம்ப முடியுமாபருவங்களைப் போல் மனிதர்கள் மாறுவர். ஆஷோலொதா மாறிவிட்டால்இந்த பயம் புதிரானது: வேட்கையை எரியூட்டியபடி அது ஈர்ப்பைக் கூட்டியது. நாட்கள் கடந்தனஇரவுகள் வந்தனமாதங்கள் ஓடியதுபுது வருடம் வந்தது. ஆஷாலொதாவின் மீதான காதலால் நாங்கள் உள்ளுக்குள் எரிந்தோம்.  கணவுகளில்வாழ்நாளில் கண்ட பாம்புகளை நாங்கள் மறந்து போனோம். 

ஒரு நாள் நாங்கள் வேலையை விட்டு வந்தபோது வீட்டில் ஆஷாலொதா இல்லை.  எங்கள் கணவன்மார்கள் உடல் நிலை சரியில்லையென்று பொய் சொல்லி விடுப்பு எடுத்திருந்தனர்.  அவர்கள் முகங்களில் குற்ற உணர்வு தெரிந்தது. 

ஆஷாலொதா எங்கே?”
அவள் ஓடிவிட்டாள்.” என்றனர்
என்ன! என்ன சொன்னீர்?”
எங்கள் கணவன்மார்கள் கர்ஜித்தனர், “பச்சைத் தேவடியா எல்லாவற்றையும் திருடிக் கொண்டு ஓடிவிட்டாள்.

நாங்கள் அவர்களை நம்பவில்லை.  அவளது அறையை நோக்கி ஓடினோம்.  கதவு தாழிடப்பட்டிருந்தது.  ஒரு தூதுவன் காவல் நிலையம் சென்றிருப்பதாக எங்கள் கணவன்மார்கள் சொன்னார்கள். அவர்கள் விரைவில் வந்துவிடுவர். அந்த அறை இப்போது எல்லைக்கு வெளியே ஆகிப்போனது.  நாங்கள் காவலர்களுக்காக காத்திருந்தோம். அவர்கள் வரவேயில்லை. “காவலர்கள் வந்தால் என்ன சொல்வீர்கள்?ஆஷாலொதா உங்களுக்கு என்னவாக இருந்தாள் என்று சொல்ல முடியுமா உங்களால்இரவில் கிசுகிசுத்தனர். அமைதியாக இருந்தோம். எங்களுக்குப் புரிந்தது. ஆஷாலொதா மீது அதீத காதலில் நாங்கள் இருந்த போதுஅவர்கள் தளர்ந்த எல்லா முனைகளையும் ஒன்று சேர்த்து ஒரு சரியான திட்டம் வகுத்துள்ளனர். இப்போது வீடே அவர்கள் பிடியில் இருந்தது. ஆஷாலொதா ஓடவில்லைதுரத்தப்பட்டிருக்கிறாள்.

ஒவ்வொரு நாள் மாலையில் பூங்கா பென்ச்சில் ஆஷாலொதாவிற்காக காத்திருந்தோம்.  எங்கள் கணவர்கள் மீது பயமிருந்தால் அவள் எங்களை இங்கு சந்திக்கலாம்.  பூங்காவில் குழந்தைகள் பந்து விளையாடினர்ஊஞ்சலாடினர்ஐஸ்கிரீம் தின்னவாறுஆடைகளை அழுக்குப்படுத்தினர். அவர்களுக்கு நடுவில் ஆஷாலொதாவைத் தேடிக்கொண்டிருந்தோம். அவள் கிடைக்கவில்லை.  கடலை வியாபாரி எங்களைக் கடந்து சென்றார்ஆன்கள் தங்கள் பார்வையை ஏரியின் மீது செலுத்தினர்கிலு கிலுப்பையை ஆட்டியவாறு வியாபாரி கடந்து சென்றார்.  அவர்களுடைய எண்ணங்களில்செயல்பாடுகளில் ஆஷாலொதாவைத் தேடினோம். நீரின் அடர்த்தியைக் கண்டு ஒருவேளை ஆஷாலொதா இறக்கும் நேரம் வந்துவிட்டதோ என்று வியந்தோம்.  ஒருவேளை மரணிக்க கிராமத்திற்கு சென்றிருப்பாளோ.  அறிமுகமில்லாத கிராமத்தில் ஆற்றின் கரையோரத்தில் ஒரு இறுதி சிதை ஏற்றப்படுகிறது.  நாங்கள் இல்லாமலேயே வாழ முடிவெடுத்துவிட்ட அவளின் சுயநலத்தை எங்களால் சீரணிக்க முடியவில்லை. இரவு வீடு வந்தோம்.  வீடு பூட்டப்பட்டிருந்தது.  எங்கள் தோள்களில் எங்கள் கணவன்மார்கள் கைகளை மென்மையாக வைத்தனர். “அந்த அறை அப்படியே இருக்கட்டும். உங்கள் இதயம் ஆறட்டும். நீங்கள் சொல்லவே வேண்டும்.  நாங்களே கதவுகளை திறக்கிறோம். அப்போது ஆஷாலொதா செய்த மாயையை உங்கள் இதயப் பூர்வமாக உணர்ந்து களிப்பீர்கள்சரியா?”

மீண்டும் இப்போது பாம்புக் கணவு வந்தது. நாங்கள் இரவுகளில் பாம்பை நினைத்து பயந்து விழித்தே இருந்தோம்.  எங்கள் கண்கள் சேலாக அசறும் போது நாங்கள் திடுக்கென்று விழித்தெழுந்தோம். உறக்கமற்ற ஒரு நாள் இரவுஆஷாலொதாவின் அறையிலிருந்து ஓசை கேட்டது. அந்த அறையின் உயிர் நாடி எங்களைத் தூண்டியது. வெகு நாட்களுக்குப் பிறகு எங்கள் உடல் விழித்தெழுந்தது.  நாங்கள் நேராக நின்றோம். கணவன்மார்களின் தலையணையிலிருந்து சாவியை எடுத்துக் கொண்டுமூடப்பட்ட அறையைத் திறந்தோம். இருட்டின் நடுவே யாரோ பெருமூச்சு விட்டார்உட்கார்ந்தார்நீட்டி விரித்தார்கொட்டாவி விட்டார்கதவை நோக்கி நகர்ந்தார். நாங்கள் மூச்சு படபடக்க காத்திருந்தோம். வராண்டாவுக்கு குறுக்கேகதவின் வழியாகபடிக்கு கீழே ஒரு பெரிய மலைப்பாம்பு நெளிந்து செல்கிறதுஎங்கள் இதயம் வெடித்துவிடும் தருவாயில் இருந்தது. அது கதவைத் தாண்டி சாலையைக் கடந்து மறைந்து போனது. இரவின் மூட்டத்தில்நாங்கள் ஒன்றை புரிந்து கொள்ள முடியாமல் திணறினோம்எது ஆபத்தானதுபாம்புக் கணவாஇல்லை உயிருள்ள பாம்பா.

ஷாஹீன் அக்தர்

ஷாஹீன் அக்தர்ஐந்து சிறுகதை தொகுப்பு மற்றும் மூன்று புதினங்களின் ஆசிரியர் – பலபார் பாத் நை (தப்பிக்கும் வழி இல்லை)தலாஷ் (தேடுதல்) – இந்த புத்தகம்வங்கதேசத்தின் மிகப் பெரிய சுற்றறோட்டம் கொண்ட தினசரியான ப்ரோத்தோம் ஆலோவின் 2004ம் ஆண்டுக்கான சிறந்த புத்தக விருதைப் பெற்றுள்ளது.  இதன் ஆங்கிலப் மொழியாக்க நூல் சென்ற ஆண்டு டில்லியில் உள்ள ஜுபான் புத்தகத்தால் வெளியிடப்பட்டது. மேலும் ஷாஹீன்அக்தர் அவர்கள்வங்க இலக்கியத்தில் பெண்கள் சித்தரிப்பு பற்றிய மூன்று பகுதிகளைக் நூலான சோட்டி ஓ ஸ்வதொந்தொரோ: பங்க்ளா ஷாஹித்யே நாரி எனும் நூலுக்கு ஆசிரியராய் செயல்பட்டுள்ளார். இப்போது டாக்காவில் உள்ள ஐன் ஓ ஷைலேஷ் கேந்த்ரா (ASK) எனும் ஒரு மனித உரிமை சார் சட்ட உதவி செய்யும் அமைப்பில் பணிபுரிகிறார்.

குறிப்புகள்: (மொ.ர்)

1.  ஷமான்கள் - மத குருவாகவும் மருத்துவராகவும் இருப்பவர். ஆழ்மன உணர்வுகளின் நிலையை மாற்றியமைத்து கடவுளோடும்ஆவி உலகத்தோடும் தொடர்பு ஏற்படுத்தி நோய்களை குணப்படுத்துவதாக சொல்லும் மருத்துவர்கள்.

2.  டோச்சாலா குடிசை – வங்காள கட்டிடவியல் சிறப்பு

(கல்குதிரைபனிக்கால இதழ், 2013).

�்த� Cc� � �� �� , பச்சைத் தேவடியா எல்லாவற்றையும் திருடிக் கொண்டு ஓடிவிட்டாள்.

நாங்கள் அவர்களை நம்பவில்லை.  அவளது அறையை நோக்கி ஓடினோம்.  கதவு தாழிடப்பட்டிருந்தது.  ஒரு தூதுவன் காவல் நிலையம் சென்றிருப்பதாக எங்கள் கணவன்மார்கள் சொன்னார்கள். அவர்கள் விரைவில் வந்துவிடுவர். அந்த அறை இப்போது எல்லைக்கு வெளியே ஆகிப்போனது.  நாங்கள் காவலர்களுக்காக காத்திருந்தோம். அவர்கள் வரவேயில்லை. காவலர்கள் வந்தால் என்ன சொல்வீர்கள்?ஆஷாலொதா உங்களுக்கு என்னவாக இருந்தாள் என்று சொல்ல முடியுமா உங்களால்இரவில் கிசுகிசுத்தனர். அமைதியாக இருந்தோம். எங்களுக்குப் புரிந்தது. ஆஷாலொதா மீது அதீத காதலில் நாங்கள் இருந்த போதுஅவர்கள் தளர்ந்த எல்லா முனைகளையும் ஒன்று சேர்த்து ஒரு சரியான திட்டம் வகுத்துள்ளனர். இப்போது வீடே அவர்கள் பிடியில் இருந்தது. ஆஷாலொதா ஓடவில்லைதுரத்தப்பட்டிருக்கிறாள்.

ஒவ்வொரு நாள் மாலையில் பூங்கா பென்ச்சில் ஆஷாலொதாவிற்காக காத்திருந்தோம்.  எங்கள் கணவர்கள் மீது பயமிருந்தால் அவள் எங்களை இங்கு சந்திக்கலாம்.  பூங்காவில் குழந்தைகள் பந்து விளையாடினர்ஊஞ்சலாடினர்ஐஸ்கிரீம் தின்னவாறுஆடைகளை அழுக்குப்படுத்தினர். அவர்களுக்கு நடுவில் ஆஷாலொதாவைத் தேடிக்கொண்டிருந்தோம். அவள் கிடைக்கவில்லை.  கடலை வியாபாரி எங்களைக் கடந்து சென்றார்ஆன்கள் தங்கள் பார்வையை ஏரியின் மீது செலுத்தினர்கிலு கிலுப்பையை ஆட்டியவாறு வியாபாரி கடந்து சென்றார்.  அவர்களுடைய எண்ணங்களில்செயல்பாடுகளில் ஆஷாலொதாவைத் தேடினோம். நீரின் அடர்த்தியைக் கண்டு ஒருவேளை ஆஷாலொதா இறக்கும் நேரம் வந்துவிட்டதோ என்று வியந்தோம்.  ஒருவேளை மரணிக்க கிராமத்திற்கு சென்றிருப்பாளோ.  அறிமுகமில்லாத கிராமத்தில் ஆற்றின் கரையோரத்தில் ஒரு இறுதி சிதை ஏற்றப்படுகிறது.  நாங்கள் இல்லாமலேயே வாழ முடிவெடுத்துவிட்ட அவளின் சுயநலத்தை எங்களால் சீரணிக்க முடியவில்லை. இரவு வீடு வந்தோம்.  வீடு பூட்டப்பட்டிருந்தது.  எங்கள் தோள்களில் எங்கள் கணவன்மார்கள் கைகளை மென்மையாக வைத்தனர். அந்த அறை அப்படியே இருக்கட்டும். உங்கள் இதயம் ஆறட்டும். நீங்கள் சொல்லவே வேண்டும்.  நாங்களே கதவுகளை திறக்கிறோம். அப்போது ஆஷாலொதா செய்த மாயையை உங்கள் இதயப் பூர்வமாக உணர்ந்து களிப்பீர்கள்சரியா?

மீண்டும் இப்போது பாம்புக் கணவு வந்தது. நாங்கள் இரவுகளில் பாம்பை நினைத்து பயந்து விழித்தே இருந்தோம்.  எங்கள் கண்கள் சேலாக அசறும் போது நாங்கள் திடுக்கென்று விழித்தெழுந்தோம். உறக்கமற்ற ஒரு நாள் இரவுஆஷாலொதாவின் அறையிலிருந்து ஓசை கேட்டது. அந்த அறையின் உயிர் நாடி எங்களைத் தூண்டியது. வெகு நாட்களுக்குப் பிறகு எங்கள் உடல் விழித்தெழுந்தது.  நாங்கள் நேராக நின்றோம். கணவன்மார்களின் தலையணையிலிருந்து சாவியை எடுத்துக் கொண்டுமூடப்பட்ட அறையைத் திறந்தோம். இருட்டின் நடுவே யாரோ பெருமூச்சு விட்டார்உட்கார்ந்தார்நீட்டி விரித்தார்கொட்டாவி விட்டார்கதவை நோக்கி நகர்ந்தார். நாங்கள் மூச்சு படபடக்க காத்திருந்தோம். வராண்டாவுக்கு குறுக்கேகதவின் வழியாகபடிக்கு கீழே ஒரு பெரிய மலைப்பாம்பு நெளிந்து செல்கிறதுஎங்கள் இதயம் வெடித்துவிடும் தருவாயில் இருந்தது. அது கதவைத் தாண்டி சாலையைக் கடந்து மறைந்து போனது. இரவின் மூட்டத்தில்நாங்கள் ஒன்றை புரிந்து கொள்ள முடியாமல் திணறினோம்எது ஆபத்தானதுபாம்புக் கணவாஇல்லை உயிருள்ள பாம்பா.

ஷாஹீன் அக்தர்

ஷாஹீன் அக்தர்ஐந்து சிறுகதை தொகுப்பு மற்றும் மூன்று புதினங்களின் ஆசிரியர்  பலபார் பாத் நை (தப்பிக்கும் வழி இல்லை)தலாஷ் (தேடுதல்)  இந்த புத்தகம்வங்கதேசத்தின் மிகப் பெரிய சுற்றறோட்டம் கொண்ட தினசரியான ப்ரோத்தோம் ஆலோவின் 2004ம் ஆண்டுக்கான சிறந்த புத்தக விருதைப் பெற்றுள்ளது.  இதன் ஆங்கிலப் மொழியாக்க நூல் சென்ற ஆண்டு டில்லியில் உள்ள ஜுபான் புத்தகத்தால் வெளியிடப்பட்டது. மேலும் ஷாஹீன்அக்தர் அவர்கள்வங்க இலக்கியத்தில் பெண்கள் சித்தரிப்பு பற்றிய மூன்று பகுதிகளைக் நூலான சோட்டி ஓ ஸ்வதொந்தொரோ: பங்க்ளா ஷாஹித்யே நாரி எனும் நூலுக்கு ஆசிரியராய் செயல்பட்டுள்ளார். இப்போது டாக்காவில் உள்ள ஐன் ஓ ஷைலேஷ் கேந்த்ரா (ASK) எனும் ஒரு மனித உரிமை சார் சட்ட உதவி செய்யும் அமைப்பில் பணிபுரிகிறார்.

குறிப்புகள்: (மொ.ர்)

1.  ஷமான்கள் - மத குருவாகவும் மருத்துவராகவும் இருப்பவர். ஆழ்மன உணர்வுகளின் நிலையை மாற்றியமைத்து கடவுளோடும்ஆவி உலகத்தோடும் தொடர்பு ஏற்படுத்தி நோய்களை குணப்படுத்துவதாக சொல்லும் மருத்துவர்கள்.

2.  டோச்சாலா குடிசை  வங்காள கட்டிடவியல் சிறப்பு

(கல்குதிரைபனிக்கால இதழ், 2013).