Sep 23, 2012

உடல் என்பது களமாக…. – கீத்தி சென்




தமிழாக்கம் - கொற்றவை

நமது சொந்தப் பாரம்பரியத்திற்குள் இருந்து மேற்கொள்ளப்பட்ட கலைப் படைப்புகள் பற்றிய ஒட்டுமொத்த ஆய்வும் பெண் உடலின் நுண்ணியல்பு மீதான சிறப்பு கவனத்தை உணர்த்துகிறது.  மொஹெஞ்சதாரோ முதல் எம்.எஃப்.ஹுசேன் வரை, ஓவியர்கள் (கலைஞர்கள்) பெண் வடிவமெனும் அந்தப் பூடகத்தை வரையறுக்கும் ஒரு முழுமையான காட்சி வடிவ குறியீட்டுத் தேடுதலைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் அ. ராமசந்திரன், ‘ஆணின் உற்றுநோக்கும் பார்வையும் (gaze) மனித படிமமும்’, 2000.

உங்கள் அடையாளத்தின் ஒரு பகுதி, உங்கள் உடல் கொண்டே வரையறுக்கப்படுகிறது உங்கள் உயிரியல் பிறப்புரிமையானது உங்கள் இருத்தலைப் பிறப்பிக்கிறது.  இந்த உடல் ”வன்முறை, விலக்கு மற்றும் பழிப்புக்கான” களமாக விவரிக்கப்படுகிறது. உங்கள் உடல் காணப்படும் வகையில்தான் பாலின வேறுபாடுகள் செயல்படுகின்றனவா? சமூக மதிப்பீடுகள் கலையின் மீது மரபொழுங்கைக் கட்டளையாக்கிவிட்டது.  குறிப்பிடத்தகுந்த வகையில், இந்தியாவிலும், மேற்கிலும் பெண் என்பவள் ஆணின் விருப்பத்திற்குரிய பண்புகள் நிறைந்த பெண்ணாகவே உருவகிக்கப்பட்டிருக்கிறாள். உங்கள் எண்ணங்கள், பேரார்வம், செயல்பாடுகள் இவையெல்லாம் ஒரு பொருட்டல்ல. உங்களை அழகுபடுத்திக் கொண்டு பார்வையாளர்களை நோக்கும் வேளையில் உங்களது இருப்பின் பௌதிகத்தன்மை பேசப்படுகிறது. உங்களது உடை, ஆபரணங்கள், உங்கள் வெளித்தோற்றம் இந்த சுய-நிணைவு நிறைந்த இருப்புக்குப் பங்களிக்கிறது.

விமர்சகர் ஜான் பெர்கர் சொன்னது போல்: “இதை ஒருவர் எளிமைப்படுத்திக் கூறமுடியும் -ஆண்கள் வினைபுரிகிறார்கள், பெண்கள் தோன்றுகிறார்கள். ஆண்கள் பெண்களைக் கவனிக்கிறார்கள், பெண்கள் தாங்கள் கவனிக்கப்படுவதை கவனிக்கிறார்கள். அதன் மூலம் அவள் தன்னை ஒரு பொருளாக மட்டுமே பாவிக்கிறாள் – குறிப்பாகப் பார்வைக்குறிய பொருள், ஒரு இலக்கு.” 20 ஆம் நூற்றாண்டின் கடைசி இரண்டு பத்தாண்டுகளில், இப்பார்வை வெகுவாக மாறியிருக்கிறது.  பெண்ணியவாதிகள், எழுத்தாளர்கள், திரைப்படப் படைப்பாளிகள், கலைஞர்கள் உலகெங்கிலும் போட்டிக்கான தளமாய்ப் பல்லாண்டுகாலம் இருந்துவந்த உங்களது உடலை மீட்பு செய்வதில், உங்களது அடையாள வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தியப் பெண் ஓவியர்கள் இந்த உடலைக் கொண்டாடுவதில் ஈடுபட்டுள்ளனர். துணிந்த நோக்கத்துடன் சமூகக் கோட்பாடுகளை அதன் உருமாதிரிகளை அழித்து அவர்கள் ‘தனிப்பட்ட’ ஒன்றை ‘அரசியலாக’ உருமாற்றம் செய்திருக்கின்றனர்.
 
இந்தியாவில் இந்த உருமாற்றம் அம்ரிதா ஷேர்-கில்லிடமிருந்து துவங்குகிறது.  இவர் குறுகிய காலத்துக்குள்ளாகவே இந்திய பெண்களை ‘பார்க்கும்’ தன்மையில் புதிய வழிமுறைகள் கொண்டு பரிணமித்தார்.  படுக்கை விரிப்பில் (charpoy) ஒரு பெண் ஓய்வாகச் சாய்ந்திருப்பது போல் வரையப்பட்ட ஒரு பெண்ணின் ஓவியம் (1940) ’நேஷனல் கேலரி ஆஃப் மார்டர்ன் ஆர்ட்’டில் இடம்பெற்றிருக்கிறது. காட்சியாற்றல் சார்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஓவியங்கள் 50 வருடங்களுக்குப் பின்னர் தோன்றியது. ஷேர்-கில்லின் கடைசி வருடங்களில், இந்தப் படம் அதன் பேசுபொருளுக்காகக் கலைஞர்களின் உடனடி கவனத்தைப் பெறுவதாக நீண்ட காலத்திற்கிருந்தது.   இப்போது அவர் இது குறித்துஹ்ட் தனது சொந்த விளக்கத்தை அளிக்கிறார் – ஒரு பெண்ணின் கண்ணோட்டத்தில் ஒரு புதிய தீர்மானம்! அம்ரிதா ஒவ்வொரு அங்குலத்திலும் பெண்தான் என்பதை எவரும் மறுக்க முடியுமா? அவர் ஓர் உணர்ச்சிமிக்க பெண், நவீன கண்னோட்டங்கள், வெளிப்படையான கருத்துக்கள் மற்றும் சிற்றின்ப உணர்ச்சிகள் மிக்க  ஆளுமையாக (libidinious persona) தன் சமகாலத்தவரின் கவனத்தை ஈர்த்த ஒரு பெண். மால்கம் முகேரிட்ஜ் எழுதியது போல் “உலகியல் இன்பங்களில், வளரும் பொருட்களில், விலங்குகளில், வண்ணங்களில் காணும் பெரும் மகிழ்ச்சியானது அவரது ஓவியத்திற்கு மாபெரும் உற்சாகத்தைக் கொடுத்தது”. அதனால்தான் அவரைச் சுற்றி ஒரு கவர்ச்சியும் வழிபாடும் உருவானது. வெகுசமீபத்தில் தான் அவர் அடிப்படையில் வேறுபட்ட பார்வை கொண்ட ஒரு பெண் எனும் நோக்கில் ஒரு கலைஞராக மீள்-நோக்கு செய்யப்பட்டார்.  ஷேர்கில்லின் முரணுரை புதிரீடு (paradox) நம்மைக் கவர்கிறது.  

ஒரு பெண்ணாகத் தனது சிற்றின்ப உணர்வுகள்மிக்க ஆளுமையை கசிந்து தள்ளினார், அதில் மூழ்கி களித்தார், தனது பாலியல் முறையீடு குறித்து வெகுவாக அறிந்து வைத்திருந்தார். (1930 – 34) பாரிசில் வாழ்ந்த காலத்தில் அவரது சுய உருவப்படங்கள் அவரை வெவ்வேறு பாத்திரங்களில் பிரதிபலிக்கின்றன – நாடோடி தோற்றத்தில் அவிழ்த்துவிடப்பட்ட கரிய கூந்தல், சிவப்பு உதடு, பார்வையாளர்களை ஏமாற்றும் நோக்கோடு பெரும் சிறிப்பை உதிர்க்கும் ஒரு ஓவியத்தில் ஒரு கணத்தில் அவர் நம்மை வசீகரிக்கிறார்.  ஆனால் ஒன்றைச் சொல்லியாக வேண்டும், ஒரு ஓவியராக அவர் பெண்ணை வித்தியாசமாகக் கண்டார், நிர்வாணப் பயிற்ச்சி ஓவியங்களில் அவர்களது பலவீனங்களை வெளிப்படுத்துகிறார்.  தொட்டுணரக்குடிய மனித தசைகள் ஆனால் ஒரு அசைவற்ற ஓவியப் பொருள் போல் வரையப்பட்ட பச்சை நிறத்தில் ஒரு பெண் - அமைதியாக ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார்,’ க்ரீம்’ நிற பட்டுத்துணி மற்றும் இளஞ்சிவப்பு சிறுதோளணி (stole) முன்பும் அவரது நிர்வானச் சாய்வு (reclining) இடம்பெறுகின்றது.  வேறுவகையில் சொல்வதானால் ‘வாழ்வு’ மரணமாக அசைவற்றது போல்… மானே, ரவி வர்மா இருவரும் ஐரோப்பிய ஒற்றைக் கோணத்தில் பெண்களைக் காண்பதை அறிமுகம் செய்தனர், அதாவது மெத்தைகளில் உயர சாய்ந்தபடி, பார்வையாளர்களை எதிர்கொள்ளத் தயாராய் இருப்பதுபோல். இடைக்கால இந்திய ’மினியேச்சர்’ (நுணுக்க ஓவியக் கலை) ஓவியங்களில் பயன்படுத்தப்பட்ட வழக்கொழிந்த “பறவைப் பார்வை”க்குத் திரும்பினார். இது பார்வையாளர்கள் பெண்களைக் கீழ்நோக்கிப் பார்க்கும்படி செய்தது.  இதன் மூலம் மேலும் ’வெளிப்படையாக’, பார்வைக்கு பலியாகக்கூடிய வகையில் தோற்றம் அளித்தது.  வேறெதுவும் நடக்காத இந்த மூடிய அறைக்குள் ஒருவித தனிமை மருட்சி தோன்றுவதால், அந்த இளம் பெண் “உள்ளறிவுப் பொருளாக மாறுகிறாள்.  

பெண் என்பவள் காட்சிப் பொருள், உள்ளறிவுப் பொருள். சாய்வாக இருக்கும் பெண்ணின் ஓவியத்திற்குள் எண்ணற்ற உருவங்கள் இருப்பது தன்னளவில் ஒரு ஓவியப் பாணியை (genre) உண்டாக்குகிறது.  ஐரோப்பாவில், பெரும் ஓவியர்கள் ஒவ்வொருவரும் இந்தக் கருப்பொருளில் மூழ்கியுள்ளனர் உஃப்ஃபிசி (Uffizi) காலரியில் உள்ள டிட்டியனின் கொண்டாடப்படும் உர்பினோவின் வீனஸ் முதல் ரெம்ப்ராண்ட் தன் மனைவி சஸிகாவை வரைந்த ஆய்வோவியம் மற்றும் கோயாவின் புகழ்பெறாத பரடோவில் நிர்வாண மஜ்ஜா, மானேவின் ஒலிம்ப்பியா மீதான இழிவான முறைத்தல் ஆகியவை 19ம் நூற்றாண்டில் ஒரு கிளர்ச்சியை உண்டுபண்ணியது. ’மாதிரி’ களின் பாலின்ப உடல் மீது கவனம் செலுத்துவதற்கு தொன்மவியல்  மற்றும் இயல்புருவ ஆய்வு (life studies) ஆகியவை ஒரு முற்பிரதியாக அமைந்துவிடுகிறது. வெளிறிய பட்டுத்தாள்களின் மீது மஞ்சத்தில் நிர்வாணமாக படுத்துகிடக்கும் அப்பெண்ணின் இளஞ்சூடான சதை பார்வையாளர்களோடு உரையாடலை நிகழ்த்துகிறது. இந்தியாவில் இக்கருப்பொருள் ராஜ்புத் முற்ற ஓவியங்களில் மிகவும் பிரபலமாக இருந்தது.  காதலனை எதிர்நோக்கி மஞ்சத்தில் அமர்ந்திருக்கும், அல்லது அவனது தழுவலில் பிணைத்திருக்கும் நாயிகாவை (கதாநாயகி) காணமுடியும்.

19 ம் நூற்றாண்டிலிருந்து, முக்கியத்துவங்களில் ஒரு திடீர் மாற்றம் நேர்ந்தது. கதாநாயகியானவள் இனிமேலும் கீத கோவிந்தம் அல்லது ரசமஞ்சரியின் கதைசொல்லி அல்ல. மாறாக அவளே ஒரு மையக் கருப்பொருளாக உருமாறினாள்: சாய்ந்தவாரிருக்கும் அரசவையணங்கு, பூனையுடன் விளையாடியபடி அல்லது உண்பதற்காகப் பரிமாறப்படும் அருசுவை உணைப்போல் மஞ்சள் நிறத் ‘திண்டில்’ நிர்வாணமாக நீண்டுகிடத்தல். மேற்கில், இந்தியாவில் இருக்கும் இந்த முன்னோடிகள் குறித்து ஷேர்-கில் அறிந்து வைத்திருந்தார், 1935களில் அதற்குத் திரும்பி, தன் வாழ்வின் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவங்கினார் – அதன் ஊடாக ஓவியத்தில் ஒரு மாறுபட்ட மெய்யுணர்வுக்கு மாறினார். பாரிசில் ஒரு மாணவியாக அவர், மானேவின் புகழ்பெறாத ஒலிம்ப்பியாவோடு 19 ஆம் நூற்றாண்டின் துணிச்சலான வெளிப்பாடு எனும் பரிச்சயம் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.  தெற்கு நோக்கி திருவனந்தபுரம் பயணம் செய்கையில், ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களை எதிர்கொண்டு, அதை ஆய்வுவிமர்சனம் செய்தார்.  இச்சூழலில், அவர் படுக்கை விரிப்பில் சாய்ந்திருக்கும் பெண் எனும் கருப்பொருளை வலிய எடுத்து, அந்த இரு ஓவியங்களையும் குறியீடாகத் தொடர்புபடுத்துகிறார்.  என்னுடைய இந்தப் பார்வை, அவருடைய ஒத்த கட்டமைப்பின் மூலம் மேலும் வலுபெறுகிறது – இளமையயுடன் இருக்கும் பெண் படுக்கைவிரிப்பில் நீண்டு படுத்துச் சிறுதுயில் மேற்கொள்வதற்கும், அடர்நிறம் கொண்ட முதுமைப் பெண் தனது ’எசமானி’க்கு காற்றுவீசுவதிலும் உள்ள முரண் கவனத்துகிறியது.  மானே இந்த முரணை முதலில் பயன்படுத்தினார், ஒரு முதிய கருப்பு பெண் பழக்கூடையைப் பிடித்திருப்பார், அதன் மூலம் இளம் வெள்ளைப் பெண்ணின் சிறப்பைக் காட்டுவார். இதைச் சோம்பலின்றிப் பின்பற்றிய ரவி வர்மா, இந்தியப் பாரம்பரியத்தை மேற்குலக ’எண்ணைச் சாய ஓவியமாக (oil painting) இணைத்துச் சிறப்பெய்தினார். அங்கு ‘ஈர்ப்புறவானது’ பொருள் மற்றும் சிறந்த கட்டமைப்பு என்பதோடு முடிந்துவிடுகிறது – ஏனென்றால் ஷேர்-கில்லின் செய்முறையானது ஆண் முன்னோடிகளிடமிருந்து அறிவுபூர்வமாக மாறுபடுகிறது.  மானே, ரவி வர்மா இருவரும் தங்கள் ஆளுமைகளை வெளிப்படுத்தும் கவர்ச்சிமிகு இயல்புருவ மாதிரிகளை பயன்படுத்தினார், அதன் மூலம் அவ்வோயியங்கள் உயிருள்ளதாகவும், உண்மையான சதைப்பற்று கொண்டதாகவும் இருந்தன.  

ஆனால் ஷேர்-கில் மாதிரிகளை பயன்படுதினார், அவர்களை அவர் மனக்கண்தோற்றத்திற்கான, மூலப்படிவமாகக் கண்டார்: கழுத்துக்குக் கீழிறுக்க்கும் உடல் பகுதி (torso) நீண்டு, தலைமுதல் கால் வரை சிவப்பு துணியால் சுற்றப்பட்டு, படுக்கையின் உறைப்பான மஞ்சளுக்கு முன் எரியும் கங்கைப் போன்று காணப்படுகிறாள்.  மானே, ரவிவர்மா இருவரும் மெத்தைகளில் உயரச் சாய்ந்தபடி, பார்வையாளர்களை எதிர்கொள்ளத்தயாராய் பெண்களை ஐரோப்பிய ஒற்றைக் கோணத்தில் பார்க்கும் பார்வையை அறிமுகம் செய்தனர். ஷேர்-கில் மத்திய கால இந்தியாவின் மினியேச்சர் ஓவியங்களின் வழக்கொழிந்த “பரவைப் பார்வைக்கு’த் திரும்பினார். இந்த அணுகுமுறை பார்வையாளர் பெண்ணை கீழ்நோக்கி காணச்செய்கிறது – இதனால் அவர் மேலும் வெளிப்படையாக, பார்வைக்கு பலியாகக்கூடிய வகையில் தோற்றம் அளிக்கிறார்.  வேறெதுவும் நடக்காத இந்த மூடிய அறைக்குள் ஒருவித தனிமை மருட்சி தோன்றுவதால், அந்த இளம் பெண் “உள்ளறிவுப் பொருளாக மாறுகிறாள்.  பெண் என்பவள் காட்சிப் பொருள், உள்ளறிவுப் பொருள். அதேவேளை, அவளது உடல் ஒரு வேட்கைக்கான பொருள் மட்டுமல்ல.  அந்த ஓவியத்தின் இருமுகப் போக்கு இங்குதான் இருக்கிறது! இந்த உடலின் வெம்மைகூடிய  சிவப்பு-ஆரஞ்சு வண்ணம் அவளை ஒரு இளம் மணைவி, சுய வேட்கை கொண்டவள் என்ற இரு படிநிலைக்கும் கூடுதல் அழுத்தம் கொடுக்கிறது.  நெற்றியில் செந்திலகம் மற்றும் சிறு நெற்றிச்சுட்டி என்று இந்த நிறம் அவளது உடல்மீது வைக்கப்பட்ட அடையாளங்கள் வழி கூடுதல் அழுத்தம் பெறுகிறது; கட்டிலின் நான்கு கால்களிலும், மின் விசிறியின் பிடிகூட ஆரஞ்சு வண்ணத்தில் தேர்ச்சி பெற்ற கோடுகளாகப் பிரதி செய்யப்படுகிறது. இளம் பெண் முக பாவனைகளிலிருந்து விலக்களிக்கப்படுகிறாள்.  மாறாக அவளது உடல் அவள் ஆன்மாவின் வெளிப்பாடாக மாறுகிறது. ஏக்கத்துக்கான தீவிர வேட்கையின் வெளிப்பாடு. 

சிவப்பென்பது திருமணத்திற்கான மங்கல வண்ணம் மட்டுமல்ல; அது பாலியல் பண்பின் வெளிப்பாடு.  இந்தியக் கவிதை மற்றும் ஓவிய மரபில் அது உவர்ச்சியை (தீவிர உணர்ச்சி passion *) உணர்த்துகிறது. அது காதலுக்கான உருவகமாக மாறுகிறது.  பக்தி இலக்கிய கவிதைகளின் இறைநிலை வரிகள் காதலின் உணர்ச்சிக் கணிவையும், அதிலேயே மூழ்குதலையும் பேசுகிறது காதலிப்பவர், காதலிக்கப்படுபவர் இருவரும் ஒற்றை வார்த்தையில், ஒற்றை உணர்ச்சியில் இணைத்து வருணிக்கப்படுகின்றனர்.  “லாலி மேரே லால் கி, ஜித் தேக் தித் லால் / லாலி தேக்னே மே கயே, அவுர் மேன் பீ ஹோ கை லால்” (உவர்ச்சி / என்னுடைய காதலரின் சிவப்பு (எல்லாவற்றிலும் ஊடுருவுகிறது) / நான் எங்கு பார்த்தாலும் அங்கு என் காதலர் / சிவப்பு / நான் என் காதலை கண்டடைய சென்றேன் / நானும் உணர்ச்சிமிக்க சிவப்பானேன்)” வட்டார மொழியில் (கவிதை கொள்கைகள் பற்றிய ஆய்வு) சிவப்பு என்பது காதலி மற்றும் காதலிக்கப்படுபவர், உவர்ச்சி மற்றும் உணர்ச்சிமிகுதி, சிவப்பு மற்றும் சிவப்பாகுதல் / உணர்ச்சிமிகுதி என்று எதை வேண்டுமானாலும் குறிக்கலாம்.  ஷேர்-கில்லுக்கு இந்திய அழகியல்(1) குறியியலில் பரிச்சயம் இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் அவர் மினியேச்சர் ஓவியங்களால் வசீகரிக்கப்பட்டிருந்தார். தனது இறுதிக் காலத்தில், அவற்றிலிருந்து தனது மூலத்திற்குத் தூண்டுதல் பெற்றார். 

கார்ல் கண்டல்வாலாவுக்கு எழுதிய கடிதத்தில், “வெப்ப வண்ணம்” எனும் பதம் தன்னைப் பீடித்தது என்று கூறுகிறார், உண்மையில் அவை அவரை ஆக்கிரமித்தது, அவரது ஓவியத்தை உவர்ச்சியில் மூழ்கடித்தது. ஊஞ்சல், இளம் பெண்கள், மணமகள், குளியலில் பெண்கள், படுக்கை விரிப்பில் ஓய்வுபெறும் பெண் (The Swing, Young Girls, The Bride, Woman at Bath and Woman Resting on a Charpoy.) ஆகிய ஓவியங்கள் அத்தகையவை.  அவரது குறுகிய கால வாழ்வின் கடைசி மூன்று, நாலு வருடங்களில் வரையப்பட்டது, அவையெல்லாமே பெண் பற்றிய ஓவியங்களாய் இருப்பதை ஒருவர் காணமுடியும்! பெண்ணிய ஆய்வுகளில் உடல் என்பது வெற்றிச் சின்னம். இதைவிட மேலாக ஏதாவது சொல்ல முடியுமா? அதில் ஷேர்-கில் ஒரு சின்னம். பெரும்பாலான இந்திய ஓவியர்களைவிட அவர் அதிக கவனத்தைப் பெற்றார். அவரது எழுத்துக்களின் இலக்கியத் தொகுப்பு வல்லமைமிக்கது.  மற்றொரு ஆய்வைத் தொடங்குவதற்கான அவசியம் என்னவென்று நீங்கள் வியக்கக்கூடும் உங்கள் உடலோடு இது என்ன தொடர்பு ஏற்படுத்தும்? நான் ஏற்றுக்கொண்டிருப்பேன் ஒருவேளை அது இந்திய உணர்ச்சிமயத்தை வியத்தகு வகையில் மறுகண்டுபிடிப்பு செய்யாமல் இருந்திருந்தால் ...... இந்தப் பிரச்சனைக்கான தனித்துவமான தீர்வைக் கண்டறியும் எனது சொந்த  மனஎழுச்சியும் இதில் அடக்கம்.  சமீப காலங்களில் பெண் ஓவியர்கள் பெண் உடல் மீதான நிறைவு பெறாத ஷேர்-கில்லின் படைப்புகளை எடுத்துவருகின்றனர்.  சமீபத்திய பத்தாண்டுகளிலிருந்து மூன்று தருணங்களைக் குறிப்பிடுகிறேன்.  முதலில் வேட்கை பற்றி....ஒரு பெண்ணாக நீங்கள் வேட்கையின் இலக்கு; அதேவேளை உங்களுக்கும் வேட்கை இருக்கிறது. இவ்வகையில் நீங்கள் ஒர் ஓவியத்தின் அகப்பொருள் மற்றும் புறப்பொருள். பாலினக் கருத்தின் காரணமாக இங்கு இரு பகுப்பு நிலவுகிறது. 1989 இல், கோகி சரோஜ் பால், பெண்கள் பற்றிய தொன்ம மாயாவாத ஓவியங்களைப் புதிய தொடராகத் தொடங்கினார்.  அவரது முதல் உருவமான காமதேனு, விருப்பங்களை நிறைவுசெய்யும் பசு பற்றிய தொன்மம்.  இந்தப் பரிசு தரும் சக்தி பெற்ற பாத்திரம் ஒரு பெண்ணுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது, அவ்வகையில் காமதேனு ஒரு சரியான அடையாளம்.  சரோஜ் பால், ஒரு ஓவியராக, பெண்ணாக கோணலான நகைச்சுவையுடன் அவதானிக்கிறார்: “காமதேனு சிறந்தவள் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றக்கூடியவள் என்று மக்கள் சொல்கின்றனர் காமதேனுவின் விருப்பம் (வேட்கை) என்னவென்று அவளிடம் எவரும்  கேட்கவில்லை என்பது வியப்பாக உள்ளது அவள் எப்போதாவது ஒருவேளை விரும்பியிருந்தால் அது எவ்வாறு நிறைவேற்றப்பட்டிருக்கும்?” பாதி பெண், பாதி பசு, இந்தப் பால் தரும் உயிரினத்தின் சுவைமிக்க கூட்டு  உடையால் துண்டாடப்பட்டு அவளது பாலினத்தன்மைக்கு அசையழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், அவளது கைகளும், பாதங்களும் அல்டா எனும் வன்னப்பூச்சின் மூலம் சிவப்பூட்டப்பட்டுள்ளது, அதன் மூலம் அவள் காண்பவரைக் கவரும் வசீகத்தைப் பெறுகிறாள். இந்த உருவம், சரோஜ் பாலின் மற்ற தொகுப்புகளான கின்னாரி, பறவைப் பெண் எனும் தொன்ம ஓவியம் சிற்றின்பவாதம் பற்றிய ஒரு புதிய அகராதியை உருவாக்கியது.  இந்தத் துணிச்சலான உயிரினங்கள் பெண்ணாகவும், மிருகமாகவும் நாகரீகம் மற்றும் காட்டுமிராண்டித்தனம், அடக்கம் மற்றும் அடக்கமின்மை என்று நிலையான உருமாற்றத் தன்மையில் நிலவுகின்றன அதன் மூலம் உண்மை நோக்கத்தைக் கட்டவிழ்த்து வேட்கை நிறைந்தவளாகவும், வேட்கைக்குள்ளாகுபவளாகவும் காட்டுகிறது. அடுத்து, நாம் உடலின் மீது கவனம் செலுத்துவோம்...

பெண்ணின் உடலுக்கு வேட்கைக்கான ஒரு பொருள் எனும் முதன்மைத் தன்மை கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது உங்கள் உடல்,  கஞ்சன் சந்தரின் ’டார்ஸோ’ (தலையற்ற உடல் *) வில் இருப்பது போல் வெறும் ‘காட்சிப் பொருளாக’த் தோன்றலாம்.  1994 இல் ஒரு பாசறையில் துவக்கம் பெற்ற அவரது முதல் படைப்பு சக்தி வாய்ந்த ஒன்று. காகிதம், சணல், சாணி, வண்ணம் ஆகிய கலவைகளால் செய்யப்பட்ட சிற்பம். தலை, கை, கால் ஆகியவற்றின் நீக்கமானது, அவ்வுருவத்திலிருந்து எவ்வித உடல் அசைவுகளும், உணர்ச்சி வெளிப்பாடும் இல்லாமல் களைகிறது மேலும் அவ்வுருவத்திற்கு ஆற்றல் மிக்க செழுமை படிமத்தை ஏற்றி வைக்கிறது.  சந்தரின் ‘டார்ஸோ’ தொகுப்புகள் பெண்ணின் உயிரியல் நிலைகள் பற்றிய முற்றாய்வின் தர்க்கப்பூர்வ நீட்டிப்பு.  உடலே அவரது அறிக்கையாக மாறுகிறது. 

இறுதியாக ஷேர்-கில் மறுகண்டுபிடிப்பு செய்ததுபோல், சிவப்பின் முக்கியத்துவம் பற்றிய ஒரு கருத்து, ராஜ்புத் ஓவியங்களில் பிரதானமாகப் பயன்படுத்தப்படும் சிவப்பு, கருநீலம், காவியேறிய மஞ்சள் ஆகிய வண்ணங்களைப் படுக்கை விரிப்பில் ஓய்வெடுக்கும் பெண்ணின் ஓவியத்தில் அவர் பயன்படுத்தியுள்ளார் அமைதியாக படுத்திருக்கும் ஒரு பெண்ணின் உடல்மீது ஒரு வகை உணர்ச்சியை உட்புகுத்துகிறார்.  அதேபோல், வண்ணங்களில் இசை, அர்பித்தா சிங்கின் ஓவியங்களையும் ஆக்கிரமிக்கிறது.  அவர் வண்ணங்களின் வாயிலாகப் பொருள் பற்றி முற்றாய்கிறார், கண்டுபிடிக்கிறார், அதை புரட்டிப் போடுகிறார்.  இப்போது அக இருப்பு உடல் வெளிப்பாடாக மாறுகிறது உணரும் உணர்ச்சி, இது வண்ணங்களன்றி வெளிப்பாடு கொள்ளாது.  அவரது சிவப்புப் பெண் (women in Red 1985) ஈயப் பெட்டியின் மீது அமர்ந்திருக்கும் பெண் (woman sitting on a Tin Trunk 1987) ஆகியவை சிவப்புக் கோடுகளால் போர்த்தப்பட்டுப் பொறி வைத்துப் பிடிக்கும் தன்மை பெறுகிறது.  10 வருடங்கள் கழித்து, அவர் இந்தக் கருப்பொருளுக்கு மீண்டும் திரும்புகிறார். இப்போது அவரது சிவப்பு பெண் (1994) இந்த உடைகளை முழுவதுமாகக் களைந்தவளாக இருக்கிறாள்.  அதிரக்கூடிய வலிமையைப் பரப்பி, தான் கண்டுள்ள புதிய சுதந்திரத்தை அப்பெண் சினமூட்டும் சைகையாகக் காட்டி குந்தியிருக்கிறாள். இதுவே பெண்மை பற்றிய அம்மணமான உண்மை உடல் ஒரு திறந்த அறிக்கையாக! 

கீத்தி சென் ஒரு கலை வரலாற்றாசிரியர் மற்றும் இந்தியா இண்டர்நேஷனல் சென்டர் காலாண்டிதழின் ஆசிரியர். அவரது சமீபத்திய புத்தகம் ‘பெண்மை நீதிக் கதைகள்: ஓவியம், புகைப்படம் மற்றும் திரைப்படம் ஆகியவற்றிலிருந்து இந்தியப் பெண்களை மெய்யுருக் காணுதல்’.  [Feminine Fables: Imaging the Indian Woman in Painting, Photography and Cinema' (Mapin Publishing, Ahmedabad, 2002)]

(குறளி ஜூன் மாத (முதல்) இதழில் வெளிவந்துள்ள கட்டுரை)

* மொ.ர்
மொழிபெயர்ப்பில் பிழை திருத்தங்கள் உதவி: கவிதா

ஸ்பிவக்குடன் உரையாடல்



புலான் லஹ்ரி

 தமிழாக்கம் - கொற்றவை

காயத்ரி சக்ரபொர்த்தி ஸ்பிவக், சர்வதேசிய மார்க்சியப் பெண்ணியக் கட்டுடைப்பாளர் வரிசையில், முன்னணி நபர்களில் ஒருவராகப் பலரால் கருதப்படுபவர். அடையாளம் பற்றிய கருத்தாக்கங்கள், தன் அறிவுசார் வளர்ச்சி மற்றும் நடப்புப் பிரச்சனைகள் குறித்து பேசுகிறார். ப்ரத்யேக பேட்டியிலிருந்து சில பகுதிகள்....

மானுடவியல் துறையின் பல்கலைக்கழக பேராசிரியராக, நியு யார்க் ஐவி லீக் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ளஅவருடைய புத்தம் புதிய அலுவலகத்தில் நான் காயத்ரி சக்ரபொர்த்தி ஸ்பிவக்குக்காக காத்திருக்கிறேன் – 264 வருட வரலாற்றில் அப்பல்கலைக்கழகத்தின் உயரிய மரியாதையை பெற்றிருக்கும் வெள்ளையரல்லாத ஒரே பெண்மணி – நான் ஒப்புக்கொள்கிறேன், எனக்கு நடுக்கமாக இருக்கிறது. 

நீண்ட கால பணியோடு, 68 வயதிலும் ஸ்பைவாக் ஓர் பிரபல கல்வியியலாளர். தி நியு யார்க் டைம்ஸ் கூறியது போல் புரிந்து கொள்வதற்கு கடினமான பிரபலம்.

குறுக வெட்டிய தலைமுடியுடன், தோள்பட்டையில் ஓர் பையுடன் (படைவீரர்கள் உணவு சேகரிக்க எடுத்துச் செல்லும் முரட்டுப் பை போன்ற ஒன்று  haversack – மொ.ர்), புடவை அணிந்தவராக அவர் வருகிறார் – நிராயுதபாணியின் புன்னகையோடு அவரைக் கண்டவுடன் – நான் சற்று இயலமைதி கொண்டேன்.

நீங்கள் புடவை அணிந்தே உலகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்கிறீர்கள். அது உங்கள் அடையாளத்திற்கான அறிக்கையா?

நிச்சயமாக அப்படிச் சொல்ல முடியாது...நான் புடவை அணிகிறேன்..எப்போதும் அணிந்திருக்கிறேன். உங்களுக்குத் தெரியுமா, எனக்கு 68 வயதாகிறது. இதுவே எனக்கு மிகவும் வசதியான உடையாக இருக்கிறது...நான் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றியதே இல்லை... நான் ஒரு அடையாளவாதியல்ல. நான் சில வேளைகளில் மேற்கத்திய உடைகளை அணிகிறேன். ஆனால் பெரும்பாலும் புடைவையே அணிகிறேன், ஏனென்றால் அது மலிவாகவும் இருக்கிறது, மேலும்  அந்த புடைவையின் மடிப்பிற்கு முன்னால் எத்தகைய நாகரிக பாணிக்கான முயற்சியும் தோற்றுவிடுகிறது.  அதை நான் ஒரு பாரம்பரிய உடையாக கருதுவதில்லை, ஏனென்றால் இவ்வகையில் புடவை அணியும் முறை தாகூர் குடும்ப பெண்களிடத்தும், மும்பை பெண்களிடத்தும் ஓர் உரையாடல் மூலம் கண்டறியப்பட்டது, ’சைக்கிள் ஓட்டும்பொழுது வசதியாக இருக்கும், மற்றும் அதுபோன்ற பிற நிர்வகிப்பு வசதிகளுக்காக அப்படி கட்டும் முறை வந்தது. என்னைக் காண வரும் நபர்களும் எனக்கு புடைவைகளையே பரிசாக அளிக்கிறார்கள், அதனால் அது சிக்கனமான ஒன்றாகிவிடுகிறது. எனது அடையாளம் பற்றி எனக்குத் தெரியாது..அப்படி ஏதேனும் இருக்கிறதா... புடவை சமகால ஆடை என்பது என் கருத்து. நான் மேற்கத்திய உடைகளை அணிகிறேன், 57 சதவிகிதம் புடவை அணிகிறேன். 

நீங்கள் அமெரிக்கா வரும்பொழுது மிகவும் இளம் வயதினராக இருந்தீர்கள்
பத்தொன்பது……

தனித்து நிற்பது (பார்வையை கவரும் வகையில் – மொ.ர்) உங்களுக்கு சிரமமாக இருக்கவில்லையா?

நான் எப்போதும் தனித்தே நின்றிருக்கிறேன் (சிரிக்கிறார்).  வியப்பளிக்கும் வகையில் நான் மிக உயரமாக இருந்தேன் அத்தோடு நான் விசித்திரமானவள்.  அதனால் தனித்து நிற்பது எனக்கு பழக்கப்பட்ட ஒன்றே. அது ஒரு சிறுபிள்ளைத்தனமான குறிப்பு, ஆனால் உண்மைதான். ஒருவர் நன்மைக்காக எழுந்து நிற்கிறாரா இல்லையா என்பது வேறு விசயம்அது எனக்கு ஒரு பொருட்டல்ல.. எனக்கு பத்தொன்பது வயது மட்டுமே, அப்போது எனது வீட்டில் நான் ஏற்கனவே முதுகலைக் கல்வியின் இரண்டாவது ஆண்டு மாணவி, நான் இங்கு பட்டதாரியின் வேலையைச் செய்யவே வந்தேன். நான்கு வருடங்களில் நான் உதவி பேராசிரியர், அதனால் மற்ற பார்வையைக் கவரும் பதின்பருவ வயதினரைப்போல் அல்லாமல் நான் மதிப்புமிக்கவளாக பார்க்கப்பட்டேன்.  அதுமட்டுமல்லாமல், 1961களில் லிண்டன் ஜான்சன் இடஒதுக்கீட்டை உயர்த்துவதற்கு முன்னர் ஐக்கிய அமெரிக்காவின் ஆங்கிலப் பிரிவுக்கு இந்தியர்கள் அதிக அளவில் வரவில்லை. எனக்கு யு.எஸ் பற்றி எல்லாம் தெரியும் எனும் உணர்வில் இருந்தேன். உங்களுக்கு தெரியுமா, நான் ஒரு கொல்கத்தா பெண்நான் டைம்ஸ் நாளேடுகள் எல்லாம் படித்துள்ளேன். குடியேறுதல் குறித்தான புதினங்கள் ஏதும் இருக்கவில்லை, அதனால் கலாச்சாரம் அது, இதுவென்று நான் யோசிக்க வேண்டும் என்று அறிந்திருக்கவில்லை. நான் வந்தேன், வகுப்புக்கு செல்லத் துவங்கினேன், புடவை அணிவது விந்தையான ஒன்று என்று நிணைக்கவில்லை. என் இந்திய குடியுரிமை குறைபடாமல் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம். நான் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எப்போதும் எண்ணியதில்லை.

அமெரிக்காவில் தான் உங்களது பெரும்பான்மையான வாழ்வு காலத்தை செலவழித்திருக்கிறீர்கள்

49 வருடங்கள்......

நீங்கள் உங்களை எப்படிக் காண்கிறீர்கள்? இந்தியரா இல்லை அமெரிக்கர்களில் ஒருவரா?

உண்மையில் எனக்குத் தெரியாது.  ஒரு நபர் அடையாளம் குறித்து என்ன நிணைக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. தேசீய விடுதலை எனும் நடைமுறையிலிருந்து உருவான ஒன்றாக இருக்கலாம். நீங்கள் இந்த தேசத்தினரவராக உங்களைக் கருதியிருக்கலாம், அதனால் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றும்.. ஆனால் உண்மையில் நான் என் சுயத்தை பற்றிய, அடையாளம் பற்றிய கேள்விகளை என்னுள் எழுப்புவது குறித்துக் கவனம் செலுத்துவதில்லை. உங்கள் கேள்விக்கு என்னால் முழுமையான பதிலொன்றைக்  கொடுக்க இயலாது.  ஒருவர் தன்னைப்பற்றிய ஒரு உருப்படிமவார்ப்பை (stereotype) அவருக்குள்ளாகவே கொடுத்துக்கொள்கிறார் என்று நிணைக்கிறேன், சுய உருப்படிமவார்ப்பு - அது ஆர்வமூட்டுவதாக இருப்பதில்லை, அதனால் அவற்றை யோசிப்பதில் நான் நேரம் செலவழிப்பதில்லை.

எது உங்களை அமெரிக்காவுக்கு அழைத்து வந்ததுஇந்நகர்வை எது தூண்டியது?
பல்கலைக்கழகத்தில் இடம் கிடைப்பதே கடினமான ஒன்றாக இருந்தது. என்னுடைய பேராசிரியர்களில் ஒருவர் எனக்கு ‘முதல் வகுப்பு (first rank) கிடைக்காது என்றார். நான் என் தந்தையை இழந்திருந்தேன் மேலும் இளங்கலைப் பட்டத்திற்காக (B.A) நான் மிகவும் கடினமாக உழைத்திருந்தேன்.  எனக்குத் தெரிந்தவரையில், அக்கட்டத்தில், தன் அயல்நாட்டு பயணத்திற்கு பொருளாதாரம் இல்லாத சூழலில், அதுவும் மானுடவியல் துறையில்..யாருக்குத் தெரியும், இதை நான் கவனமாக சரிபார்க்கவில்லை, என்ன செய்ய 18 வயதே ஆகியிருந்ததுமுதல் வகுப்பு இல்லையென்றால் கடவுச்சீட்டுகூட கிடைப்பது சிரமமாக இருக்கும் என்று நிணைந்திருந்தேன்…’வெளியேறுவதற்கு இதுவே சரியான தருணம் என்று நிணைத்தேன்..அதனால் கிளம்பினேன்பிர்த்தானியம் போக எனக்கு விருப்பமில்லை..ஏனென்றால் நான் சாகச விரும்பி..பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் இந்திய அனுபவத்தின் நீள்விரிவாக்கமாக இருக்கும் அத்தோடு நான் பி.ஏ வை இரண்டாம் முறையாக படிக்கவேண்டும், அச்சூழலில் அது இயலாத காரியம்அதனால் கிளம்பினேன்... கடன் வாங்கிணேன். 

எனக்கு கடன் அளித்தவரை முன் பின் தெரியாது, ஆனால் அவர் பெயர் மட்டும் தெரிந்திருந்தது. என்னிடம் அடமானம் வைக்க எதுவும் இல்லாததால் அவர் அதை வாழ்நாளுக்கான பணையம் என்றார் – அடமானம் என்றால் என்னவென்றுகூடத் தெரியாது – அப்போது வாழ்நாள் பணையம் இருக்கவில்லை என்றே நிணைக்கிறேன். எவ்வளவு அப்பாவியாக இருந்திருக்கிறேன் என்று நீங்கள் கணிக்கலாம்.  படிப்பு, பரீட்சை, இலக்கியம் ஆகியவற்றில் புத்திசாலியாக இருந்தேன் ஆனால் நடைமுறை அறிவு இருக்கவில்லை. என் அருமைத் தாயாலும், தந்தையாலும் அழகாக பொத்தி வளர்க்கப்பட்டேன், நான் கிளம்புவதற்கு 6 வருடங்கள் முன்னர் அவர் இறந்துபோயிருந்தார். எதுவும் செய்யும் சுதந்திரம் இருந்தது, அப்படித்தான் இங்கு வந்தேன். ஒரு பணயப்பத்திரத்தில் கையெழுத்திட்டேன். ஐந்து வருடங்களில் பணம் கட்டத் தவறினால் அந்நபர் சொல்லும் எந்த வேலையாக இருந்தாலும், சட்டத்திற்கு புறம்பானதாகவோ, குற்றசெயலற்றதாகவோ இல்லாமல் இருந்தால் செய்வேன் எனும் பத்திரம் அது.  சிறுகச் சிறுகச் சேமித்து ஐந்து வருடங்களில் கடனை அடைத்தேன், நான் பணைத்தை அடைத்துவிட்டேன் என்று சொல்லி திரும்பச் செலுத்தவந்த பணத்தை வேண்டாம் என்று சொல்லும் கருணை கொண்டிருந்தார் அந்நபர். அதுவே சேமிப்பிற்கான துவக்கம் (சிரிக்கிறார்).

உங்கள் அறிவுசார் பரிணாமம் குறித்து சிறிது சொல்ல முடியுமா.  உலகளாவிய தளத்தில் முன்னணிச் சிந்தனையாளர்களில் ஒருவராக நீங்கள் கருதப்படுகிறீர்கள். எவ்வளவு தூரம் வரை செல்வீர்கள் என்று ஏதாவது உணர்ந்திருந்தீர்களா?

இல்லை, நிச்சயமாக இல்லை (சிரிக்கிறார்). நான் பொய்யர் இல்லை என்பதைத் தவிர வேறெதுவும் யோசிக்க முனைந்ததில்லை.  நான் கல்விமான் இல்லை.  மிகவும் வேகமாகச் சிந்திக்கும் திறனுக்கான பயிற்சியோடு நான் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்பட்டேன், ஆனால் நான் கல்விமானாக இல்லாததால் சக்கரத்தை மீள்கண்டுபிடிப்பு செய்வேன், பிறகு சக்கரம் கண்டுபிடிப்பது ஒன்றும் அவ்வளவு மோசமான காரியம் இல்லை என்று சமாதானம் செய்து கொள்வேன்.அதனால் தான் இவ்வளவு தைரியமாக இருக்கிறேன். நான் வெவ்வேறு துறைகளில் நுழைவேன், அத்துறையினர் எல்லோரும் எனக்கு ஆதரவளித்திருக்கின்றனர் என்று எப்போதும் சொல்லமுடியும். வெளியிலிருந்து ஒருவர் இத்துறைக்கு வருகிறார், முயற்சிசெய்கிறார் என்று அவர்கள் உதவுவர், அதேவேளை தவறு செய்தால் கையும் களவுமாகப் பிடிப்பர். பிமல் கிருஷ்ன மத்திலால் போன்றோர் நிணைவுக்கு வருகின்றனர். 

எனக்கு மேல்நிலைப் பள்ளி வகுப்பின் மூலம் ஆழமான சமஸ்கிருத அறிவு கிட்டியது. வரலாற்று கதைகளான ராஜரத்னகிரி, மகாபாரதம் ஆகியவற்றை அகராதி இல்லாமல் என்னால் படிக்க முடியும்.  என்னால் தத்துவார்த்த அல்லது மொழியியல் சமஸ்கிருதத்தைப் படிக்க முடியாது, யாராவது விளக்க வேண்டும். இந்த சமஸ்கிருத அறிவைக் கொண்டு நான் இங்கும் அங்கும் வாசிப்புகளை நிகழ்த்தியுள்ளேன். பிமல் மற்றும் பீட்டர் ஃபான் டேர் வீர் போன்றோர் சொல்வார்கள் நல்லது, இத்துறைக்கு வெளியிலிருந்து ஒருவர் கவனமாக முனைகிறார், கடினமாக முயன்று ஆர்வமூட்டும் தகவல்களோடு வருகிறார்.  உடனே பிமல் பாசத்தோடு சொல்வார், இது புதுவகையான வாசிப்பு என்று அவர்களுக்குச் சொல். அவருடைய அதிகாரத்தை எவரும் கேள்வி எழுப்ப மாட்டார்கள் என்பது அவருக்குத் தெரியும்.  மறுபுறத்தில் தங்களது துறைக்குள் முடங்கிப்போனவர்கள், சிறிது நல்லவர் அல்லாதார் என்னிடம் விரோதத்தைக் கையாண்டனர்.  வரலாற்றில், சமஸ்கிருதத்தில், அரசியல் கோட்பாட்டில்...நான் சட்டரீதியாக, கோட்பாட்டு ரீதியாக தர்மசாஸ்த்ராவை வாசிக்கத் தயாராகவில்லை என்று ஒரு சக பணியாளர் சொன்னார், பெயரை குறிப்பிடமாட்டேன், சொல்லப்போனால் பத்திரிகையில் சொன்னார். விளிம்பு நிலையில் உள்ளவர்கள் பேசலாமா எனும் கட்டுரைத் தொகுப்பில் நான் அவருக்கு சொன்னது இப்போது, உலகம் முழுமையிலும் உள்ள பெண்கள் ஈடிபசை படிக்கும் போது அவர்கள் லத்தீனிய, கிரேக்க மொழி அறிஞர்களாயிருப்பதில்லை. என்னைப் பற்றிய பண்பாட்டின் மரபுரைகள் என்ன சொல்கிறது என்று என்னால் படிக்க முடியும், அதை நான் இந்து மதத்தில் உள்ள ஏழைப் பெண்களிடம் கூடப் பகிர்கிறேன். எனக்கு உள்ளிருந்து உரிமைகள் இருக்கிறது (I have a right from within), எனக்கு சமஸ்க்ருதம் கொஞ்சம் தெரியும். 

நான் பொருத்தமான வாசிப்பாளர் இல்லை என்று சொல்வதற்கு நீங்கள் யார்? எனக்கு நானே சொல்லிக்கொள்ள இருப்பது இவையே, நான் கடினமாக முயல்கிறேன், நான் பொய் சொல்வதில்லை, நான் கல்விமானில்லை ஆனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உழைக்கிறேன், மேலும் அந்தந்தத் துறையில் உள்ள திறமை மிக்க அறிஞர்கள் நான் முயல்கிறேன் என்பதற்கு மதிப்பளிக்க விரும்புகிறேன்.  நான் என்னை அப்படித்தான் பார்க்கிறேன்.  ஒரு மாபெரும் சிந்தனையாளராக நான் என்னைப் பார்ப்பதில்லை.  என்னுடைய எழுத்துக்களைப் படித்திருப்பதாக, என் பெயரை அறிந்திருப்பதாக எவரேனும் சொல்லும்பொழுது நான் வியப்படைகிறேன்.  என்னால் வேறு மாதிரியாகக்கூடச் சொல்ல முடியும். மாத்யு அர்னால்ட் பாணியில் சொல்வதானால் எனது மைல்கல்லில் இதுவும் ஒன்று.  பார்வையாளர்கள் நிறையப் பேர் இருந்த அரங்கில் – குறைந்தது ஆயிரம் பேர் இருந்திருப்பர், என் தாய் ஒருமுறை என்னுடன் இருந்தார் – நான் பேசிவிட்டுத் திரும்பினேன். நிறைய கைதட்டல்கள், கேள்விகள். அம்மாவுடன் வீட்டிற்கு வந்தேன், சகோதரன் கேட்டார் நல்லது, அவள் எப்படி என்று. என் தாய் தனது அடிமனத்திலிருந்து என்னை நேசிப்பவர், ஆனால் கேள்விகளற்ற அகம்பாவம் ஒருவரிடத்து இருக்குமேயானால் அது சிறந்ததில்லை – அது அறிவை முடக்கிவிடும் என்று அவர் அறிந்துவைத்திருந்தார் – அதனால் ஒரு புன்னகையோடு அவர் பக்கிம் சந்தராவிற்கு ஸ்டார் திரையரங்கில் வைக்கப்பட்ட பழைய விளம்பரத்தை மேற்கோளாகச் சொன்னார்.  

எனக்கு நிணைவிருக்கிறது, குதிரை மீது வங்காள விளக்குகளுடன் கோபிந்தாலால் மேடைக்கு வந்தது. என் தாய் சகோதரனைப் பார்த்துச் சொன்னர் ஹே ஹே கண்டோ, ரேய் ரேய் பாப்பர், அஸ்தோ ப்ரிஸ்தே கோபிந்தலால்.  இதை அவர் அன்போடுதான் சொன்னார், ஆனால் அது என்னுள் ஓர் உணர்தலை ஏற்படுத்தியது. இதுபோன்ற சிறு துரும்பு நிகழ்வுகளை ஏதோ பெரிதாகச் சாதித்துவிட்ட கர்வத்தோடு நிணப்பதென்பது எத்தகைய முட்டாள்தனமென்று அப்போது உணர்ந்தேன்...நான் மறக்கவில்லை.  அது என்னைக் காக்கிறது. 

நிங்கள் பணியாற்றிய மொழிகள் எண்ணற்றவை..........

மற்றொரு சுவாரசியமான கதை இருக்கிறது.  நான் கடன் வாங்கியிருந்தேன் இல்லையா? அடுத்த வருடம் எனக்கு புத்தாய்வுக்கான அனுமதி கிடைக்கவில்லை, ஏனென்றால் நான் பிறமொழியாளர்.  இப்போது அவை மாறிவிட்டேன், சொல்லப்போனால் எங்களின் பணிகளால் தான் அவை மாறின என்றும் சொல்லலாம்.  எனக்குப் பனி அனுமதிச் சான்று இல்லை, அடுத்த வருடம் நான் என்னதான் செய்யப்போகிறேன் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அதனால் பால் தே மான் கருத்தரங்கில் ஓர் அறிக்கை சமர்பித்தேன். புதிய ஒப்பிலக்கியத்துறையில் தலைமைப் பதவியில் அவர் அப்போதுதான் அமர்த்தப்பட்டிருந்தார்.  என் அறிக்கை மதிப்புக்குறியதாய் இருந்தது. அப்போது மாணவர்களுக்கான நிதி உதவியோடு கூடிய இடங்கள் நிரப்பப்பட்டிருந்தது, ஒரு இடம் மட்டும் காலியாக இருந்தது -  வெகுநாட்களுக்குப் பின்னர் ஒப்பிலக்கியம் பற்றிய ஒரு நிகழ்வை நான் இயக்கிக் கொண்டிருந்தபோது இதை அறிய நேர்ந்தது. அது பற்றி யோசித்தேன், அப்போது நான் திகைப்பூட்டும் அளவுக்கு புத்திசாலி, திரு தே. மான் ஒப்பிலக்கியத்தில் புத்தாய்வுப் பணி செய்கிறாயா என்று கேட்டபோது நிச்சயமாக என்றேன். ஏனென்றால் அந்த இடம்...நீ நிரப்பவில்லையென்றால் அது வீணாகிவிடும் என்றார். மேலும், உன் அயல் மொழி என்ன என்று கேட்டார். உடனே நான் ஆங்கிலம் என்றேன்.  நான் குறிப்பிட வேண்டும், எனது தாய்மொழியை அயல் மொழியாகச் சொல்ல வேண்டும் என்றுகூட எனக்குத் தெரியவில்லை. ஒப்பிலக்கியத்துறையில் சேர நிறைய பேர் அவ்வாறு சொல்வார்கள், அத்தகைய அரசியல் அசைவு ஆழ்ந்த சந்தேகத்திற்குரியது. 

ஒரு அயல் நாட்டில் பணம் கிடைக்கும் என்பதற்காக தாய் மொழியை அயல் மொழி என்பதா?  அதனால் நான் ஆங்கிலம் என்றேன். அவர் சொன்னார், நல்லது, ஆனால் அது போதாது, வேறு என்ன நான் சொன்னேன் ஒன்றுமில்லை நான் கொல்கத்தாவின் அலையான்ஸ் ஃப்ரான்ஸேவில் ஆறு மாதங்கள் ஃப்ரென்ச் மொழி பயின்றிருக்கிறேன், நான் வசித்த பாலிகஞ்சில் சுதந்திரப் போராளியின் மனைவியான பாதுரி எனும் விதவைப் பெண்ணிடம் மூன்று மாதங்கள் ஜெர்மானிய மொழி பயின்றிருந்தேன்.  அதனால் நான் கேட்டேன் அம்மொழியில் வாசிப்பேதும் இருக்குமா? அவர் சொன்னார் ஆமாம். விரிவுரைகளும் அம்மொழியில்தான் இருக்குமா? அவர் சொன்னார் சில நேரங்களில். நான் சொன்னேன் நான் அம்மொழியில் தான் ஆய்வறிக்கைகள் எழுத வேண்டுமா? அவர் சொன்னார் அது அவசியமில்லை. நான் சொன்னேன் சரி. நான் உள்நுழைந்தேன். ஏனென்றால் என்னிடம் பணம் இல்லை. மேலும் அவர் சொன்னார், நீ மொழி வகுப்புகளுக்குச் செல்ல முடியாது. ஐவி லீக் பள்ளியில் ஒப்பிலக்கியத்தில் முதுகலை படிப்பதானால் நீ அம்மொழிகளை அறிந்துவைத்திருக்க வேண்டும்.  நான் சொன்னேன், சரி, நான் முயல்கிறேன். என்னிடமிருந்த ஃப்ரென்ச்சும், ஜெர்மனும் அவ்வளவுதான், அதை வைத்து இவ்வளவு தூரம் நீந்திவிட்டேன்.  நான் தைரியசாலி.  நான் பெருமையாக ஒன்றைச் சொல்லிக்கொள்ளலாம்: சில வருடங்களுக்கு முன்னர், கார்னெல்லில் ஒப்பிலக்கியத் துறையின் நாற்பதாவது ஆண்டு விழா –அத்துறை உருவாக்கிய சிறந்த மாணவியாக  என்னை அழைத்திருந்தனர் – நான் எனக்குள்ளே யோசித்தேன், ஐய்யோ..எந்த மொழியும் தெரியாமல் அப்படியே உள்ளே போனேன்! அது வியப்புக்குரியது. நான் எப்படி தெரிதாவை அதுவும் ஃப்ரென்ச்சில் மொழி பெயர்த்தேன் அதுவும் தெரியாது, ஆனால் நான் செய்தேன்.

தெரிதா போன்ற ஒரு சிக்கலான சிந்தனையாளரை மொழிபெயர்ப்பதற்கு எவ்வளவு காலம் பிடித்தது?

உடனடியாக, ஏனென்றால் அவர் யாரென்றே எனக்குத் தெரியாது.  ஐயோவாவில் நான் உதவிப் பேராசிரியராக இருந்தேன்... உங்களுக்குத் தெரியுமா, அப்போது எனக்கு இளம் வயது: 24/25 இருக்கலாம். நான் நிணைத்தது: இதோ இருக்கிறேன்...முதல் வகுப்புச் சாண்றிதழுடன், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதல் மாணவி, கொர்னலில் இருந்து முனைவர் பட்டம், இதோ இங்கே ஐயோவாவில்  முட்டாள்தனம் உண்மையில் – என்னுடைய அறிவுசார் வாழ்க்கையை நான் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.  அதனால் அட்டவனைகளைப் பார்த்துப் புத்தகங்கள் வாங்க பதிவு செய்து வாங்குவேன், அப்போது க்ராமட்டாலஜி புத்தகத்தையும் வாங்கினேன்.  அதை நான் செய்யாமல் இருந்திருந்தால்....எனக்கு தெரிதாவின் பெயர் கூடத் தெரியாது.  நான் தொலைவில், வெகு தொலைவில் இருந்தேன்.  மின்னஞ்சல், தொலைநகல் இவையெல்லாம் இருக்கவில்லை.  எனக்கெப்படித் தெரியும்? அந்தப் புத்தகத்தை நான் வாங்கியிருக்காவிட்டால் என் வாழ்க்கையே வேறு மாதிரி இருந்திருக்கும்.  அந்த விபத்து பற்றிய நிணைவு என்னுள் பீதியை ஏற்படுத்துகிறது..அதுவும் ஃப்ரென்ச்சு அறிவும் சிறிதே – அது மிகவும் சிக்கலான ஒரு புத்தகம் – அதுவும் 25 வயதில். வாழ்நாளில் நான் செய்த ஒரே புத்திசாலித்தனமான விசயம் அதுவாகத்தான் இருக்கும்.  நான் அந்தப் புத்தகத்தைப் படித்தேன், அது ஒரு நல்ல புத்தகம் என்று உணர்ந்தேன்.....எனக்குள் நான் நிணைத்துக்கொண்டேன்: நான் ஒரு இளம் உதவிப் பேராசிரியர், இவர் ஒரு இளம் அறியப்படாத எழுத்தாளர். 

இந்தப் புத்தகத்தைப் பற்றி ஏதாவது எழுத வேண்டும், ஆனால் இது உயரப் பறக்கப்போகிறது என்பதெல்லாம் சாத்தியமில்லை... மாசஷூட்ஸ் பல்கலைக்கழகப் பதிப்பகம் மொழிபெயர்ப்புகளை வெளியிடுவதாக ஒரு காக்டெயில் விருந்து நிகழ்ச்சியின் போது  ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்.  நான் ஏதாவது செய்ய முடியும் என்று அப்போது உணர்ந்தேன்.  அச்சிந்தனை அப்போது உருவானது. ... மாசஷூட்ஸ் பல்கலைக்கழக பதிப்பகத்திற்கு இப்படி முட்டாள்தனமான ஒரு கடிதத்தை எழுதினேன்:  நான் ஒர் அற்புதமான மொழிபெயர்ப்பாளர் – இதுவரை நான் எதையும் மொழி பெயர்த்ததில்லை! ஒரு பக்கத்தை முடிக்க எனக்கு ஒரு வாரம் பிடித்தது.  நான் ஒரு அற்புதமான மொழிபெயர்ப்பாளர், அது ஒரு அற்புதமான புத்தகம், ஆனால் தனிக்கட்டுரை அளவு அறிமுகத்தை எழுதுவதற்கு அவர்கள் என்னை அனுமதிக்கவில்லையென்றால் நான் மொழிபெயர்க்க மாட்டேன் என்று கூறி கடிதத்தை அனுப்பி வைத்தேன். இந்த கேள்விக் கடிதம் அப்பாவித்தனமானது, எந்த சிபாரிசும் இல்லாதது...இக்காலகட்டத்தில், என் மாணவர்களின் கைப்பிரதிகளைப் பதிப்பகங்களுக்கு நான் சிபாரிசு செய்கையில், அப்போதெல்லாம் சிபாரிசு செய்ய யாரும் இருக்கவில்லையே என எனக்குள் நிணைத்துக்கொள்வேன். வெறும் கேள்விக் கடிதம் மட்டும்தான். நான் எப்போதும் தன்னம்பிக்கை மிக்கவள்,– அந்தக் கடன் வாங்கிய சம்பவம் போன்று, சொந்தக் காலில் நிற்க முயற்சிப்பவள்  அதனால் அவர்கள் எனக்கொரு வாய்ப்பு கொடுக்க நிணைத்தார்கள், கொடுத்தார்கள்.  

அவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன், இப்படித்தான் அது நடந்தேரியது. மறுயோசனையே வரவில்லை. பரிச்சயம் இல்லாத செயலைச் செய்ய துணிவதால் நான் முட்டாள் என்றார் என் தலைவர்.  நான் பிரித்தானிய இலக்கியத்திலிருந்து விலகி ஏன் அதற்கு செல்கிறேன் என்பது அவருக்கும் தெரியாது. ஆனால் அது என்னை ஒரு நட்சத்திரமாக்கியிருக்கிறது இல்லையா? அதன் பிறகு ஒரு முழு வருடம் விடுப்பெடுத்தேன், ஏனென்றால் இளங்கலை, முதுகலை எதிலும் நான் தத்துவம் பற்றிய வகுப்பு படித்ததில்லை. சொல்லப்போனால், நான் தே மானுடைய மாணவியாக இருந்தபோது, அவர் தெரிதாவைச் சந்தித்திருக்கிறார், ஆனால் எனக்குத் தெரியாது. ஒரு வருட விடுப்பு பெற்று, ஐயோவாவிலிருந்து ஓய்வுபெற்றுக் கொண்டேன்...அவர்கள் மிகவும் கருணையுடன் விடுப்பு கொடுத்தார்கள். எனக்கு நானே ஒரு வகுப்பறையை உருவாக்கிக் கொண்டேன், எல்லா தத்துவப் பனுவல்களையும் நானாகவே படித்தேன், என் அறிமுகத்தை எழுதினேன். உண்மையில் இப்போது யோசித்துப் பார்த்தால் தோன்றுவது...ஐயோ கடவுளே, எப்படி எல்லாவற்றையும் சமாளித்தேன்?

விளிம்பு நிலையில் இருப்பவர்கள் பேசலாமா - எப்படி இது உருவானது?

1981 இல் யேல் ஃப்ரென்ச்சு ஸ்டூடியோவிலிருந்து ஃப்ரென்ச்சு பெண்ணியம் குறித்து எழுதவும் திறனாய்வு விமர்சன விசாரணைத் துறையிலிருந்து கட்டுடைப்பு பற்றி எழுதவும் அழைப்பு வந்தது.  அச்சூழலில் அடையாளம் பற்றிய எண்ணம் சிறிது வந்தது, ஏனென்றால் 1981 களில் அது காற்றில் இருந்தது. எட்வர்ட் செயித் எனக்கு நெருங்கிய நண்பர் – 74 இல் அவரைச் சந்தித்திருந்தேன். அவருடைய இறப்பு வரை நான் ஓரியண்ட்டலிசம் படிக்கவில்லை, இருந்தாலும், அந்த எண்ணம் காற்றில் இருந்தது.  அதனால் ஃப்ரென்ச்சு பெண்ணியத்தை சர்வதேசக் கட்டமைப்புக்குள் பொருத்தி யேல் ஃப்ரென்ச்சு ஸ்டூடியோஸுக்காக எழுதினேன். அதன் மூலம் ஜூலியா க்ரிஸ்தவாவுடனான நட்பை நிரந்தரமாக இழந்தேன், ஏனென்றால் சீனப் பெண்கள் பற்றிய அவரது முட்டாள்தனமான புத்தகத்தை விமர்சித்திருந்தேன் மேலும் திறனாய்வு விசாரணையைக் கோரும் ஒரு முன்னுரையோடு திரௌபதியை மொழிபெயர்த்தேன்.  அத்தோடு ஃப்ரென்ச்சு கோட்பாடுகளை அப்படியே உள்வாங்கிக்கொள்ளக்கூடாது என்று என் உள்ளுணர்வு ஏதோ எனக்கு சொல்லியது, அது அப்படியே....  நீங்கள் அறிவுசார் பரிணாமம் பற்றி ஏதோ கேட்டீர்கள் இல்லையா: இதுவே இந்த கதைசொல்லியின் உருப்படிமவார்ப்பு சரியா? ஃபூக்கோ மற்றும் டெல்லூஸின் செவ்வி ஒன்றை பார்க்க நேரிட்டது – இவர்கள் இருவரும் எத்தகைய சிக்கலான கோட்பாட்டுப் பொருட்களை எழுதியுள்ளார்கள். இருவரும் சாதாரணமாகத் தங்களுக்குள் உரையாடும்போது கூட, தங்களது எழுத்துக்களில் இருக்கும் முன்விமர்சனக் கோட்பாடுப் பொருளை வெளிக்காட்டும் விதமாகவே பேசுகின்றனர். அதனால் முன்முடிவுகள் இருக்கத்தான் செய்கின்றன.  அதாவது... – சரி நான் இப்படி ஓர் உதாரணம் தருகிறேன்.  

நான் அமெரிக்கக் குடிமகள் இல்லை, ஆனால் என் தாய் குடிமகள். அவர் என் சகோதரனின் குடும்பத்தோடு இருந்தார்...அதனால் அவரைச் சார்ந்து இருந்தார். அவர் ஒரு ஆற்றல் நிறைந்த பெண்.  நாம் சமூக சேவகர் என்று சொல்வோமே, அதுபோல் தான் அவரும். இந்தியாவில், கொல்கத்தாவில் தன் வாழ்நாள் முழுமையும் அதற்காகக் கொடுத்தார், தனது 80 வயது வரை மனஉளைச்சல் நோய்க்குறியால் பாதிக்கப்பட்ட வியட்னாம் போர் வீரர்களுக்கு அமெரிக்காவில் 10000 மணி நேரத்தைக் கொடுத்திருப்பார். ஏனென்றால் குடிமகனாய் இருப்பதென்பது பொறுப்புக்களைச் சுமப்பது என்று அவர் கருதினார்.  சரியான அரசியல் பேசுபவர்கள் கூடத் தங்களது அடிமனதில் அமெரிக்கராய் இருப்பது வெள்ளையாய் இருப்பது என்று நிணைக்கின்றனர்.  இது போன்ற உணர்வுகளைத்தான் நான் கவனித்து வந்தேன்: கோட்பாட்டு உருவாக்கத்தில் வெளிப்படாத ஆனால் உரையாடல்களில் வெளிப்படும் அங்கீகரிக்கப்படாத முற்கோள்கள். அதிலிருந்து நான் மீள வேண்டும் என்று அக்கணத்தில் உணர்ந்தேன்.  இது அற்பமாகத் தோன்றும், ஆனால் அப்படித்தான் இருந்தது....தப்பிப்பதற்கு எங்கே செல்வது? அந்தப் பெண்...விளிம்பு நிலையில் உள்ளவர்கள் பேசலாமா எனும் தொகுப்பில் தூக்கிட்டுக் கொள்ளும் பெண்...என் பாட்டியின் தங்கைதான்...ஒருவகையில் எங்கள் குடும்பப் பெண்.  நான் அக்குறிப்பை எழுதவில்லை, ஏனென்றால் முதலில் அது சரியாக இருக்காது, இரண்டாவது உதாரணமாக, பெட்ரீஷியா வில்லியம்ஸுக்கோ அல்லது சையிடியா ஹார்ட்மென் ஆகியோருக்காக வெளிப்படுத்தும் இரக்க குணத்தை வெளிப்படுத்தாமல் மக்கள் அதற்கு வினையாற்ற வேண்டும் என்று நிணைத்தேன், ஏனென்றால் அவர்கள் கடந்தக்காலத்தோடு தங்கள் குடும்பத்தின் தொடர்பைக் குறித்துப் பேசினார்கள்.  அதுவே சிறந்த யோசனையாக இருந்தது.  

அப்பதிவை எழுதுவது எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குப் பின், அந்தச் செய்கையின் மூலம் அவர் ‘ஓர் ஆணுக்குச் சொந்தமான பெண்’ எனும் சிந்தனையை ஆழமாகக் கேள்வி எழுப்புவதாக என்னுள் உணர்ந்தேன், இறப்பினூடாக அப்பெண் அதைச் சரியாக உணர்த்திச் சென்றார் என்பதனை அக்குடும்பத்தில் உள்ள பெண்கள் மறந்துவிட்டனர். பொருளாதாரக் காரணிகள் நிறைந்தது என்று தெரிந்திருந்தாலும், சதி என்பதன் மூலம் இந்தத் தனிப்பட்ட ஒருவனுக்கு சொந்தம் எனும் அந்த சிந்தனையை அதிதீவிர வாக்குமூலமாக வைத்தேன்.  அது ஒரு மெய்மைச் சிந்தனை.. சரி.. அதனால் தான் நான் சொன்னேன் அவரால் பேச முடியாதென்று, அவரால் குரலெழுப்ப முடியாது ஏனென்றால் அவர் எழுப்பினார் ஆனால் கேட்கவில்லை.  பேச முடியாது என்பதற்கான பொருள் அதுவே.  இதைச் சொன்னதால் எனக்கு நிறையத் தொல்லைகள் வந்தது, இறுதியாக திபேஷ் சக்ரபொர்த்தி எனது நண்பரான மேகன் மோரிசிடம் ஒரு அற்புதமான விசயத்தைச் சொன்னார், காய்த்ரியை நோக்கிக் கேள்வியெழுப்பும் அம்மகள், விளிம்பு நிலையில் இருக்கும் மக்களின் குரலெழுப்பும் தன்மையை நீக்க வேண்டும் என்று சொல்பவர்கள்... அவரது கட்டுரையை விளிம்பு நிலையில் உள்ளவர்கள் பேசமுடியுமா என்று தட்டையாகப் புரிந்துகொள்கிறார்கள் போலும் (சிரிக்கிறார்)!. ..பேசுவது குறித்தல்ல அது.  விளிம்பு நிலையில் உள்ளவர்கள் பேசும்போது அதை கலகக் குரலாக, எதிர்ப்புக் குரலாக கருதுவதற்குப் போதுமான கட்டுமான அமைப்பு இங்கில்லை.  

அதுதான் அதன் பொருள்.  அதற்கு மேல் என்னால் எழுதமுடியவில்லை என்று நான் உணர்ந்தபோது, எனது ஆசிரியருக்கு இப்படி எழுதினேன் தயவு செய்து நிறுத்திவிடுங்கள், அல்லது ஏதாவது செய்யுங்கள்.  இதற்கு மேல் என்னால் இதைக் கட்டுப்படுத்தமுடியாது.  பிறகு, அவர்கள் அதை அப்படியே பதிப்பித்தனர்.

இத்தனை வருடங்களாக..

இத்தனை வருடங்களாக....ஆனால் பாருங்கள், அதுவே தொடக்கம், அதுவும் வேண்டுமென்றே குடும்ப உறவை நிராகரித்த என்னைப் போன்ற ஒரு நபருக்கு, என் பெற்றோர் இருவராலும், சகோதரிகள் மற்றும் கொள்ளுப்பாட்டிகளால்  நான் அன்போடு வளர்க்கப்பட்டேன்.  நான் பார்க்காத அந்தப் பெண் (அவர் இறக்கும் போது எனக்கு வயது 17) ஒரு குறிப்பிட்ட திசையில் செல்வதன் மதிப்பை  உண்மையில் எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்.  இது வியக்கத்தக்கது, இல்லையா? ஆனால்,  விளிம்பு நிலை குறித்து யோசிப்பதற்காக எனது சொந்த வர்க்கத்திலிருந்து விலகி வேறு பாதையில் சென்றேன்.  க்ராம்சி சொல்கிறார் நாட்டு நலனை வலியுறுத்தும் ஆட்சிக் கட்டமைப்புகளில் இடமில்லாத மக்கள், இடம் மறுக்கப்பட்ட மக்கள்....அந்த நிலையை அடையமுடியவில்லை என்று தான் அர்த்தம்.  அவ்வகையில், விளிம்பு நிலை மக்கள் குறித்தான எனது சிந்தனை விளிம்பு நிலை மக்கள் பற்றிய படிப்பில் இருந்து சற்றே மாறுகிறது.  நான் விளிம்பு நிலை மக்கள் பற்றிப் படிப்பதில்லை..... அவர்களிடமிருந்து கற்கிறேன்.  அதில் சிறு வேறுபாடு இருக்கிறது.

உங்கள் சிந்தனை எதுவரை சென்றுள்ளது?

உலகமயமாக்கல் வரலாற்றுக் கட்டத்தில் கவின் கலை படிப்பு எனும் மிகப்பெரிய புத்தகமொன்றை ஏறக்குறைய முடித்துவிட்டேன். நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.  இருமுனைகளிலும் விருப்பங்களை மீள்-ஒழுங்கு செய்யவேண்டியுள்ளது, சரியா? எனது விருப்பம் விளிம்பு நிலை குறித்த ஆய்வுகளோடு நின்றுவிடுவதன்று.  நான் அதி-சக்தி குறித்தும் ஆர்வம் கொண்டுள்ளேன்....நான் தெற்காசிய குறித்துக் கற்பிக்கவில்லை.  சக்திவாய்ந்த நகாத்தில் உள்ள சக்தி வாய்ந்த பல்கலைக்கழகமொன்றில் முனைவர் பட்ட நிலையில் ஆதிக்க மொழியை கற்றுக்கொடுக்கிறேன்..  இந்த பள்ளிகள் 25 வருடங்களாகப் பின் தங்கிய மாவட்டம் என்று சொல்லக்கூடிய இடத்தில்தான் இருந்தன.  அதனால் இரு முனைகளிலும் விருப்பங்களை மீள்-ஒழுங்கு செய்ய வேண்டியுள்ளது எனக் கருதுகிறேன்.  வேறெதையும் விட நான் என்னை ஒரு பள்ளி ஆசிரியையாக மட்டுமே பார்க்கிறேன்.  நான் எழுதாமல் இருக்க முடியாது என்பதற்காக இப்புத்தகங்களை எழுதுகிறேன். அந்த அளவுக்கு ஒரு அதீத ஈர்ர்பு.  மிகச் சிறந்தது என்று சொல்லப்படும் புத்தகங்களின் சில மிக மோசமான பகுதிகளைப் படித்திருக்கிறேன். படிக்கும்போது என்னுடைய எழுத்து காலப்போக்கில் ஒரு தளத்தை அடையும் எனத் ஹோன்றும். ஏனென்றால் மிகுந்த கவனத்தோடும், நேர்மையோடும் எழுதப்பட்டவை.  நான் சிறப்பாக எழுதுவதுமில்லை.  நிறைய பேர் இதை அச்சில் சொல்லியிருக்கிறார்கள் -  நான் சரியாக எழுதுவதில்லை என்று.  நான் வருந்துகிறேன்...இயன்றவரை முயல்கிறேன்.  என் மொழி மிகவும் எளிமையாக மாறிவிட்டது, அதனால், அதைப் புரிந்துக் கொள்வது கடினம். 

உங்கள் மொழி மிகவும் கடினமானது, ஒளிபாய்ச்சாதது என்று விமர்சிக்கப்படுகிறதே. நீங்கள் கையாளும் சிக்கல் வாய்ந்த பொருளின் தன்மைக்கான பதிலுணர்வா அது?

இருக்கலாம். நான் கையாண்ட பொருளின் சிக்கல் தன்மை குறித்து அதீத மகிழ்ச்சி கொண்டது எனக்கே பிடிக்கவில்லை.  பாருங்கள், நான் அறிவுபூர்வமாகப் பாதுகாப்பாற்று உணரக்கூடியவள்.  இதை நம்புவது கடினமாக இருக்கலாம், அதனால் மக்கள் என்னைக் கவனத்துடன் பொருட்படுத்த வேண்டும் என்று கருதினேன், எழுதுவதற்கு அது ஊக்க காரணியாகிவிட முடியாதுதான். காலப்போக்கில் எனது மொழி எளிமையடைந்துள்ளது, ஆனால் அதன் செறிவு மறைந்துவிடவில்லை.  நிலுவையில் உள்ள என்னுடைய புத்தகம் இரண்டு எளிய வாக்கியங்களால் ஆனது: மூலதனம் மற்றும் உலகமயத் தரவுகள். மீதெமெல்லாம் சிதைவுகளைக் கட்டுப்படுத்துதல். இவ்விரண்டும் எளிய வாக்கியங்கள்தான், ஆனால் சுலபமானவை அல்ல. முதல் வாக்கியம் சற்று எளிதானது போல் தோன்றலாம், ஆனால் இரண்டாவது வாக்கியம் மிகவும் சிக்கலானது, எளிமையான மொழியில் எழுதினால் மக்கள் அதைப் புரிந்து கொண்டதாக கருதுகின்றனர், தொல்லை என்னவென்றால் நான் சிந்தித்ததிலிருந்து பாரதூரமாக வேறெதையோ புரிந்துகொள்கின்றனர்.  நான் மிகவும் எதிர்-உள்ளுணர்வு கொண்ட ஒரு நபர் அதுதான் தொல்லை என்ன செய்வது?

சிந்தனையாளர்களுக்கும் உண்மை உலகுக்குமிடையே உரையாடல்கள் அவசியம் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

சில சிந்தனையாளர்கள் அவற்றை கடந்து ஊடுபாவுகின்றனர் (percolate), சிலர் செய்வதில்லை. ஜான் மெக்.டொவெல் நம் காலங்களின் மாபெரும் தத்துவாசிரியர்களில் ஒருவர்: அவருக்குப் பெரிதாக ரசிகர்கள் யாரும் இல்லை. நம் காலத்தைய இந்தியாவின் சூழல் வேறு மாதிரி இருக்கும் என்று தோன்றுகிறது, ஆனால் அமெரிக்காவில், கொள்கை உருவாக்கிகள் என்று சொல்லப்படுவோர் மற்றும் சர்வதேசக் குடிமைச் சமூகத்திற்கும் மனித உரிமைகளுக்கும் ஆர்வலர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் (அச்சொல்லை எனக்குப் பயன்படுத்தலாம்) இடையேயான பரிமாற்றம் எதுவும் உண்மையாக இருப்பது போல் தோன்றவில்லை. அந்த கூட்டத்தின் முன்முடிவுகளை நோக்கி நாம் உரையாடவில்லையெனில் நாம் பறக்க இயலாது மேலும், அதனால் அந்தப் பக்கம் இருப்பவர்களுக்கு நம்மை கேள்விகள் கேட்பதற்கான கடமை இருக்கிறது என்று நிணைக்கிறேன்.  உண்மை உலகம் என்று சொல்லப்படும் ஒன்றோடு தொடர்புகொள்வதில் எனக்குப் பெரிய ஆர்வம் இல்லை.  பல்கலைக்கழகம் என்பது பொய்மையானதல்ல: உண்மையில், பல்கலைக்கழகங்கள் இப்போது பெருநிறுவனமயமாக்கப்ப்ட்டு வருகிறது, அவை நிச்சயம் உண்மை உலகின் ஒரு பகுதிதான்.  இத்தனை வருடங்கள் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பின்னரும் நான் கொஞ்சம் குற்றம் நாடுபவளாக இருக்கிறேன், என்ன சொல்வது..

ஒரு அரசியல் அமைப்பாக மார்க்சியம் இன்று மடிந்து வருகிறது என்று நிணைக்கிறீர்களா?

மறுபடியும் அந்நிலை வந்துவிடும் என்று நிணைக்கிறேன் ஏனென்றால் தற்போதைய நிலை கோட்பாட்டிற்கு கொஞ்சம் கூட  பொருந்துவதாக இல்லை. ஒருவர் எதிர்காலத்தை நோக்கி சொல்லலாம், அது தீர்மானிக்க முடியாததென்று. ஆயினும்கூட, மூலதனம் சமூக நீதிகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டிய ஒன்று எனும் எண்ணம் மாறப்போவதில்லை.  பாராளுமன்ற ஜனநாயகத்திற்குள்ளும் க்ராம்சியத் தன்மை கொண்ட கட்சிகள் இருந்திருக்கின்றன என நிணைக்கிறேன்.  ஜனநாயக கம்யூனிசம் மீண்டும் வந்துவிடும் என்று நிணைக்கிறேன். ருசியா உடைந்த இச்சூழலில், எதையும் சொல்வது  அவசர காரியமாகிவிடும். ஆனால் மற்றொருபுறம் தயாரிப்புத் தரகர்களுக்கு தாங்கள் உற்பத்தியில் ஈடுபடும்போது எவ்வளவு தேவை இருக்கிறது, எவ்வளவு உற்பத்தி செய்ய முடியும் எனும் வேறுபாட்டிலிருந்து வெளிப்படும் மூலதனம் பற்றிய அறிதல் இருக்குமானால் அதை அவர்கள் கட்டுப்படுத்த முடியுமானால் அம்மூலதனத்தை வைத்து ஒரு நியாயமான உலகை நல்லாட்சியை உருவாக்க முடியும் எனும் எண்ணத்தின் அடிப்படையில் உதையமான பொதுவுடைமைச் சிந்தனை என்பது நடைமுறைக்கொவ்வாத ஒன்று என வைத்துக்கொள்வோம். ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை, நியாயமான உலகைக் கட்டுவதற்கான சுதந்திரம் என்பதெல்லாம் சாத்தியமில்லை என்பது கல்வி கற்றுக்கொடுப்பவர்களுக்குத் தெரியும். 

ஒடுக்குமுறைகளிலிருந்து உரிமைகளைக் கோருவது மட்டுமே இருக்க கூடிய ஒன்று, அதுவும் ஒருவகையில் சுயவிருப்பமே.  பொதுவுடைமைச் சிந்தனைகளில் ஒரு கல்விசார் பெரும் ஓட்டை  ஒன்றிருந்தது, அதனால் அறிவியல் மற்றும் அது போன்ற கல்விகள் ஊக்குவிக்கப்பட்டது, பின்னர் நாம் அறிந்ததுபோல் அது கட்சி அரசியல் விளையாட்டின் ஒரு பகுதியாய் இல்லாதவரை அரசு முதலாளித்துவ வடிவமெடுத்தது, ஆயினும் கூட, பாராளுமன்ற அமைப்புக்குள்ளாகவும் செயல்கள் நடக்கத்தான் செய்கின்றன, ரவுடி அரசியல்’  எப்பொழுதும் இருந்திருக்கிறது. நான் ஒரு கருத்தியல் கோட்பாட்டாளர் அல்ல, ஆனால் அந்த கிராமங்களுக்குச் சென்றுள்ளதால், கட்சிகள் அங்கு என்ன செய்துள்ளன எனும் உண்மைக் கதைகளைக் கேட்டுள்ளேன். அவை எதுவும் உடனே மறக்கக்கூடிய ஒன்றல்ல.  நான் கட்சி ஆள் இல்லை, அதனால் இந்த உரையாடல்களுக்குள் ஊடுருவப் பல காலங்கள் பிடித்தது. ஆனால் எல்லாம் சரியாகி, சுழன்று வரும் என்று தோன்றுகிறது, ஆனால் மாறிவருவதாகக் கூறப்படும் எல்லோருடைய விருப்பங்களும் அதுதானா என்று கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆட்சி முறை உருவாக்கத்தை மாற்றியமைப்பதோடு எல்லாம் முடிந்துவிடாது.  சொல்லப்போனால் அதுவே, துவக்கம், அதனால் அது வேறுபட்டுத் தெரியவேண்டும். உலகமயமாக்கலானது தொழிற்சாலைகளின் தரைத்தளத்தைத் தூளாக்கிவிட்டது என்பது உன்மைதான், அதனால் நாம் தொழிற்சாலைப் பாட்டாளி வர்க்கத்தைக் கொண்டு பொதுவுடைமையை வடிவமைப்பதிலிருந்து சற்று மாறுபட வேண்டும்.  

இறுதியாக, ஆனால் முக்கியத்துவத்திற்கு குறைவில்லாமல் அது பாலினமையப்படுத்தப்பட (gendered) வேண்டும். ஒரு பெண் எழுதிய அற்புதமான புத்தகம் ஒன்று உள்ளது அவரது பெயர் டாய் ஜினுவா என்று நிணைக்கிறேன், பெர்க்கிங் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். மாவோவின் ஆட்சிக்குக் கீழ் பெண்கள் நிலையில் எத்தகைய அற்புதமான மாற்றங்கள் நிகழ்ந்தன என்பது பற்றிய புத்தகத்தை அவர் எழுதியுள்ளார்.  அது மறுப்புக்கப்பாற்பட்ட ஒன்று. சீனப் பெண்கள் முன்பிருந்த நிலையை அது முற்றாக மாற்றியமைத்தது, ஆணும், பெண்ணும் ஒன்றென்றானார்கள், ஆனால் உட்புகுத்தப்பட்ட பாலினத்தன்மையை (gendering) பகுத்தறிவு சமத்துவவாத சிந்தனை நடைமுறையில் பெரிதாக எதையும் மாற்றிவிடவில்லை.  உதாரணமாக ஒழுங்குபடுத்தப்பட்ட கூலியானது பெண்ணை எல்லா இடத்திலும் எதிரியாக்கிவிட்டது . பெண்கள் சாதாரண குடிமகர்கள் அவ்வளவுதானே? மேல் வர்கத்தில் நிலவும் சுதந்திரக் காதல் அதுவும் நகைப்புக்குறியதுதான்.  ஒரு எல்லை வரை, அது சிக்கலான வழிமுறைகளில் பால்மையப்படுத்தப்பட வேண்டும். இது எவ்வாறு நடக்க வேண்டும், அதற்கு யாரும் விடை கூற முடியாது, ஆனால் அது வெறும் மாற்றம் என்பது பற்றி மட்டும் அல்ல.

இறுதியான ஒன்று, காந்தி முன்னுணர்வுடன் இருந்த இடம், மார்க்ஸ் உண்மையில் கையாண்ட வழிமுறை முந்தைய ஆட்சி அதிகார முறையை வலுக்கட்டாயமாக வீழ்த்துவது - அநேகமாய் அது சரியாகச் செயல்படுத்தப்படவில்லை, அதுவே புரட்சி என்று சொல்லப்படுவதற்கான மாதிரியாக இருக்கவேண்டும் என்பதில்லை. அதனால் தான் அவர் எழுத்தில்  பிரித்தானியத்தை பற்றி மட்டும் சொல்வதாகச் சொன்னார், ஏனென்றால், அப்போது பிரித்தானியம், முதலாளித்துவ முன்ணேற்றத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பிடித்திருந்தது அதேபோல் ஜெர்மனியால் அப்போது எதுவும் உருவாக்க இயலாது என்றார். பொது வேலை நிறுத்தம் என்பது யுக்தியாக எழும் முன்னர், மாற்றத்திற்கு அது மாதிரியாக இருந்தது, ஏனென்றால் அப்போது தொழிற்சாலை பாட்டாளி வர்க்கம் இருந்தது.  நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன் அது மையமாக இருக்க முடியாதென்று, ஆனால் இருக்கிறதென்று இப்போது ரோசா லக்சம்பர்க்கை நிணைத்துக்கொள்கிறேன் அறிவுஜீவிகள் வெறும் தந்திரோபாய கற்பனாவத கோட்பாடுகளை மட்டும் கொடுக்கும் நிலை, உத்திகளை மட்டும் கொடுப்பது ஏனென்றால் முகவர்கள் இருக்கவேண்டும்..... 

பொது வேலை நிறுத்தத்தில், தொழிற்சாலைகளில் அறிவுஜீவிகள் நியமிக்கப்படுவதில்லை.  ஒரு பொது வேலை நிறுத்தத்தில் வன்முறை நிகழ்ந்தால் அது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவியலாத ஒரு இரண்டாம் நிலை மன நிகழ்வு (Epiphenomenol), அது வரையறையின் ஒரு பகுதியல்ல.  மார்க்சியத்தில் உள்ள இந்த சிந்தனை உண்மையில் காந்தியின் ஒத்துழையாமை போன்றவை ஒத்துப் போகின்றன – இதை அவருடைய ஹிந்த் ஸ்வராஜிலும் காணலாம் – அதாவது அது (புரட்சி) வன்முறையோடு தொடர்புடையதாக இருக்கும் அவசியமில்லை.  மார்க்சியம் ஒரு அகிம்சைக் கோட்பாடு என்று நான் கூறவில்லை. ஆனால் உற்பத்தி முகவர்களில் இந்த மாற்றம் முக்கியமானதல்ல. க்ராம்சி கண்டது போல், நானும் சொல்கிறேன், மார்க்சியத் திட்டம் என்பது வெறும் நெறிமுறையோ அல்லது உளநுல் சார்ந்ததோ மட்டுமல்ல, ஆனால் அறிவு சார் பண்பு.  விருப்பங்களை மீள்-ஒழுங்கமைப்பு செய்யவேண்டும் எனும் சிந்தனை, தனிநபர் சார்ந்தன்று ஆனால் கூட்டுத்தன்மை வாய்ந்தது, ஏனென்றால் இங்கும் மார்க்சிய அடிப்படைவாதிகள் உள்ளனர், அவர்கள் கல்வி சார்ந்த எந்த சிந்தனையையும் தனிநபர் வாதம் என்று நிராகரிப்பர். இது மாபெரும் வெட்கக்கேடு. அவர்கள் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும், ஒருமை என்பது எப்போதும் உலகமுழுதளாவிய ஒன்றாகவே இருக்கும். கூட்டுத்தன்மை அல்லது தனித்தன்மை என்பது இவ்வாதம் போன்றதன்று.  இந்த மாற்றங்கள் என்பது, ஒடுக்கப்படுவது அல்லது சுரண்டப்படுவதிலிருந்து தோன்றும் விடுதலை உணர்வு ஒரு நியாயமான சமூகத்தை நிறுவ நேரடியான தூண்டுகோலாய் அமையும் எனும் அனுமானத்தின் மீது ஓர் உண்மைக்கான சோதனையை நிகழ்த்துகிறது. அல்லது மார்க்சியம் என்பது சுய-விருப்பம் சார்ந்தது.... உங்களுக்குத் தெரியும்... அது மனித உரிமை பற்றியது மக்களே, உலகளாவிய உரிமை மக்களே, வேலை வாய்ப்பை உருவாக்குவது மக்களே.... இவை எல்லாமே மாற வேண்டும். மேலும் அது பாலினமையப்படுத்தப்பட வேண்டும்.  

இனிமேலும் அது தொழிற்சாலை பாட்டாளிவர்க்கம் சார்ந்ததாக மட்டும் நீடிக்க இயலாது, ஏனென்றால் உற்பத்தி முறையானது தற்போதைய சூழ்நிலை இணைவுக்கு நகர்ந்துவிட்டது.  இறுதியான செய்தி என்னவென்றால் உற்பத்தி முறையானது அழியவில்லை. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் தற்காலத்தைய நெருக்கடியில் நடந்தது என்னவென்றால் கடன்கள் மீதான காப்பீடு தோல்வியடைந்தது சரியா? ஒன்றின் பின் ஒன்றாகத் தோற்றது. ஏனென்றால் கடன்கள் மீதான காப்பீடென்பது அது ஏதோ உண்மையில் இருக்கும் ஒன்று போல் முழுக்கமுழுக்கக் கற்பனாவத அடிப்படையில் எழுப்பப்பட்டது. அது வீழ்ந்தது, மீண்டும் வீழ்ந்தது முடிவாக அதன் இறுதியில் வீழ்ந்தவர், உழைக்கும் வர்க்கத்தின் பழைய மாதிரிகளே. அதுதான் நகைப்புக்குறியது.  இந்த சேவைப் பொருளாதாரம், தொழிற்சாலை மாதிரி, அது, இது எதுவும் இன்னும் மறையவில்லை. இது பற்றி நான் பெரிதாகப் பேசுகிறேன் ஏனென்றால் மீண்டும் அவற்றை நிணைத்துப் பார்க்கிறேன், நான் அரசியல் கோட்பாட்டாளர் அல்ல அதனால் அதை முழுமையாக அறிந்த அறிஞர்களை விட முழுக்க முழுக்க ஒரு குடிமகளாகப் பேசுகிறேன்.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் அரசுகள் தவறான முறையில் நடந்துவிட்டனவா, உதாரணமாக வெளியேறும் நிலையில் இருக்கும் மேற்கு வங்க அரசு. (தற்போது முந்தைய அரசு)

ஊகங்களில் நான் சிறந்தவள் அல்ல, ஆனால் மற்றவர்களைப் போல் நானும் அவற்றை நிணைக்கிறேன். அதில் ஆர்வம் உள்ளவளாக நான் சொல்வது இந்நிலைகளை வைத்துப் பெருநகர வட்டாரங்களின் நன்னடத்தைக்கு வெளியே வைத்துப் பார்ப்போமானால், இது போன்ற ரவுடி அரசியல் கம்யூனிஸ்ட் கட்சிகளில் மட்டும் நிகழ்வதல்ல.  இது போன்ற நிகழ்வுகளுக்கான காரணம் மத்திய ஆசியாவில் நிலவும் இன அரசியல்,  நம் நாட்டில் ரவுடி அரசியல் என்பது லெனின் அழைத்த முன்னேறும் பூர்ஷுவக்கள் என்பதற்கு வெளியிலானது... காத்தரின் காலின்ஸ் எனும் பெண்மணி எழுதிய ஒரு புத்தகம் உள்ளது, அது மத்திய ஆசியாவைப் பற்றி, இந்தியாவைப் பற்றி அல்ல, ஆனால் அது ஒரு சிறந்த திறவுகோல். தொழில்மயமாதலை ஒரு மென் முதலாளித்துவ வழிமுறையாகச் சிந்திக்கவியலாத நிலை வந்தபோது தோன்றிய ரவுடி அரசியிலைப் பற்றி அது முழுமையாகப் பேசுகிறது. ஒரு வகையில், அது அவர்களின் பலவீனங்களிலிருந்து தோன்றிய ஒரு பலம். அவர்களால் அதை விட சிறந்த மென் முதலாளித்துவத்தைச் செய்ய முடியவில்லை, அவர்கள் தவறு செய்தனர். ரவுடி அரசியல் இதற்கெல்லாம் முந்தையது, அது எல்லாக் கட்சிகளாலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.  அங்கு மார்க்சியத்தைக் குறைசொல்வதற்கு முன் உண்மையைத் தெளிவு செய்துக்கொள்ள வேண்டும், ஆனால் நடந்தது என்னெவென்றால், சர்வதேசக் குடிமைச் சமூகத்தின் நிலப்பிரபுத்துவ அடுக்கு என்றுதான் சொல்வேன் மக்களே. பெரும்பாலும், பெண்கள் செய்தது கட்சியை அழிக்கப் பயன்படுத்திக்கொள்ளப் பட்டது, அது தவறு.  

சிங்கூரிலும், நந்திக்ராமிலும் நடந்தவற்றை நான் ஆதரிக்கவில்லை, எவர் தான் ஆதரிப்பர்? நான் சொல்வதுபோல் ரவுடி அரசியல் இப்போது எல்லா அரங்கிலும் உள்ளது. அதன் மீது அப் பெண்கள் – நான் அழைப்பது போல் விளிம்பு நிலை மக்களை காக்க நிணைக்கும் இரக்கமுள்ள நிலப்பிரபுத்துவ அடக்குமுறை முதலியன – உள்ளே நுழைந்து கட்சியை அழித்தது....  இந்நிலையில் சோவியத் ருசியாவின் தூசிகள் கம்யூனிசத்தை விசமாக்கியது போல், (it seems to me that given that communism had bitten the dust in Soviet Russia) சீனாவில் வேறுவழியில்லாமல் ஒரு விசித்திர முதலாளித்துவ கம்யூனிசம் உருவானது.  உண்மையில் அது நன்றாக நிகழ்ந்தது என்றும் கருதுவதற்கில்லை.  மறுமுனையில் – எனக்கென்ன தெரியும் என்று சொல்லப்படுவதையும் கேட்டிருக்கிறேன். உங்களுக்குத் தெரியுமா – இன்னும் சில காலத்தில் அது திரும்ப வரும், அவர்களுக்குப் பாடம் கற்பித்தாக வேண்டும்...முதலியன...அது போன்ற அரசியல் கணிப்புகள் எனக்குத் தெரியாது ஆனால் இது என் உணர்வு.  நடந்தவற்றால் நான் மிகுந்த துயருற்றிருக்கிறேன், கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்க முடியாது. கிராமங்களில் நடந்த கொலைகளுக்காக அவர்களை தரையிறக்கம் செய்து அது தவறென்றே சொல்வேன் ஏனென்றால் அது கட்சி சார்ந்தது, அதற்கும் கருத்தியலுக்கும் தொடர்பில்லை. 

வட்டார ஜமீந்தாரகளோடு இந்த பின்தங்கிய பள்ளியில் இருந்தது மட்டுமல்ல அங்கே என்ன நடக்கிறது என்பதை என் சொந்த அனுபவத்தில் கண்டுள்ளேன். அதனால் தான் சொல்கிறேன், மிகவும் சிக்கலான ஒன்றை விளக்குவதற்காக விளிம்பு நிலை மாவோயிஸம் எனும் சிந்தனை – மார்க்சியச் சொல்லாடலில் ஒரு பகுத்தறிவுத் தேர்வு, ஆனால் அது அவ்வாறில்லை. அது மிகவும் பொறுப்பு நிறைந்த ஒன்று, துரதிஷ்டவசமாக, இம்மக்கள் வெறும் பீரங்கித் தீவனமாகப் பயன்படுத்தப்பட்டு, பின் அது பழக்கத்துக்குரியதாக மாறி அவர்கள் உடனடியாக ஆயுதப் போராட்டத்திற்குத் தயாராவது துயர்மிகுந்தது..... நான் இப்படிச் சொல்கிறேன்... உடலியல் எதிர்ப்பு, என்பது மக்களைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளுதல். ஆனால் முன்னேறும் பூர்ஷுவாக்களிடையே தற்போது காணப்படும் இந்த வன்மையான கோர முகம் மிகுந்த வருத்தமளிக்கும் ஒன்றாக இருக்கிறது. இம்மக்களைப் பற்றி சில கண்டுபிடிப்பாளர்கள் எழுதுவது என்னவோ வித்தியாசமான அற்புத பழங்குடிகள் போல் விவரிக்கிறது. இது ஆர்வமூட்டுவதாய் இல்லை, இது மேம்போக்கான விவரிப்பு. ஒரு வகையான படிப்பறிவற்ற பொதுத்தன்மை என்று உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

நீங்கள் உங்களைப் பெண்ணியவாதியாகப் பார்க்கிறீர்களா? அப்பதம் உங்களுக்கு என்ன தெரிவிக்கிறது – கருத்தியல் ரீதியாக, வாழ்ந்த அனுபவங்களின் வாயிலாக?

இந்த உலகில் பாலினத்தன்மைபடுத்துதல் என்பது ஒரு மிகப்பெரிய நிறுவனமாகும்.  ஆயிரம், பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் மக்கள் உலகம் என்ற ஒன்றைச் சிந்திக்கும் முன்னரே அது உலகமயமாக்கப்பட்டு விட்டது.  பாலியல் வேறுபாடு என்பது பாலின வேறுபாடன்று, அது அனுபவம் சார்ந்தது. அது எல்லோராலும் உணரப்படும் ஒன்று, எந்த ஒரு அறிவியல் அமைப்புக்கும் தன்னைக் கட்டுமானம் செய்துகொள்வதைச் சுற்றி ஒரு வேறுபாடு தேவை. பாலினத்தன்மைப் படுத்தப்பட்டதே நமது முதல், விடாப்பிடியான பிரித்தெடுத்தலாக்கக் கருவி (instrument of abstraction). அதுவே மிகப் பழமையான கருத்தியல் கருவி.  முதலாளிகளும், தொழிலாளர்களும், காலனியப்படுத்துபவரும், காலனியப்படுத்தப்பட்டவரும் அதற்குள்தான் இருக்கின்றனர். அந்த வகையான வேறுபாடு மறைந்துவிடும். எவ்வகையான கல்வியும் பாலினத்தன்மைபடுத்தப்படாவிட்டால் அது தவறானது.  பெண்களும், மாற்றுப் பாலியல் தேர்வுகொண்டோரும் (queer people) மட்டுமே இதைப் பேச வேண்டும் என்று நிணைக்கும் மக்கள் இருக்கிறனர். என்னைப் பொறுத்தவரை அது தவறு.  

என் மாணவர்களிடம் சொல்வேன்: ஒன்றை நிணைவில் கொள்ளுங்கள், நீங்கள் ஆய்வுசெய்யும் எதுவும் ஒன்றைக் கணக்கில் கொள்ளாமல் போனால் தவறாகிவிடும்: அது பாலினத்தன்மைபடுத்துதல். அதுதான் பெண்ணியமா, எனக்குத் தெரியாது. அது சிந்தனைக்கான  பொருள் சரியா? மறுபுறம், இந்த பாலின பேதத்தைக் களைவதற்கான சட்டங்களை உருவாக்க உழைப்பது வேறு வகையான ஒரு பணி.  அது மிகவும் முக்கியமான் விசயம், வெறும் ஒற்றைமையச் சிக்கல் நிறைந்த  பொருளாகிவிடக் கூடாது.  பெண்கள் ஓட்டுரிமை போன்ற விசயங்களில் எனக்கு ஆர்வமில்லை.  அந்த உரிமை மட்டுமே பிரச்சனைகளுக்கு ஒரு முடிவாக எடுத்துக்கொள்ள முடியாது, ஏனென்றால் சட்டம் தோற்றுவிக்கப்படுவதால் மட்டுமே எல்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டுவிடும் என்றில்லை. எண்ணற்ற பொது நல வழக்குகளில் நான் சம்பந்தப்பட்டுள்ளேன்.  இவ்விசயங்களில் ஒரு துல்லியப் பார்வையோடு சம்பந்தப்படுகிறேன். இப்போது எனக்கு வயதாகிவிட்டது, அதனால் இதைச் சொல்லலாம்: இதையே நாம் போராட்டத்திற்கான இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.  நற்சட்டத்திற்கான வரைவு என்பது, பல வகைகளில் இது போராட்டத்திற்கான துவக்கம் மட்டுமே –  ஏனென்றால் விளிம்புநிலை பற்றிய பொருள்விளக்கம் என்னவென்றால் இது போன்ற அமைப்புகளை அனுகமுடியாதவர்கள் என்று பொருள். என் எழுத்துக்களில் உதாரணம் காட்டியுள்ளேன். 

தவறானவற்றை எழுதுதல் (righting wrong things) எனும் ஒரு துணுக்கை எழுதி ஆம்னெஸ்டி இண்டர்நேஷனலிடம் கொடுத்துள்ளேன், அது இப்போது பதிப்பிக்கப்பட்டுள்ளது, அதில் ஏன் இவ்வாறு நடக்கிறது என்று உதாரணங்கள் கொடுத்துள்ளேன்.  நிறையப் பெண்ணியவாதிகள் என்னோடு இதில் உடன்படுகிறார். என்னைப் போல் அல்லாத காத்தரீன் மெக்கின்னான் உட்பட.  இது பெண்ணியம் என்ற முத்திரைக்குள் பொருந்தி வருகிறதா என எனக்குத் தெரியவில்லை, நீங்கள் சொன்னது போல், மார்க்சியர்கள்... எனும் முத்திரைக்குள்ளும் பொருந்திவருகிறதா என எனக்குத் தெரியவில்லை.  மார்க்சிய தொழில் (Marxist Business) பற்றி மேலும் சொல்கிறேன்.  என்னுடைய பேச்சுக்கு நிறைய பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், நான் ஃப்ராண்டியர் இதழோடு தொடர்புடையவள் என்றும், சில நேரம் பின்னணியில் உள்ளேன் எனவும்அது பற்றி எதிர்ப்புச் சொல்ல எவருக்கும் உரிமை இல்லை.  ஃப்ராண்டியர் இதழை நிறுவிய  சமர் சென்னோடு நான் மிக நெருக்கமாக இருந்தேன். ஒரு வகையில் அவர் எங்கள் பெரிய குடும்பத்தின் ஒரு பகுதியாக இருந்தார், அவர் மறைவுக்குப் பின் நான் டிமிர் பாசுவுடன் நெருக்கமாக இருந்தேன்.  எப்போதும் பாராளுமன்ற கம்யூனிசம் பற்றிய இடதுக்கும் இடது சாரி விமர்சனம் செய்யும் வகையிலேயே அவ்விடம் எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது, அது மிக முக்கியமான, அவசியமான பதவியெனக் கருதுகிறேன்.  க்ராம்சி சிறைச்சாலையில் அத்தகைய ஒரு பதவியில் தான் இருந்தார் என நினைக்கிறேன்.  என்னைப் போன்றோர் சொல்வதையெல்லாம் அறிவிலிகளின் ஊகம் என்று சொல்லி சிலர் அதை நிராகரிப்பது சரியல்ல என்பதற்காக இதைச் சொல்கிறேன். 

உங்கள் தற்போதைய விருப்பமாக உலகமயமாக்கலைப் பட்டியலிட்டிருக்கிறது கொலம்பியா பல்கலைக்கழகம்............

யார் தான் உலகமயமாக்கல்மீது ஆர்வம் கொள்ளாமல் இருக்க முடியும்? பல்கலைக்கழகங்களும் முழுமையாக உலகமயமாகிவிட்டது. நீங்கள் அதைப் பெருநிறுவனமயம் என்பீர்கள், அதுவும் உலகமயமாக்கலின் ஒரு பகுதிதான்.  இது வீட்டிற்கும் பொருந்தும்.  நான் பரோடாப் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்தவிருக்கிறேன், அவர்கள் அதை நடத்தும் விதத்தைப் பார்த்தால் அது ஒரு இந்தியப் பல்கலைக்கழகம் என்று இனியும் சொல்ல முடியாது. நம் பல்கலைக்கழகங்கள்  உயரடுக்குப் பல்கலைக்கழகங்கள்  அவையும் அவ்வட்டத்தில்தான் உள்ளன.  ஆம் நான் உலகமயமாக்கலில் ஆர்வம் கொண்டுள்ளேன், நான் பொருளியல் வல்லுனர் அல்ல. நான் நிணைப்பது என்னவென்றால் உண்மையில் உலகமயமாவது மூலதனமும், தரவுகளும் தான் மற்றவையெல்லாம் சமமற்ற விளைவுகள்..... என்னுணர்வு என்னவென்றால் மானுடவியல் உலகமயமாகக் கூடாது, ஆகவும் முடியாது. நாம் சீர்மைப் படுத்துதல் எனும் பொருளில் சிலவற்றை உலகமயத்தில் பிற்சேர்க்கை செய்யவேண்டும்.  நாம் உலக மொழிகளை அப்படியே தள்ளுபடி செய்துவிடப் போகிறோமா? உலகளாவிய நிலைக்கு வருதல் என்றால் இரண்டு அல்லது மூன்று பெரிய மொழிகள் இருக்க வேண்டும்.  ஆமாம் உலகமயமாக்கலில் நான் விருப்பம் கொண்டுள்ளேன், நான் மானுடவியலை உலகமயப்படுதலிலிருந்து மீளமைத்து (unmake) முன்பிருந்த நிலைக்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.

நீங்கள் பல துறைகளில், பிரதேசங்களில் கால் பதித்துள்ளீர்கள்.  உங்கள் எண்ணங்களை முழுமையான வடிவத்தில் தொகுத்துச் சொல்ல விரும்புகிறீகளா, அநேகமாக ஒரு புத்தக வடிவத்தில்?

ஹார்வார்டுக்காக இப்போது நான் எழுதும் புத்தகத்திலிருந்து சொல்லலாம். அது முடிந்து விட்டது, குறிப்புகளை எழுதிவருகிறேன்.  பல்வேறு விசயங்களின் மசிப்பு-கலவை எனது எழுத்து என்று நிணைக்கிறேன்.  ஒரு அமெரிக்கச் சொலவடை மூலம் என்னை விளக்குகிறேன்: ஒரு மைல் அகலம் மற்றும் ஒரு அங்குலம் தடிமன்.  நான் எதிலும் வல்லுனர் இல்லை.  எல்லாவற்றிலும் நான் பொதுவாதச் சிந்தனையுள்ளவள்.  எனக்குச் சில மொழிகள் தெரியும், நான் கவனமாகப் படிக்கிறேன்.  எனக்கு என்ன வருகிறதோ அதை எழுதுகிறேன்.  ஈர்க்கப்பப்ட்டுள்ளேன் அதனால் எழுதுகிறேன்.  என்னால் எழுதாமல் இருக்க முடியாது.  நான் வெறும் வகுப்பாசிரியர் என்ற தன்மையிலிருந்து நிச்சயம் மேலானவள்.  பொதுவுடைமை அறத்தின் சாத்தியப்பாடுகள் குறித்து எழுத வேண்டும் என்று 1978 முதல் நினைத்துவருகிறேன், ஆனால் உலகம் மாறி வருகிறது.  அதனால் அக்கேள்விக்கான பதில் மாறி வருகிறது, விடை கண்டு பிடிப்பதற்குள் மறைந்துவிடுவேன் என்று தோன்றுகிறது.  என்னுடைய அடுத்த புத்தகம் நான் ஹார்வார்டில் 2009 இல் கொடுத்த – ‘து புவா உரைகள் (து புவா – வில்லியம் எட்வார்ட் புர்கார்ட் து புவா ஒரு அமெரிக்கச் சமூகவியலாளர், வரலாற்றறிஞர், குடி உரிமை ஆர்வலர், ஒன்றிணைந்த ஆப்ரிக்காவை வலியுறுத்தும் ஆப்ரிக்கவாதி, ஆசிரியர் மற்றும்  எழுத்தாளர்.  ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் வாங்கிய முதல் ஆப்ரிக்க-அமெரிக்கர் – மொ.ர்).  

20 ஆம் நூற்றாண்டின் சிறந்த வரலாற்றுப்பொதுவுடைமை வாதி து புவா என்று நினைக்கிறேன்.  மக்கள் அவர்மீது போதிய கவனம் செலுத்தவில்லை, ஏனென்றால் சோல்ஸ் ஆஃப் ப்ளாக் ஃபோக் (கருப்பின மக்களின் ஆன்மா – மொ.ர்) எனும் அவருடைய முதல் புத்தகத்தை வைத்து, அவர் ஒரு ஆப்ரிக்க அமெரிக்கராக மட்டும் காணப்படுகிறார்.  நான் தூ புவாவைப் பற்றி உரையாற்றுவதோடு, பொது வேலைநிறுத்தம் பற்றியும் உரையாற்றுகிறேன். அதுதான் என் அடுத்த புத்தகம். அதன் பிறகு தெரிதா பற்றி எழுதும் ஒப்பந்தம், அச்சிறந்த படைப்பு (Oeuvre) பற்றிய எனது புரிதலை எழுதும் வாய்ப்பு. அதன் பிறகு, யாருக்குத் தெரியும்? நான் இறந்திருப்பேன்.

உங்கள் நிணைவுகள் இப்போது எங்குள்ளது?

நான் எனது தவறுகளிலிருந்து கற்றுக்கொள்கிறேன். கல்வி எனும் சிந்தனை, மேல், கீழ் இரு தரப்பிலும் விருப்பங்களின்  இறுக்கமற்ற அணிவகுப்பு. அதுவே என் நுகர் விருப்பம்.  நிறைய வந்து செல்கிறது ஏனென்றால் நான் கற்றுக்கொடுப்பவள் இல்லையா, அதுவே என் பெரும் நுகர் விருப்பம்.  தூ புவா, தெரிதா எல்லோரும் அதில் வருகின்றனர்.  ஒரு முறை ப்ரிமோ லெவி நிறுவனத்தில் ப்ரிமோ லெவி (அவர் ஒரு இத்தாலிய யூதர் - வேதியல் நிபுணர், எழுத்தாளர் – மொ.ர்) பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன், பாருங்கள், அவர் அப்போது ஆஷ்விட்ஜில் இருந்தார். கைது முகாம்களில் ( concentration camps - நாஜிக்களின் கீழ்த்தரமான கைது  முகாம்கள்  மொ.ர்) உங்கள் அனுபவம் எத்தகையது? என்று இளைஞர்கள் கேட்கையில் அவர் எழுதுகிறார் : தனிச்சிறப்புடைய பூதங்களைத் தவிர, அவர்களும் நம்மைப் போல் சராசரி மனிதர்களே, ஆனால் தவறாக வளர்க்கப்பட்டவர்கள்.”  “வளர்க்கப்பட்டவர்கள்” (reared) எனும் அந்த வார்த்தையைக் கவனியுங்கள்.  குழந்தைகள் தொடங்கி, நிறுவனமைய மானுடவியல் பாணி மற்றும் பண்பார்ந்த சமூக அறிவியல் பாணி கல்வியால் வளர்க்கப்படுவது என்று பொருள்.  அதுவே அறிவு எனும் சிந்தனையின் அடிப்படை, அறிவு பற்றிய அறிவு. “வளர்க்கப்பட்டவர்கள்” எனும் அந்த சொல்லை எடுத்துக்கொள்வோம். அது எனது நுகர் விருப்பம், நான் சொன்னது போல், அந்த வாய்ப்பாடு இறுக்கமற்ற வளர்ப்பு’ – அதைச் செய்வது மிகவும் கடினம்.  அதிசக்தியிருக்கும் உயரடுக்கின் கூப்பாடு உலகைக் காப்பாற்றுங்கள், என்பது மிகவும் கர்வம் நிறைந்தது. கீழடுக்கில் அழுகிய கல்வி....உங்களுக்குத் தெரியுமா, என்.ஜி.ஓக்களின் ராடாருக்கு மிகக் கீழ் இருக்கும் நிலையையும் தாண்டி நான் பணிபுரிந்திருக்கிறேன்.  என்.ஜி.ஓ மக்கள் வருவர் போவர். விளைவு இருக்கிறதோ இல்லையோ, வழக்கமான வளர்ப்பிலிருந்து விலகி அவர்கள் நடத்தும் பத்ராலோக் வகைப் பள்ளிகளுக்கு அக்குழந்தைகளை அழைத்துச் செல்வர். நான் சொல்வது அதுவல்ல. அது மிகவும் சிக்கலான ஒன்று.  எனக்கு ஏதாவது அறிவுசார் கொள்கை எங்காவது இருக்கிறதென்றால், அது இதுவே – அதை நிறைவேற்ற முடியுமா?

சுயசரிதை குறிப்பு

காயத்ரி சக்ரபொர்த்தி ஸ்பிவக், கொலம்பிய பல்கலைக்கழகத்தில் உள்ள அவலான் ஃபவுண்டேஷன் மானுடவியல் பிரிவின் பேராசிரியர். (1959) கொல்கத்தாப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்; (1962) முதுகலைப் பட்டம் மற்றும் கொர்னல் பல்கலைக்கழகத்தில் (1967) முனைவர் பட்டம் பெற்றார். ப்ரவுன், ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ், யுசி சாண்டா க்ரூஸ், பால் வெலெரி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஸ்டான்ஃபார்ட் பல்கலைக்கழகம், ப்ரிட்டிஷ் கொலம்பியப் பல்கலைக்கழகம், ஃப்ராங்ஃபர்ட்டில் உள்ள கொத்தே பல்கலைக்கழகம், ரியாத் பல்கலைக்கழகம் மற்றும் எமொரி ஆகிய இடங்களில் பயிற்றுவித்திருக்கிறார்.

1991 இல் கொலம்பியா வருவதற்கு முன்னர், பிட்ஸ்பர்கில் ஆண்ட்ரூ w. மெல்லான் ஆங்கிலத் துறையின் பேராசிரியராக இருந்தார்.  வெஸ்லின் மானுடவியல் மையம், ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் ஆய்வு மையம், சமூக அறிவியல் மையம் (கொல்கத்தா), வரலாற்றுப் படிப்பிற்கான டேவிஸ் மையம் (ப்ரின்ஸ்டன்), ராக்ஃபெல்லெர் நிறுவனம் (பெல்லாகியோ). ஆகியவற்றில் கூட்டுறவாளராக (fellow) இருந்தவர். கெண்ட் மற்றும் குகன்ஹைமில் புத்தாய்வாளராக இருந்திருக்கிறார். பரோடாவில் உள்ள மகாராஜா சாயாஜி ராவ் பல்கலைக்கழகம் அளித்த தாகூர் புத்தாய்வாளர் முக்கியமான ஆசிரியக் கூட்டுறவாளர் பதவியாகும்.  விளிம்பு நிலை ஆய்வுகள் (subaltern studies collective) கூட்டாண்மையில் உறுப்பினராக இருந்தவர்.

அவரது உரைகளில் முக்கியமானதாக கேப் டவுனில் 1992ல் ஆற்றிய டேவி நினைவு உரையைக் குறிப்பிட்டு சொல்லலாம். நிறைய பத்திரிகைகளில் அவர் ஆசிரியக் குழுமத்தில் இருக்கிறார். கல்ச்சுரல் கிரிட்டிக், பவுண்டரி, நியு ஃபார்மேஷன், டையஸ்போரா, ஏரியல், ரீ திங்கிங் மார்க்சியம், பப்ளிக் கல்ச்ச, பாரலாக்ஸ், இண்டெர்வென்ஷன்ஸ் ஆகியவை அவற்றுள் அடக்கம். பேராசிரியர் ஸ்பைவாக், இந்திய மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் தொன்முதுவரிடையே (Aborginals) அடித்தள நிலையிலிருந்து க்ராமியக் கல்வி ஆசிரியராக செய்லூக்கத்தோடு பணிபுரிபவர்.  அவரது முக்கியமான வெளியீடுகள் ஆஃப் க்ராமட்டாலஜி (லிபிகளை அடிப்படையாகக் கொண்ட மொழியியல் ஆய்வு – மொ.ர்) (திறனாய்வு முன்னுரை எழுதப்பட்ட ழாக் தெரிதாவின் தே லா க்ராம்மட்டாலஜி எனும் நூலின் மொழிபெயர்ப்பு) , இமாஜினரி மேப்ஸ் மற்றும் ப்ரெஸ்ட் ஸ்டோரீஸ் (புனைவு வரைபடங்கள் மற்றும் மார்புக் கதைகள் – மொ.ர்) (மஹா ஸ்வேத்தா தேவியின் புனைவுகளை விமர்சனப் பொருளோடு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு), இன் அதர் வேர்ட்ஸ் (வேறு வார்த்தைகளில் – மொ.ர்), தி போஸ்ட்-கொலோனியல் க்ரிட்டிக் (பின் காலனித்துவ விமர்சனம் – மொ.ர்) மற்றும் அவுட்சைட் இன் த டீச்சிங்க் மெஷின் (கற்பித்தல் இயந்திரத்திற்கு உள்ளே – வெளியே – மொ.ர்)

கலைத் துறையில் அவரது வழக்கமான குறுக்கீடுகள், டவுன்டவுன் விட்னேயில் தன்னாட்சி ஆய்வு நிகழ்வில் வருடாந்திர கருத்தரங்காக இடம்பெற்றது. 1996-7 இல் பேராசிரியர் ஸ்பைவாக், ஒசாக்கா பல்கலைக்கழக மாநாடு, க்ராஜில் உள்ள ஹெர்ப்ஸ்ட் ஸ்டைரீஷே (ஆஸ்த்ரியா), லான்செஸ்டர் பல்கலைக்கழகம் நடத்திய (ஐக்கிய நாடு) பெண்ணியத்தின் வழியாக தன்மை மாற்றம் பற்றிய மாநாடு, டாக்குமெண்டா எக்ஸ் (ஜெர்மனி), ஜொஹான்னஸ்பர்க், க்வாங்குவில் இரண்டாண்டுக்கொருமுறை (biennales) கூட்டப்படும் மாநாடு ஆகியவற்றில் மொழியியல் கலாச்சாரம் குறித்துத் தலைமையுரை ஆற்றியிருக்கிறார். 1997 டிசம்பரில், மேரி லெவ்லின் கோல்ட் ஷ்மிட்-பொல்லாக் நிணைவுரையில் அகதிகள் மற்றும் குடியேற்றக் கொள்கை (Flüchtlinge-und-Migrationspolitik) பற்றிய உத்தேச தொடருரையாகளை ஆற்றினார்.

ஒரு சர்வதேசிய மாக்சியப் பெண்ணியவாதியாக, வாய்மொழி, காட்சிமொழி மற்றும் சமூகப் பிரதிகளில் உரைசார் கட்டுடைப்பு ஆய்வு செய்யும் அறிஞராக இருப்பதோடு அவர், பெருநகர அடையாள அரசியலின் மனசாட்சியாக இருப்பதாகவும் பெருவாரியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்.  1998 இல் ஹார்வார்ட் பதிப்பகம் என்னை பின்காலனியத்துவம் என்றழைக்காதீர்கள்: கண்ட் முதல் க்வாக்குபோ வரை எனும் அவரது புத்தகத்தை வெளியிட்டது. அத்தோடு அடையாளம் பற்றிய கட்டுரைகளைக் கொண்ட ஒரு நீண்ட புத்தகம் தயார் நிலையில் உள்ளது, கடுமையான பணிகள் நிறைவுற்ற பின்னர் அது விரைவில் வெளியிடப்படும். தாய்மொழியான வங்காள மொழியிலும் உரைகள் ஆற்றுகிறார், பதிப்பிக்கிறார். மஹாஸ்வேத்தா தேவியின் தேர்ந்தெடுத்த படைப்புகளை மொழிபெயர்த்து காத்திரமான பதிப்பாக வெளியிடுவது அவரது எண்ணற்ற திட்டங்களில், முக்கியமானதொரு திட்டமாகும். 

(குறளி ஜூன் மாத (முதல்) இதழில் வெளிவந்துள்ள கட்டுரை)

                   http://www.cddc.vt.edu/feminism/Spivak.html

மொழிபெயர்ப்பில் பிழை திருத்தங்கள் உதவி: கவிதா.